(Reading time: 15 - 30 minutes)

சித்ராவை ருத்ராவும், அவன் குடும்பத்தாரும் தாங்கினார்கள், அவள் அதில் திக்குமுக்காடினாள், ரூபேஷ்தான், அம்மா, அப்பா இருவரையும் மிஸ் செய்தான், ஆனால், ருத்ரா அவனையும் நன்றாக கவனித்துக் கொண்டான், இருந்தாலும் அவனுக்கு ஏதோ தன்னை விட அம்மாவுக்கு ஒரு தனி முக்கியத்துவம் என்ன என்றுதான் அவனுக்கு தெரியவில்லை, அவன் ஸ்கூல் பிடித்திருந்தது, அவன் படிப்பில் தன் கவனத்தை செலுத்தினான்

ருத்ராவின் ஆசை படி சித்ராவுக்கு  வளைகாப்பு, சீமந்தம் செய்தார்கள், அவள் எவ்வளவு சொல்லியும் அவன் கேட்கவில்லை, தன் மனைவியை உள்ளங் கையில் வைத்து தாங்கினான்,

டெலிவரி டேட் நெருங்கியது , அன்று சித்ரா கொஞ்சம் டயர்டாக இருந்தாள், ' என்னம்மா உடம்பு முடியலையா?’ என்று கேட்டான் ருத்ரா, தினமுமே, அவளுக்கு காலை பிடித்து விடுவான், இன்றும் அவளைக் கேட்டுக் கொண்டே, அவளுக்கு இடுப்பு தடவி கொடுத்து காலை அமுத்தி விட்டான், தன் மனைவி கஷ்டப் படுவதை அவனால் பார்க்க முடியவில்லை, பாவம், முதல் குழந்தைக்கு, யாருமில்லாமல் இதே அவஸ்தை பட்டிருப்பாளே பாவம், அப்போ இன்னும் சின்ன வயது, அது மட்டுமில்லை, முதல் பிரசவம் வேறு எப்படி டா மேனேஜ் பண்ண?' என்று அவளை கேட்டான், அந்த நேரம் அவள் வீலென்று கத்தினாள், அவன் பயந்து விட்டான், 'அம்மா,' என்று அவன் கத்தினான்,

அவன் அம்மா, ' என்னப்பா, என்ன ஆச்சு,' என்று கத்திக் கொண்டு வந்தாள்,

'பாரும்மா, சித்து வீலென்று கத்துகிறாள்,' என்றான்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "விடியலுக்கில்லை தூரம்.." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

'என்னம்மா வலி எடுத்துடுத்தா,' என்று கற்பகம் கேட்க

'ஆமாம்மா,' என்றாள் சித்ரா வலியினூடே

ருத்ரா வேறொன்றும் பேசாமல் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு கீழே இறங்கினான், தன் காரில் பின் சீட்டில் அவளை படுக்க வைத்தான், தன் அம்மாவை அவளுடன், உட்காரச் சொன்னான், கார் பறந்தது ஹாஸ்பிடலுக்கு, வழியிலேயே, தங்கள் டாக்டரை கூப்பிட்டான், விஷயத்தை சொல்லிவிட்டு, அவளை அட்மிட் செய்தான்

ஒரு மூன்று மணி நேரப் போராட்டத்தில் பெண் குழந்தை பிறந்தது, ரூபேஷை, ஷிவேஷும், தாத்தா, நீலகண்டனும் கூட்டிக் கொண்டு வந்தார்கள், 'டாட் அம்மாக்கு என்ன ஆச்சு, ' என்று கேட்டான்

'அம்மா நன்னா இருக்கா, உனக்கு தங்கை பிறந்திருக்கிறாள், நாம் போய் பார்க்கலாம் வெயிட் பண்ணு, நீ ஏதாவது சாப்பிட்டியா,'

