(Reading time: 19 - 37 minutes)

ப்படியே அரண்டு போய் இருக்கையை விட்டு எழுந்த அதிவீரன் ஹா..ஹா..இதென்ன கொடுமை..இதென்ன கொடுமை..விமலாதித்தன் கொலை செய்யப்பட்டாரா..?இக்கொடுஞ்செயலை செய்தது யார்?ஐயோ..நான் என்ன செய்வேன்..இது எப்படி நிகழந்தது?சோழ மன்னனுக்கு இவ்விஷயத்தை எப்படித் தெரிவிப்பேன்?உன் மகன் கொலையுண்டு இறந்தான் என எப்படிச் சொல்வேன்?என் மகள் மதிவதனிக்கும் தங்கள் மகன் விமலாதித்தனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் நாளைக் குறித்த பின் தங்களைச் சந்திக்க நேரில் வருவதாய்த் தெரிவித்து சோழ மன்னருக்கு ஓலை அனுப்ப எண்ணி யிருந்த நேரத்தில் இப்படியொரு நடக்கக் கூடாத சம்பவம் நடந்து விட்டதே..?தன் மகன் பாண்டியனாட்டில் கொலைசெய்யப்பட்டான் என்று அறிந்து சோழன் எப்படி தவிப்பான்?மகனை இழந்த சோழ மன்னன் என்ன முடிவு எடுப்பான்.பொங்கியெழ மாட்டானா?

பெருஞ்சினங்கொண்டு பாண்டிய நாட்டின் மீது படையெடுத்து வரமாட்டானா..?இனி பாண்டிய நாட்டுக்கு என்னென்ன கேடு விளையப் போகிறதோ?நான் என்ன செய்வேன்?நான் என்ன செய்வேன்?அடப்பாவி.. இக்கொடுஞ்செயலைச் செய்த நீ யாரடா?உனக்கு என்ன தைரியம்?இப்பாண்டிய நாட்டின் இளவரசியை மணப்பதற்கிருந்த சோழ இளவரசனை பாண்டிய நாட்டின் வருங்கால மருமகனைக் கொல்லும் துணிவு கொண்டவன் யார்?யார் அவன்? யார் அவன்?இத்தோடு முடிந்ததடா உன் கதை..இதொ.. இதோ இந்த வாளுக்கு நீ இரையாவது திண்ணமடா..பைத்தியம் பிடித்தவர் போல் கத்தும் மன்னர் அதிவீரனை ஆறுதல் படுத்தவும் இயலாமல் அதிர்ந்துபோய் நின்றிருந்தனர் அங்கிருந்த அனைவரும்.இடி போன்ற செய்தியால் செய்வதறியாது நின்றார்கள் அவர்கள்.

மன்னா..இன்னொன்றையும் கண்டோம் அவ்விடத்தில்..

என்ன கண்டீர்கள்?.இன்னும் என்ன மிச்சம் இருக்கிறது?அதையும் சொல்லிவிடுங்கள்..பாண்டிய நாடு இன்னும் எவற்றையெல்லாம் சந்திக்கப் போகிறது?..

மன்னா..சோழ இளவரசர் கொலையுண்டு கிடக்கும் இடத்தில்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

இடத்தில்..ஏன் நிறுத்திவிட்டீர்கள் சொல்லுங்கள்..

மதம் பிடித்த யானையை அடக்கிய வாலிபர் மயங்கிய நிலையில் கிடப்பதையும் அவருக்கும் வெட்டுக் காயங்கள் உள்ளதையும் அவரின் கையில் குருதி படிந்த வாள் ஒன்று உள்ளதையும் கண்டோம் மன்னா..

