(Reading time: 15 - 29 minutes)

'யு ஆர் வெல்கம் ரூப், தேங்க்ஸ் பார் யுவர் காம்ப்ளிமென்ட்,'

'வாவ், என்ன இது அம்மாவும் பிள்ளையும் வெறும் பிசினெஸ் லைக்கா இருக்கு உங்க பேச்செல்லாம்,'

'ப்ளீஸ் அங்கே போனாலும் லெட் திஸ் கண்டின்யு, கொஞ்சம் சொல்கிறீர்களா,' அவன் ஒன்னும் பேசவில்லை

பின்னாடி, ரூபேஷ், படித்து முடித்தவுடன், தன்னுடைய கேம்சோடு விளையாடினான், பிறகு போர் அடித்தது

'மாம் கேன் ஐ கோ டு ஸ்லீப், ஐ அம் ஸ்லீபி,' என்றான் மகன் தூக்கக் கண்களுடன்,

'இந்தா இந்த கஞ்சியை குடித்து விட்டு தூங்கு,’ என்று ருத்ராவை பார்த்தாள்

'அவன் பின்னாடி பார்த்து, காரை ஓரமாய் நிறுத்தினான், அவனே இறங்கி, எங்கே இருக்கு சொல்,' என்று கேட்டான்

'ஒரு ஒயர் பாகில் ப்ளாஸ்க் இருக்கு பாருங்க, அதில் இருக்கு,' என்றாள்,

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

ஜோஷினியின் "ஹேய்... சண்டக்காரா" - இது ஒரு காதல் சடுகுடு...

படிக்க தவறாதீர்கள்...

அவள் சொன்ன மாதிரி ஒரு பாகில் ப்லாஸ்கும், அதனுள்ளேயே ஒரு டம்ளர் வைத்திருந்தாள், அது தவிர கொஞ்சம் பிஸ்கட்ஸ், அதையும் எடுத்து வந்தான் அதோடு ஒரு சின்ன டவல், எல்லாத்தையும் எடுத்து வந்தான், அவள் பின் சீட்டுக்கு போய் அதைக் கொடுத்தாள், ரூபெஷும், அழகாக அதை வாங்கி டவல தன் மேலே போட்டுக் கொண்டு குடித்தான், கூடவே கொஞ்சம் தண்ணியையும் கொடுத்தாள், ' மாம் ஐ அம் புல்,' என்றான்

'இப்போ தூங்கு,' என்றாள் சித்ரா

ருத்ராவுக்கு அதிசயமாக இருந்தது, தனக்கு ஒரு குழந்தை, தன் மனைவி அதை கவனிக்கும் விதம் வாவ், நம்பவே முடியவில்லை,

சித்ரா அவனை படுக்கச் சொல்லி, ருத்ராவின் காரில் பின்னிருந்த திண்டை எல்லாம் எடுத்து குழந்தை விழாமல் இருக்க கீழே போட்டாள், தன் சீட்டையும் பின்னே தள்ளினாள், சாரி அந்த திண்டை எல்லாம் கீழே போட்டுவிட்டேன், அவன் விழப் போறானே என்ற பயம்,'

அவன் கோவத்தில் ஸ்பீட் எடுத்தான், அவளுக்கு என்ன பேசுவது என்று தெரியவில்லை, ஏன் கோவம் என்றும் தெரியவில்லை

'என்னங்க, ஏன் கோவம், ஏன் இந்த ஸ்பீட்,' என்று கேட்டாள்

'சித்து, என் பொறுமைக்கும் ஒரு எல்லை இருக்கு தெரிஞ்சுக்கோ, ரொம்ப வருஷம் கழித்து பார்த்திருக்கோம்னு வாயை மூடிட்டிருக்கேன், அவன் எனக்கும் பிள்ளை ஞாபகம் இருக்கா, என்ன சாரி எல்லாம் கேட்கிற, உனக்கு இருக்கிற, உரிமை, ஆசை, பாசம், அக்கறை, எல்லாம் எங்களுக்கும் இருக்கும்,’ என்று கோவத்துடன் சொன்னான்

