(Reading time: 7 - 14 minutes)

04. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

எப்படி இருக்கீங்க. இங்க பசங்களுக்கு எக்ஸாம் பிளஸ் வீட்டுல கெஸ்ட். ஸோ செம்ம பிஸி. அது முடிஞ்சா இந்தியா ட்ரிப். ஸோ ஜூன் லாஸ்ட் வீக் வரை லேப்டாப் கைல எடுக்கறது பிரம்மப் பிரயத்தனம்தான். முடிஞ்சவரை கரெக்டா அப்டேட் கொடுக்க ட்ரை பண்றேன். சின்ன அப்டேட்ஸ்தான் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ப்ளீஸ். ஜூலைலேர்ந்து பெரிய அப்டேட் தர்றேன். நன்றி மக்களே.

றாதக் கோவமில்லை, என் அருகினிலே வா........

இனி நானாகப் பிரிவதில்லை, என் வாழ்வினிலே வா........                 

சிவப்பு ரோஜா பூங்கொத்துடன்  நின்ற ஹரியை ஆவென்று பார்த்தபடியே நின்றுவிட்டாள் ஸ்வேதா.  விமானம் பறக்க ஆரம்பித்ததில் இருந்து தரை இறங்கும் வரை எடுத்த அத்தனை தீர்மானங்களும் தவிடு பொடியாகின.  விவேகானந்தர் கையில் விக்ரகம் இருந்தால் பரவாயில்லை, அதுவே ரோஜா என்றால் அதுவும் சிவப்பு ரோஜா என்றால், மிக மிக அதிகம்தானே.  ஸ்வேதா அதிர்ச்சியில் வாய் மூடாமல் இருக்கும்போதே அவள் அருகில் வந்த ஹரி,

“ஹாய் ஸ்வேதா, வெல்கம் டு நியூயார்க்.  எப்படி இருக்க, ட்ராவல் கம்ஃபோர்ட்டபிளா  இருந்ததா?”, என்று கேட்டபடியே பூங்கொத்தை அவளிடம் நீட்டினான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... 

சித்ரா.வி'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அவன் கொடுத்ததை கவனிக்காதது போல் பாவ்லா செய்தபடி, தன் கையில் இருந்த ட்ராலியை தள்ளி சிறிது முன்னேறி, “Fine ஹரி.  நீங்க எப்படி இருக்கேள்.  யாரானும் friend ஊருல இருந்து வர்றாளா.  ஏர்போர்ட் வந்திருக்கேள்.  Anyway nice மீட்டிங்.  என்னோட கொலீக் தீபா என்னைக் கூட்டிண்டு போக வந்திருப்பா.  நான் கிளம்பறேன்”, என்று கூற.... ஒரு கையால் அவள் தள்ளிய ட்ராலியை நிறுத்திய ஹரி, அவளின் வலது கையை அதிலிருந்து எடுத்து, அதில் அவன் அவளுக்காக வாங்கிய பூங்கொத்தை வைத்தான்.  பின்னர் அவளின் இடது கையைப் பற்றியபடியே ட்ராலியைத் தள்ளிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.  அவனின் இந்த செயலை மறுபடியும் ஆவென்று பார்த்தாள் ஸ்வேதா.  (பயப்புள்ள ஒரேயடியா அமெரிக்கா வந்து மாறிப்போச்சே.  அம்மாஞ்சியா இருந்த ஹரியா இது.......)

“ஹரி என்ன பண்றேள், கைய விடுங்கோ...”, அவனிடம் இருந்து தன் கையை விலக்கப் பார்த்து முடியாமல் அவனை முறைக்க ஆரம்பித்தாள் ஸ்வேதா.

“சும்மா வா ஸ்வேதா.  நான் உன்னை ரிஸீவ் பண்ணத்தான் வந்துருக்கேன்னு உனக்கு நன்னாத் தெரியும்.  அப்பறம் எதுக்கு இப்படி ஒரு  பில்ட் அப்”

“எது எனக்குத் தெரியுமா.... நான் உங்களை வரச்சொன்னா மாதிரி எனக்கு நியாபகம் இல்லையே.  கனாக்கினா எதானும் கண்டேளா.  அடுத்த லைன் பேசறதுக்கு முன்னாடி கைய விடுங்கோ”

“ச்சு வாழ்கை முழுக்க உன் கைய பிடிச்சுடுண்டு நடக்கணும்ன்னு நான் இருக்கேன்.  நீ என்னடானா இந்த ரெண்டு நிமிஷத்துக்கே இப்படி சொல்ற”

“என்னது வாழ்கை முழுக்கவா, அதுக்கு நான் சம்மதிக்கணும்.  எனக்கு அதுல இஷ்டம் இல்லை.  ஸோ நீங்க போகலாம்.  தீபா என்னைத் தேடிண்டு இருக்கப் போறா...”