என்ன என்ன..என்ன சொன்னாய்..மத யானையை அடக்கிய வாலிபன் மயங்கிய நிலையில் அங்கே கிடக்கிறானா? அடப்பாவி..அடப்பாவி..கொலைகாரா..நீதான் இக்கொடுஞ்செயலைச் செய்தவனா?குப்த ராஜ்ஜியத்தின் இளவரசன் எனச் சொல்லிக்கொண்டு வந்தாயே..சோழ இளவரசரைக் கொல்வதற்காகவா வந்தாய்?உண்மையில் நீ யார்?உனக்கும் சோழ இளவரசனுக்கும் என்ன பகை?பகையைத் தீர்த்துக்கொள்ள இங்கு வந்தாயா?உனக்கு பழிதீர்த்துக்கொள்ள என் நாடுதான் கிடத்ததா?அல்லது போட்டிகளில் பங்கு கொள்ள உனக்கு அனுமதி தரப்படவில்லை என்ற கோபத்தில் வெற்றியாளன் சோழ இளவரசனைக் கொன்று விட்டாயா?அடேய்..உன்னை என்ன செய்கிறேன் பார்..இதோ இந்த வாளால் உன்னை எமனுலகம் அனுப்புவேனடா..?ஐயோ என் மகளுக்கு இத்துன்பமான செய்தியை எப்படிச் சொல்லுவேன்..?திருமணப்பேச்சை எடுக்கும் வேளையிலேயே இத்தகு அமங்கலம் ஏற்பட்டுவிட்டதே?என் மகளின் வாழ்க்கை என்னாகும்?...சோழன் என்ன முடிவு எடுப்பான்..எத்தகு பிரர்ச்சனைகள் இந்த பாண்டிய நாட்டுக்கு ஏற்படக் காத்திருக்கிறதோ?எனப் பலவாறு புலம்பிய மன்னர் அதிவீரனை..

மன்னா..கொஞ்சம் அமைதி அடையுங்கள்..எது நடக்குமோ அது நடந்தே தீரும்...நடக்கக் கூடாதது நடந்து விட்டது.இனி நடக்கவேண்டியதை பார்த்துதான் ஆகவேண்டும்..இங்கேயே இருந்து புலம்பி அழுவதில் பயனில்லை.துக்கம் நடந்த இடம் சென்றால்தான் நடந்த உண்மைகளை அறிய முடியும்..அகவே வாருங்கள் மன்னா..அவ்விடம் செல்வோம்..

மந்திரிகளும் தளபதியும் உடன் வர விமலாதித்தன் கொலையுண்ட இடம் நோக்கி மன்னன் அதிவீரன் குதிரையில் புறப்பட்டான்.

டியில் படுத்திருக்கும் மகன் இளவரசன் சுந்தரபாண்டியனின் தலையைக்கோதியபடி சுந்தரா நான் அக்காவைப பார்க்கப் போகிறேன்..காலையிலிருந்து மதியை சந்திக்கவே இல்லை..நீ உறங்குவதென்றால் உறங்கு நான் சென்று உன் அக்காவைப் பார்த்துவிட்டு வருகிறேன்.அக்காவுக்கு திருமணம் வந்துவிட்டதல்லவா?அவள் நம்மோடு இன்னும் எத்தனை நாட்கள் இருக்கப்போகிறாள்?இனி ஒவ்வொரு நொடியும் அவளோடே இருக்கப்போகிறேன்.

தாயே நானும் அக்காவைக் காண வருகிறேன் ..

வேண்டாம் கண்ணே உன் கண்களில் உறக்கம் தெரிகிறது.நீ இப்போது உறங்கு..மாலையில் அக்காவைச் சென்று காணலாம்.

சரி..தாயே நீங்கள் சென்றுவாருங்கள்....நான் மாலை அக்காவைச் சென்று பார்த்து அவரோடு விளையாடுவேன்...இப்போது உறங்கப்போகிறேன்...

மகன் சுந்தர பாண்டியனைப் படுக்கவைத்துவிட்டு ராணி ருக்மா தேவி மதிவதனியைக் காண கிளம்ப எத்தனிக்கையில்..மகா ராணி...மகா ராணி..கத்திக்கொண்டே ஓடி வந்தார்கள் இரு சேடிப் பெண்கள்..

ஏனடி இப்படி கத்திக்கொண்டே ஓடி வருகிறீர்கள்..?உங்களைப் புலி கிலி துரத்துகிறதா என்ன..?

மன்னிக்க வேண்டும் மகாராணி விபரீதம் நிகழ்ந்துவிட்டது மகாராணி...

என்ன விபரீதம் நிகழ்ந்துவிட்டது ஏனிப்படி பத்தட்டமாய்க் காணப்படுகிறீர்கள்?..

மகாராணி..எப்படிச் சொல்வோம் அதை..?பெரும் விபரீதம் நடந்து விட்டது..

மகாராணி ருக்மாவுக்குக் கொஞ்சம் கவ்லை எட்டிப்பார்த்தது மனதில்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.