'சாரிங்க உங்களை நான் ஹர்ட் பண்ணியிருந்தா ப்ளீஸ், நீங்க சொன்ன மாதிரி நாம் ரொம்ப வருஷத்துக்குப் பிறகு சந்திச்சிருக்கோம் என்னிடம் கோவப் படாதீங்க ப்ளீஸ்,' என்றாள், அவன் சாந்தமாகி விட்டான்,

அவள் சிறிது நேரத்திற்கு பிறகு, ' உங்களுக்கு குழந்தை இருக்கா, என்று கேட்டாள் அவனுக்கு எரிச்சலாய் வந்தது

'ம்ம்,' என்றான்

'பையனா, பெண்ணா,' என்று கேட்டாள்

'பையன்,' என்று சொன்னான்

'பேர் என்ன,' என்று கேட்டான்

'அங்கே தானே வரே பார்த்து கேட்டுக்கொள்,' என்றான்

அவன் வீட்டுக்கு கிட்டே இருக்கும்போது போன் செய்தான் 'தாத்தா, வீட்டுக் கிட்டே இருக்கோம், இன்னும் அரை மணியில் வந்து விடுவோம்,' என்றான்

டுத்த அரை மணியில் அங்கே இருந்தார்கள், அரை மணி என்று ருத்ரா சொன்னவுடன்,' ரூப் கெட்டப்,' என்று அவள் குரல் கொடுத்தவுடன் அவன் எழுந்து விட்டான், இந்தா இந்த தண்ணியை குடி,' என்று அவனிடம் சொன்னாள்

தாத்தா வீடு வந்து விட்டோமா என்று கேட்டான், 'ஆமாம் கண்ணா, நம்ம வீடு வந்துடுத்து, நீ தாத்தா பாட்டி எல்லோரையும் பார்க்க போறே பார்,' என்றாள் அவள் முகத்திலும் அந்த குஷி தெரிந்தது,

ருத்ரா காரை கொண்டு போய் போர்டிகோவில் நிறுத்தினான், எல்லோரும் வாசலுக்கு வந்தனர், கற்பகம் ஆரத்தி தட்டுடன் காத்துக் கொண்டிருந்தாள், அவர்கள் இறங்கியவுடன் அவள் எடுக்க இருந்த போது, வெயிட் பண்ணும்மா ஒரு VIP நீங்க பார்க்க  வேண்டாமா, என்று ருத்ரா சொல்லவும் அவள் யாரென்று பார்க்கையில், சித்ரா, ரூபெஷை, பின் சீட்டிலிருந்து இறக்கினாள், அவனை பார்த்தவுடன் கற்பகம் கண்ணிலிருந்து கண்ணீர், சித்ரா இன்னும் இளைத்தால் போல் இருந்தது அவளுக்கு, தன் மகனை சின்ன வயசில் பார்த்தது போல் இருந்தது, அந்தக் குழந்தை, கற்பகம் சித்ராவை பார்த்து ஆச்சர்யப் பார்வையுடன் கண்களில் கண்ணீருடன் தலை ஆட்டினாள், அவளும் கண்ணீருடன் தலை ஆட்டினாள், கற்பகம் முதலில் சித்ராவை கட்டிக் கொண்டு எப்படியிருக்கிறாய் என் கண்ணே, நாங்கள் எல்லோரும் உன்னைப் பற்றி எவ்வளவு கவலைப் பட்டோம் தெரியுமா, உன்னை நான் வித்யா மாதிரி தான் நினைத்திருந்தேன், என்று கதறினாள்,

'ஐயோ, ப்ளீஸ் ஆண்டி, அழாதீங்க,'என்றாள் சித்ரா

Episode # 18

Episode # 20

தொடரும்

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.