(Reading time: 15 - 29 minutes)

19. என் மனதை தொட்டு போனவளே - VJ G

en manathai thottu ponavale

'நீங்க, நம்ம ரூப் கூட்டிட்டு போங்க, ப்ளீஸ், நீங்க வரப்போ அவனை கூட்டிட்டு வாங்க, எவ்வளவு நாள் வேணுமோ அவனை வைத்துக் கொள்ளுங்கள்,' என்றாள், கொஞ்சம் வேதனையுடன்,

'ஏய், நீ என் கோபத்தை கிளப்பற, நீ இல்லாமல் எப்படிடா, தாத்தா ரொம்ப நொடிஞ்சுட்டார், நீ வா நாம பார்த்துட்டு திரும்பி வருவோம், அப்புறம் முடிவு பண்ணலாம் மத்ததை பத்தி,'என்ன சொல்றே, என்று கேட்டான் ருத்ரா அவள் தோள் மேல் கையை போட்டுக் கொண்டு, அவளை தன்னுடன் அனைத்துக் கொண்டான்,

அவள் மெதுவாக, 'நான் எப்படி அங்கே, உங்க மனைவி இருக்கும் போது, அவங்களுக்கு எதிரே எப்படி, என்ன உரிமையில், நான் வருவது, ' என்று கேட்டாள்

'என் மனைவி......,மனைவி இருந்தால் என்ன, நீ வா அவளை பார்த்து நீயே பிரமித்துப் போவாய், அவ்வளவு நல்லவள். நீ வந்து பாரேன் அவளை, அப்புறம் பேசு,'

நாளைக்கு நாம் போறோம் அவ்வளவுதான், உன் ஹோட்டலுக்கு ராகவேந்த்ராவை ஒரு வாரம் பார்த்துக் கொள்ளச் சொல் அதுக்குள்ளே வந்து விடலாம்,'

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

மீராவின் "கிருஷ்ணசகி" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'ஒரு வாரமா, ஐயோ என்னால் ஹோட்டலை அப்படியெல்லாம் விட்டு விட்டு வர முடியாது,பேங்க் வேலையெல்லாம் நான்தான் பார்க்கணும், என்னால் ரெண்டு நாள் இருப்பதே பெரிய விஷயம், என்னால் முடியாது,’ என்றாள் சித்ரா

'சரி ரெண்டு நாள்ல வந்து விடலாம், வா,

போன் செய்தாள், கன்னடத்தில் பேச ஆரம்பித்தாள் 'சரோஜ், மனிச்சுக்கோ, ரொம்ப லேட்டாக போன் பண்ணதுக்கு, எனக்கு ஒரு ஹெல்ப் வேனும்... இல்ல ரூப் நன்றாக இருக்கான்…. அவனைப் பத்தி இல்லை, ரூபோட, நான் கொஞ்சம் சென்னை போக வேண்டியிருக்கிறது, முக்கியமான வேலை, எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ வந்து விடுவேன், நீ கொஞ்சம் ஹோட்டலை பார்த்துக்கிறாயா? தேங்க்ஸ் சரோஜ், நான் வரும் வரை ஹோட்டல்ல வர காஷை வைத்து மேனேஜ் செய்துக்கோ, உன் ஹெல்பை மறக்க மாட்டேன், தேங்க்ஸ் அகைன், ஆமாம் நாளை காலை ஹோட்டல்ல போய் ராகவேந்தரிடம், சொல்லிட்டு போறேன், ஆமாம் அப்புறம் சரோ, யு ர் மை க்ளோஸ் ப்ரண்ட் ,அதனால் சொல்றேன்    ரூப்போட டாட் வந்திருக்கார், அவரோடுதான் எங்க பாமிலியை பார்க்க போறோம்,

'வர ரொம்ப நாள் ஆகுமா,'

இல்லை, சீக்கிரமாக வந்து விடுவோம்,

அவரும் வருவாரா உங்களோடு, ஏனென்றால், அவர் பாமிலியை பார்க்க போறீங்களே அதனால் கேட்டேன்,'