நர்ஸ் வந்து 'நீங்கள் போய் பார்க்கலாம் சார்,’ என்று சொன்னவுடன்,

முதலில் ருத்ரா உள்ளே போனான், தன், மனைவியின் முகம் பார்த்தான், அவள் முகம், மிகவும் களைத்திருந்தது, குனிந்து எப்படியிருக்கே கண்ணம்மா, நீ இவ்வளவு கஷ்டப் படுவாய் என்று தெரிந்திருந்தால் நான் இன்னொரு குழந்தைக்கு ஆசை பட்டிருக்க மாட்டேன், என்று அவளுக்கு நெற்றியில் முத்தம் கொடுத்தான், பிறகு முகம் பூராவும் முத்தம் கொடுத்தான், எல்லோரும் இருப்பதைக் கூட அவன் கவலைப் படவில்லை, அவளைக் கொஞ்சிக் கொண்டிருந்தான், அவள்தான்' உங்கள் பெண்ணைப் பார்க்க வேண்டாமா,' என்று கேட்டாள்

'அந்த பெண்ணை கஷ்டப் பட்டு பெற்றுக் கொடுத்த அவள் அம்மாவைக் கவனித்து விட்டு அவள் பெண்ணை கவனிக்கிறேன்,' என்றான் சிரித்துக் கொண்டே, பிறகு தன் குழந்தையின் பக்கம் திரும்பி பார்த்தான், அங்கே ரூபேஷ், அந்தக் குழந்தையையே பார்த்துக் கொண்டிருந்தான், சித்ரா, ரூபேஷை தன்னிடம் வரச் சொல்லிக் கூப்பிட்டாள், 'ரூப், தங்கை பாப்பாவை பார்த்தாயா, நம்ம அப்பாவுக்கு விது அத்தை போல, உனக்கு, இந்த தங்கை பாப்பா, அப்பா எப்படி விது அத்தை மேலே பாசாமாக இருக்கிறாரோ நீயும் அதே மாதிரி இருக்கணும், சரியா,' என்று அவனிடம் சொன்னாள்,

'மாம், ஹவ் ஆர் யு, நீ பெட்ல இருக்கறதா பார்க்க பயமா இருக்கு,' என்றான் அவள் மகன்

'எனக்கு ஒன்றுமில்லை, கவலைப் படாதே, ஐ வில் பி ஆல்ரைட்,'

ருத்ரா, தன் மகளை எடுத்து கொள்ள பயந்து, அப்படியே கொஞ்சினான், அப்போது எல்லோரும் உள்ளே வந்தனர், முதலில் எல்லோரும் சித்ராவை பார்த்து பேசிவிட்டு பிறகு குழந்தையிடம் வந்தனர், அப்போது ருத்ராவின், பாட்டி சிவகாமி, குழந்தையை கையில் எடுத்துக் கொண்டாள், 'ஐயோ பாட்டி, பார்த்து, குழந்தை ரொம்ப சின்னதாக இருக்கு,' என்றான்

'அட பாருடா, என் பேரனை, இவ்வளவு குழந்தையை வளர்த்த, எனக்கு அறிவுரை சொல்கிறான்,' என்று சிரித்து கொண்டே 'முதலில் நீ தூக்கிக் கொள்ள கத்துக் கொள்,' என்று சொன்னாள், பாட்டி எல்லோரும் சிரித்தனர்,

சித்ராவைப் பார்த்தான் அவள் சிரித்துக் கொண்டே, அவனுக்கு குழந்தையை தூக்கிக் கொள்ளும்படி ஜாடை செய்தாள், அவன், தன் பாட்டியிடம் திரும்பி, பாட்டி எனக்கு அவளை எப்படி தூக்க வேண்டுமென்று சொல்லிக் கொடுங்கள் என்றான்,

பாட்டியும் 'வாடா, என் செல்லமே, இப்படி கழுத்துக்கு கீழே கையை கொடுத்து தலையையும் கழுத்தையும் ஒன்றாக பிடித்துக் கொள்,' என்று கூறி அவனிடம் குழந்தையைக் கொடுத்தாள், அவன் கையில் இருந்த குழந்தையை அப்படியே தன் மனைவியின் அருகில் கொண்டு போனான் ருத்ரா, ரூப் இங்கே வா என்று அவனையும் கூட்டான், சித்ராவிடம் குழந்தையைக் காட்டி 'பார்த்தியா நான் தூக்கிக் கொள்ள கத்துக் கொண்டேன், என்று பெருமையாக அவன் சொல்லவும், இதெல்லாம் வேண்டுமென்றீர்கள் இல்லையா, எனக்கு இப்படி உங்களை பார்க்க சந்தோஷமாக இருக்கு என்றாள

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.