(Reading time: 15 - 29 minutes)

'யு ஆர் க்ரையிங் சின்ஸ் வி கேம்  இயர், அதான், நாம் போகலாம், அங்கே போனா நீ அழமாட்டே இல்ல,'

'இங்கேயும் அழமாட்டேன் கண்ணா, ரொம்ப நாள் கழிச்சு எல்லோரையும் பார்க்கிறேன் இல்ல அதான், இங்க எவ்வளவு பேர் நமக்கு பார்,’ என்று கூறி நிமிர்ந்தாள்

ருத்ரா, சித்த்ராவுக்கு தாலி கட்டினான், கூட இருந்த வித்யா ஒரு முடி போட்டு அண்ணனுக்கும், அண்ணிக்கும், முத்தம் கொடுத்தாள் குனிந்து அண்ணன் மகனுக்கும் முத்தம் கொடுத்தாள்,

ருத்ராவும், சித்ராக்கு முத்தம் கொடுத்தான், அவளுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது, ‘டாட் எனக்கு,’ என்றான், அவனுடைய மகன், அவனை இழுத்து அனைத்து முத்தமாரி பொழிந்தான், கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது, ‘மை சன்,’ என்று அவன் கன்னத்தில் தன் கன்னத்தை பதித்துக்  கொண்டான்.அவனையும் சித்ராவையும் கட்டிக் கொண்டே எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்க போனான், அவனுடைய அப்பா அவனையும் சித்ராவையும் கட்டிக் கொண்டார்,' ரொம்ப தேங்க்ஸ் மா, நீ வந்து என் மகனை வாழ வைத்ததுக்கு,' என்றார், மகனை அனைத்து முத்தம் கொடுத்தார், பேரனை அனைத்துக் கொண்டார்,’என் செல்லமே, என் கண்ணே, என் குலகொழுந்தே’ என்று கொஞ்சினார்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

'ஆண்டி, ரூப்புக்கு பசிக்கும் ரொம்ப டைம் ஆயிடுத்து அவனுக்கு, சாப்பாடு,'

‘இதோ, அவனுக்கு என்ன கொடுப்பே நீ,' என்றாள் கற்பகம்

'சாதம்தான், ரூப் கம்,’ என்று டேபிளில் அவனுக்கு தட்டு போட்டாள்,

'இன்னிக்கு அம்மா உன்னோட சாப்பிடமாட்டேன், பெரியவங்க சாப்பிடச்சேதான் நான் சாப்பிடுவேன் சரியா,' என்று மெதுவாக அவனுக்கு மட்டும் கேக்குற அளவு அவள் சொன்னாள்,

'மாம், நானும் அவங்க கூட சாப்பிடறேன்,'

'நோ உனக்கு பசிக்கும் நீ சாப்பிடு,'

'சரி' என்றான்

'நான் போடறேனே, நீ போய் ருத்ராவுடன் இரு,’ என்றாள் கற்பகம்,

‘இல்லை ஆண்டி அவனுக்கு என்ன பிடிக்கும்னு உங்களுக்குத் தெரியாது இல்லையா, அதான்…. ஆனா, உங்க மகனுக்கு பிடிச்சதெல்லாம் இவனுக்கும் பிடிக்கும்,’ என்று வெட்கப் பட்டுக்கொண்டே சொன்னாள்

'அவ்வளவுதானே,'

ருத்ரா, சித்ராவை பார்க்கவும், ‘ரூப் நீ சாபிடரியா, நான் அங்கே போய் இருக்கேன்,'

'ம், சரி பட் நான் ஹாண்ட் வாஷ் பண்ணனும்,' என்றான்

அவனை பாத்ரூமுக்கு கூட்டிக் கொண்டு போனாள், அவன் வாஷ் பண்ணிக் கொண்டு, டேபிளில் வந்து உட்கார்ந்தான், அப்போது ருத்ரா அங்கே வந்தான் அவனும் ஒரு சேரில் உட்கார்ந்தான், டாட் நீங்களும் சாப்பிடறீங்களா,' சித்ராவை நிமிர்ந்து பார்த்தான் ருத்ரா,