“அதெல்லாம் மெதுவா சம்மதம் தரலாம்.  இப்போதானே கதை ஆரம்பிச்சு இருக்கு.....  அப்பறம் தீபா வரலை.  அவதான் ஃபோன் பண்ணி என்னை போக சொன்னா”

“என்ன கதை விடறேள்.  எனக்கே உங்க நம்பர் தெரியாது, இதுல அவ உங்களுக்கு ஃபோன்  பண்ணி சொன்னாளா”

“உனக்கு என் நம்பர் தரலை,  அதுதான் கோவமா.  நான் பேசும் போதெல்லாம் நீ கால் அட்டென்ட் பண்ணவே இல்லை.  அதுதான் உனக்குத் தெரியலை.  இதே எனக்குப் பாரு, உன்னோட சென்னை செல், ஆபீஸ் லேன்ட் லைன் எல்லாம் தெரியும்”

“சும்மா பேச்சை மாத்தாதீங்கோ ஹரி.  இப்போ எதுக்கு நீங்க வந்திருக்கேள்.  நேத்து ஃபிளைட் எறரதுக்கு முன்னாடிக் கூட தீபாக்கிட்ட பேசினேன், அவ வர்றேன்னு சொன்னாளே”

“ரொம்ப கரெக்ட்.  அதுக்கு அப்பறம்தான் அவளுக்கு வயறு சரியில்லாம போச்சாம் ஸ்வேதா.  சரி அதை எல்லாம் விடு.  இப்போ நான் வந்ததுல உனக்கு என்ன கஷ்டம்”

“எனக்கு ஒரு கஷ்டமும் இல்லை.  உங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல் அப்படின்னுதான்.... நானே டாக்ஸி பிடிச்சு அவளோட அபார்ட்மென்ட் போய் இருப்பேனே”

“ச்சே ச்சே எனக்கு கஷ்டமா, இல்லவே இல்லை ஓவர் இஷ்டம்தான்.  சரி நாம நடுவழில நின்னுண்டு ஒருத்தர் கைய ஒருத்தர் பிடிச்சுண்டு இன்னும் எத்தனை நேரம் பேசப்போறோம்.  எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தாலும், அப்படி ஓரமா அந்த பென்ச்ல உக்கார்ந்து கண்டின்யூ பண்ணலாமா”, என்று ஹரி கூற, அப்பொழுதுதான் நடுவழியில் நின்று அவன் கையைப் பிடித்தபடியே பேசிக்கொண்டிருப்பதை ஸ்வேதா கவனித்தாள்.  ஆ இப்படி பல்ப் வாங்கிவிட்டோமே என்று சடாரென்று அவள் கையைப் பிடிங்கிக் கொண்டாள். 

“எங்கயும் உக்கார்ந்து பேச வேண்டாம்.  நீங்க ட்ராலியைக் குடுங்கோ.  நான் டாக்ஸி பிடிச்சுப் போய்க்கறேன்”, ட்ராலியை அவன் கையிலிருந்து தன் பக்கம் தள்ளியபடியே ஸ்வேதா பேச, மறுபடி அவள் கையை எடுத்துவிட்டு அதைத் தள்ளியபடியே நடக்க ஆரம்பித்தான் ஹரி.  வேறு வழியின்றி அவனைத் தொடர்ந்தாள் ஸ்வேதா.  அவர்கள் நடந்து கொண்டிருக்கும்போதே ஹரியின் கைப்பேசி அழைக்க அதை எடுத்து பேச ஆரம்பித்தான் ஹரி.

“சொல்லுங்கோ மாமி.  நன்னா இருக்கேளே?”, என்று ஆரம்பிக்க, அமெரிக்காவில் ஹரிக்கு யார் மாமி என்று பார்த்தாள் ஸ்வேதா.

“நாங்க எல்லாரும் சூப்பர் ஹரி.  ஸ்வேதா ஜாகிரதையா வந்து சேர்ந்தாச்சா.  கென்னடி ஏர்போர்ட் எப்படி இருக்கு.  அவ உன்னைப் பார்த்து போட்ட சண்ட  சரவெடில அரண்டு போய் இருக்கா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2023 Chillzee.in. All Rights Reserved.