'அவரோடுதான், எஸ் அவரும் வருவார் எங்களோடு,’

'அவர் உங்களோடு கொஞ்சநாள் இருப்பாரா,'

'அது இன்னும் நாங்கள் பேசவில்லை, அவர் எங்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க திடீர்னு கிளம்பி வந்து விட்டார், அதனால் இனிமேல் தான் பேசணும் அதற்கு முன் நாங்கள் எங்க பாமிலியை பார்க்க போகலாம்னு இருக்கோம், சரி சரோஜ், நான் வந்தவுடன் டீடைல்ல பேசலாம், குட் நைட்,' என்று போனை வைத்து விட்டாள்,

அவளை தன் கிட்டே வரச் சொன்னான், 'யு ஸ்வீட் கேர்ள், ஐ லவ் யு,' என்று அவள் நெற்றியில் முத்தம் கொடுத்தான்,

'வா படு, காலைல பேசிக்கலாம், யு மஸ்ட் பி டயர்ட், வா ' என்று அவளை இழுத்துக் கட்டிக் கொண்டான், மறுபடியும் அவளோடு இழைந்தான், அவளை அனுபவித்தான், அவளைக் கட்டிக் கொண்டு தூங்கினான்,

விடிகாலையில் அவளுக்கு வழக்கம் போல் ஐந்தரைக்கு தூக்கம் போய் விட்டது கண் விழித்து குளித்து நல்ல புடவையைக் கட்டிக் கொண்டு வெளியே வந்தாள்,

அவள் மகன் ரூபெஷும் வெளியே வந்தான், அவனும் இவளும் நேரே சுவாமி ரூமுக்கு போனார்கள், அங்கே சித்ரா விளக்கேத்த, மகன் பூஜை செய்ய, அங்கு வந்து நின்று கொண்டிருந்த ருத்ராவுக்கு கண்ணில் நீர் வந்தது, என்ன அருமையாக அவர்களுடைய புரிதல், என்ன அருமையாக வளர்க்கிறாள், என்று பெருமிதம் கொண்டான், அவன் போய் வேகமாக குளித்துவிட்டு வந்தான், மகன், சித்ரா இரண்டு பேரும் த்யானத்தில் இருந்தார்கள் அவர்களை டிஸ்டர்ப் பண்ணாமல் உள்ளே போய் பாலைக் காய்ச்சி, அவனுக்கும் சித்ராவுக்கும், காபியை போட்டு, பாலை மூடி விட்டு வந்தான் அங்கே சித்ரா வந்தாள் 'என்ன பண்றீங்க,இங்கே,'

'என் செல்லத்துக்கு காபி போடறேன்,'

'ஓஹ், சாரி நான் சொல்ல மறந்து விட்டேன், நான் காலைல காபி சாப்பிடுவதில்லை, ரூப்பும் அப்படித்தான், கொஞ்ச நேரத்தில் அவனுக்கு கஞ்சி கொடுப்பேன், இப்போது வெறும் வாட்டர் டூ க்லாசெஸ், எனிவே, இன்னிக்கு நீங்க எனக்கு ஆசையா போட்டதுனாலே நான் குடிக்கிறேன்,' என்றாள்  

அவன் அவளை அப்படியே பார்த்திருந்தான், நீங்க குளிச்சாச்சா, அப்படின்னா போய் சாமி கும்முடிட்டு வந்திடுங்க, ப்ளீஸ், நம்ம பையன் எதிரே நம்ம பண்ணா அவனும் அதை பின்பற்றுவான் ப்ளீஸ், ' என்றாள்

அவன் காபியை வைத்து விட்டு சாமி ரூமுக்குப் போய் கும்முட்டு வந்தான் 'தேங்க்ஸ், என்னை தப்பா நினைக்காதீங்க, அப்புறம் அவன் ஆயிரம் கேள்வி கேட்பான் ஏன் நீங்கள் ப்ரே பண்ணலேன்னு,' என்றாள் அவள்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.