(Reading time: 15 - 29 minutes)

'ல்லாம் ரெடியா இருக்குங்க, இந்தா, புடவையை கட்டிக் கொண்டு வா,' என்றார் சிவகாமி,

'இதெல்லாம் எதுக்கு பாட்டி, என்று கேட்டாள், சித்ரா,

'அதெல்லாம் கேட்கக் கூடாது, போ,' என்றார்

'போ நீயும், பட்டு வேஷ்டி கட்டிக் கொண்டு வா,' என்றார் ருத்ராவும் அவளோடு போனான்

'என்னங்க நடக்குது,' என்று கேட்டாள், ' நானும் உன்னோட தானே இருக்கேன் எனக்கு எப்படி தெரியும்,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'அவள் புடவை மாற்றிக் கொண்டு வந்தாள், அங்கு ஏற்கனவே ருத்ரா பட்டு வேஷ்டியும், பட்டு ஷர்ட்டும், பார்க்க படு ஸ்மார்டாய், அவள் தன்னை மறந்து அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், கற்பகம் அவள் அருகில் வந்து ஒரு வைர நெக்லசை போட்டுவிட்டாள், அப்போது வித்யா செந்தில், சிதம்பரம், அவர் மனைவி, வனிதா சிவகுமார், எல்லோரும் உள்ளே வந்தனர்,,

அவளை பார்த்தவுடன், வித்யா ஓடி வந்து கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டாள், ‘நீங்க இல்லாமல் எங்க அண்ணன் எவ்வளவு வேதனை அடைந்தார் தெரியுமா, ரொம்ப சந்தோஷம் அண்ணி உங்களை மறுபடியும் பார்த்ததுல  ,' அதற்குள் வனிதா ‘அண்ணி எப்படி இருக்கீங்க, இந்த சாரீல நீங்க சூப்பர்,'என்றாள்

சித்ரா, ‘நீங்க எப்படி இருங்கீங்க, வித்யா, வனிதா,'

'நாங்க நல்லாயிருக்கோம் அண்ணி,'

அதற்குள் சிவகாமி 'அப்புறம் பேசலாம் வாங்க,' என்று கூப்பிட்டார்

சித்ராவும், ருத்ராவும், ஒன்றாக நின்றார்கள்

'ஒரு நிமிஷம், ரூப்புக்கு பசிக்கும், அவனுக்கு ஏதாவது குடுக்கணும் என்றாள், இதுதான் அம்மா பாசம்ங்றது, நான் போடறேன் முதல்ல இதை முடிச்சுடலாம், அவனுக்கு பிஸ்கட் கொடுக்கலாமா கொஞ்சம் பசியாறும்,’ என்றாள் கற்பகம்,

'இல்லை சாப்பிடற நேரத்தில் வேண்டாம் என்று, ரூப் தண்ணி குடி கொஞ்சம் ஒரு டென் மினிட்ஸ்ல சாப்பிடலாம்’ என்றாள்

'ஓகே மாம்,' என்றான் சிறுவன் “ஒரு கிளாஸ் வாட்டர்’ என்று கேட்டு வாங்கி குடித்தான்

'வித்யா அவனைப் பார்த்து ஆச்சர்யப் பட்டாள், அண்ணனுடைய சின்ன வயது போட்டோவில் இதே மாதிரி தான் இருப்பான், என்ன ஆச்சர்யம், ஸோ, அப்பவே எல்லாம் முடிந்ததா, ஐயோ, நம்பவே முடியவில்லை, அதான் அண்ணா அவளுக்காக அப்படி உருகி, அவளுக்காக காத்திருந்தார், ஹ்ம்ம்.

அவள், தன், மருமகனை பார்த்து 'டேய் சுட்டிப் பையா, உன் பேரென்ன,' என்று கேட்டாள்

'ஐ அம் ரூபேஷ் நீலகண்டன், மை மாம் இஸ் சித்ரா நீலகண்டன்,' என்றான் பெருமையுடன்  

'ஓ, ஐ ஸீ, வாட் இஸ் யுவர் பாதெர்ஸ் நேம், என்று கேட்டாள் வித்யா

சிறுவனும் சளைக்காமல் 'ருத்ரா நீலகண்டன், என்றான்

'மே ஐ நோ ஹூ யு ஆர்,' என்று கேட்டான் ரூபேஷ்

அவள் சிரித்துக் கொண்டே 'ஐ அம் வித்யா செந்தில்,' என்றாள்

'யு மீன் மை வித்யா அத்தை,' என்றான்

அவள் அப்படியே இழுத்து அனைத்துக் கொண்டு ‘என் கண்மணியே, உனக்கு என்னை தெரியுமா?’ என்றாள்

'ஹ்ம்ம், அம்மா எல்லோரையும் பற்றி சொல்லியிருக்கா, உங்க எல்லோரையும் நினைத்து அழுவா, எங்க அப்பா உங்களை விது என்று கூபிடுவாராமே, அம்மாவும் அப்படித்தான், என் கிட்டே சொல்லுவா, ‘என்றான் சிறுவன், அவனை அனைத்து முத்தம் கொடுத்தாள் வித்யா, அவள் கண்கள் ஈரமாயின,

'அதற்குள் கற்பகம், விது இங்கே வா,'என்று கூப்பிடவும் அவனையும் கையோடு கூட்டிப் போனாள்

அவன் தன் அம்மாவிடம் சென்று நின்றுக் கொண்டான், அவள் அவன் தலையை தடவி அவனைப் பார்த்து சிரித்தாள், 'மாம், விது அத்தை,' என்றான் அவள் 'ஆமாம்,' என்றாள்

சிவகாமி பாட்டி, தாத்தா இருவரும் தட்டிலிருக்கும் தாலியை ருத்ராவிடம் கொடுத்து ‘கட்டு கண்ணா’ என்று பேரனிடம் கொடுத்தார்கள், அவன் சித்ராவிடம் கண்ணால் ஜாடை காட்டினான், காலில் விழுந்து, இருவரும் ஆசி வாங்கிக் கொண்டார்கள், தாத்தாவைக் கட்டிக் கொண்டு கண்ணீர் விட்டான், ருத்ரா, நான் பெங்களூர் போகும்போது நினைத்துக் கூட பார்கலை நான் இவளை பார்ப்பேனென்று, இது சாத்தியம், நடக்கும் என்று நினைக்கலை , சித்ராவும், அவனை அனைத்துக் கொண்டு ‘சாரிங்க, நான் உங்களை எவ்வளவு தவிக்க விட்டேன்,’ என்று அவன் காலில் விழுந்து அவன் பாதத்தை தொட்டு தன் கண்ணீரால் நனைத்தாள், அவன் அவளைத் தூக்கி நிருத்தி ‘என்ன பண்றே நீ, பயித்தியம், நீயும் தானே, என்னை நினைச்சு வேதனை பட்டே,' என்று அவளை அனைத்து முத்தம் கொடுத்தான் வகிட்டில், எல்லோரும் பார்க்கிறார்களே என்று கூட யோசிக்கவில்லை, அவள்தான் தன்னை சரி செய்துக் கொண்டு, ரூபேஷை பார்த்தாள்

'மாம், நாம நம்ம ஊருக்குப் போகலாம், கிளம்பு,'

'ஏன் ரூப்,'

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.