(Reading time: 21 - 41 minutes)

கியோ பயந்துவிட்டாள்..அதிக ப்ரசங்ஙாகிதனமாக பேசிவிட்டோமோ,தவறாக எண்ணிவிட்டாரோ என்று குழம்பி போனாள்..மற்ற இருவருமே அதே மனநிலையில் தான் இருந்தனர்..

சாரிப்பா..நா எதாவது தப்பா பேசிருந்தா..

என்னம்மா வாய் நிறைய அப்பாநு கூப்டுற..அப்பா பொண்ணுக்குள்ள என்ன சரி தப்பு..ராம்கிட்ட சொன்னதுதான் உன்கிட்டயும் சொல்றேன் நா காதலுக்கு எப்பவுமே எதிரி கிடையாது..அவனை பத்தின எல்லாத்தையும் நீ தெரிஞ்சுக்கனும்னு நெனைச்சேன் அவ்ளோதான்..மத்தபடி எனக்கு பரிபூர்ண சம்மதம்..என்ன சந்தோஷமா?

ஓடிச் சென்று அவர் காலில் விழுந்து ஆசி பெற்றாள்..கண்ணிரோடு கை கூப்பி கூறினாள்.,ரொம்ப தேங்ஸ்ப்பா என் வாழ்க்கைல நா ஆசைப்பட்டு கிடைச்ச முதல் விஷயம்..ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..

ராஜி ராமின் கண்களுமே கலங்கிவிட்டிருந்தது..ராஜி மகியை தன்னோடு சாய்த்துக் கொண்டாள்..பிறகு நிலைமையை சரியாக்க எண்ணியவளாய்..என்னம்மா மருமகளே வந்தவுடனே மாமனார் கூட சேர்ந்துட்ட எங்களையும் கொஞ்சம் கவனிச்சுக்கோ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

உஷாவின் "புதிர் போடும் நெஞ்சம்..." - காதல், நகைச்சுவை கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அழகாக சிரித்தவள்,ராமை ஏறிட்டாள்..காற்றிலேயே இதழ் குவித்து தன் முத்தத்தை பதித்தான்..பெண்ணவளோ நாணத்தில் தலை கவிழ்ந்தாள்..

ராஜசேகர்,மகி ராம் வேலைல கொஞ்சம் ரிஸ்க் இருக்கும்மா..உனக்கு புரியும்நு நம்புறேன்..ஏன் இத்தனை தடவை சொல்றேன்னா எவ்வளவோ என்ன பத்தி தெரிஞ்ச என் மனைவிக்கே ஒரு கட்டத்துல ஈஸியா எடுத்துக்க முடில..நீயோ சின்ன பொண்ணு,..

எனக்கு புரியுதுப்பாஇந்த நொடில இருந்து அவரோட கேரியர்ல நானும் என்னாலான உதவிகளை செய்வனே தவிர தொந்தரவா இருக்க மாட்டேன்..

அந்த நேரம் மகியின் கைப்பேசி சிணுங்கியது..அவளது ஹாஸ்டல் வார்டன் தான் அழைத்தது,அப்போது தான் மணியை பார்த்தவள் தன்னையே நொந்து கொண்டாள்,.

ஹலோ சொல்லுங்க மேடம்..

………..

இல்ல மேடம் ஒரு ஹாஃவ் அன் அவர்ல வந்துருவேன்..

………….

.கே மேம்,.

என்னாச்சு மகி..யாரு போன்ல?-ராஜி

எங்க வார்டன் தாம்மா..10 நிமிஷத்துல வர சொல்ராங்க இல்லனா கேட் க்ளோஸ் பண்ணிடுவாங்க..

..சரி நீ வேணா இங்கேயே தங்கிக்கோயேன்..காலைல ரூம்க்கு போலாம்,ராமோட அக்கா வேற வந்துட்டு இருக்கா உன்ன பாத்தா ரொம்ப சந்தோஷப்படுவா..

ஐயோ அதெல்லாம் வேணாம்மா..இன்னொரு நாள் வரேன்..இப்போ கிளம்புறேன்..

மகி இதுக்கப்பறம் நீ கிளம்புறது எனக்கு என்னவோ சரியா படல..காலைலயே போம்மா..-ராஜசேகர்..

அதற்குமேல் மகியால் ஒன்றும் பேசமுடியவில்லை..அரைமனதாக ஒத்துக் கொண்டாள்

நா போய் டின்னர் ரெடி பண்றேன் தன்வி வந்தவுடனே சாப்பிடலாம்,ராம் நீ மகிக்கு வீட்டை சுத்திகாட்டு..போம்மா என்று அனுப்பி வைத்தார்..

கீழே சுத்திப் பார்த்துவிட்டு மாடிக்கு அழைத்துச் சென்றான் ராம்..மூன்று அறைகளும்,பெரிய ஹாலுமாய் இருந்தது..ஒரு அறை ராமிற்கும் அவனது தந்தைக்கும் அலுவலக அறையாக இருந்தது..இன்னொரு அறை ராமின் அக்கா தன்விகாவின் அறை,அடுத்ததாக இருந்தது ராமின் அறை..உள்ளே அழைத்துச் சென்றான்..அறை மிகவும் நேர்த்தியாக இருந்தது..

ரொம்ப நீட்டா வச்சுருக்கீங்க ராம்.. அறையை பார்வையிட்டுக் கொண்டே கூறினாள்..

ம்ம்ம்ம்ம்

புக்ஸ்லா கூட படிப்பீங்களாநைஸ்

ம்ம்ம்ம்ம்ம்

நா பாட்டுக்கு பேசிட்டே இருக்கேன் என்ன ராம் ஒண்ணுமே பேச மாட்றீங்க என்று கேட்டுக் கொண்டே திரும்பியவள் சுவரில் சாய்ந்த வண்ணம் கைகளை கட்டிக் கொண்டு அவளையே பார்த்தபடி நின்றவனை கண்டு தடுமாறித்தான் போனாள்..

என்னாச்சு ராம்குரல் எழவில்லை அவளுக்கு..

அவனோ அவளை நோக்கி முன்னேறினான்..

மகிக்கோ தன் இதயதுடிப்பின் ஓசையே பயங்கரமாக இருப்பதாய் தோன்றியது..தன்னிச்சையாகவே கால்கள் பின்னோக்கி நகர்ந்தன..அப்படியே சென்று சுவரில் முட்டி நின்றாள்..அதற்குள் அவளை நெருங்கி இருந்தான் ராம்..விரலளவு இடைவெளியே இருவருக்குள்ளும்..மகியோ குனிந்த தலை நிமிரவேயில்லை..சுவரின் இருபுறமும் கை ஊன்றிய வண்ணம் அவளை சிறைபிடித்திருந்தான்..விரல்நுனி கூடபடவில்லை அவ்வப்போது தீண்டும் அவனின் மூச்சு காற்றின் வெப்பம் மட்டுமே ஆனால் அதுவே இன்பமான அவஸ்தயாய் இருந்தது..

குட்டிமாமென்மையாய் அழைத்தான்..

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.