'ரூப், அம்மா சொன்னேன் இல்லே, நாங்க பெரியவங்க கூட சாப்பிடுவோம்,'

'அம்மா, எல்லோருக்கும் போடுங்க எல்லோரும் சாப்பிடறோம், தாத்தாவும் வந்தார், ஆமாம் நானும் என் கொள்ளுப் பேரனுடன் சாப்பிடுகிறேன், என்றார், ஒவ்வொருவராக உட்கார்ந்தார்கள், நீயும் உட்கார் சித்ரா, என்றார் தாத்தா,

'இல்லை நான் ஆண்டி கூட ஹெல்ப் பண்ணிட்டு அவங்களோடு சாப்பிடுகிறேன்,'

'அதெல்லாம் இல்லை இப்ப தம்பதியாய் உட்காரனும், உட்கார்,’ என்று அவர் சொல்லவும் ருத்ரா அவள் கையை பிடித்து இழுத்து 'உட்கார்' என்றான், அவளும் அவன் பக்கத்தில் உட்கார்ந்தாள், அப்பவும் அவள் கையை விடவில்லை, 'தேங்க்ஸ் டாட்,' என்றான் மகன்

'எதுக்கு,' என்றான் ருத்ரா

'மாம் இல்லாம, நான் சாப்பிட்டதே இல்லை, மாம், நான் பெரியவங்க கூட சாப்பிடறேன் நீ தனியா சாப்பிடு என்றாள், இப்போ நீங்க சொன்னவுடன் உட்கார்ந்தாள், இப்போ என்னோட சாப்பிடுவா இல்ல, எஸ் மாம்?,' என்று கேட்டான்

தன் மகன் தலையில் முத்தம் கொடுத்து, தான் எழுந்து, சித்ராவை, தன் மகன் பக்கத்தில் உட்கார சொன்னான், அவள் ‘ஏன் நீங்க உட்காருங்க,' ‘இல்லை அவன் உன்னை மிஸ் பண்றான், அதனால் நீ அவன் பக்கத்தில் உட்கார்,' என்றான் ருத்ரா,

சித்ரா தன் மகன் பக்கத்தில் உட்கார்ந்தாள், எல்லோருக்கும் சாப்பாடு தட்டில் போட்டவுடன் ' “அன்னபூர்னே  சதபூர்னே  சங்கரர்  பிராண  வல்லப்பே ஞான  வைராக்ய  சித்யர்த்தம்  பிக்ஷன்தேஹிச்ச பார்வதி”, என்று கண்ணை மூடிக் கொண்டு சித்ராவும் அவள் மகனும் சொல்ல, எல்லோரும் நிசப்தமாக அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தனர், தாத்தாவுக்கு கண்கள் கலங்கின சந்தோஷத்தில், எல்லோரும் காத்திருந்தனர், அவர்கள் முடித்தவுடன் மற்றவர்கள் சாப்பிட ஆரம்பிக்க, சாப்பிடு கண்ணா ஏதாவது வேணுமா என்று கேட்டார் கற்பகம் 'இல்லை பாட்டி அவங்கள்ளெல்லாம் ஆரம்பித்தவுடன்தான் நான் ஆரம்பிப்பேன், என்றான் பேரன்

அவளுக்கு சந்தோஷம் தாங்க வில்லை, எல்லோரும் ஆரம்பித்தார்கள், அவனுக்கு எவ்வளவு வேண்டுமென்று அளவு சொன்னாள் சித்ரா, 'என்னம்மா வளருகிற பிள்ளை இன்னும் கொஞ்சம் சாப்பிடட்டுமே, என்றாள் கற்பகம்

‘இல்லை ஆண்டி அவனுக்கு இவ்வளவுதான் இப்போது,’ என்றாள் சித்ரா

ருத்ராவும், 'அம்மா சித்ராக்கு தெரியும்மா ப்ளீஸ்,' என்றான்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.