(Reading time: 15 - 30 minutes)

'தேங்க்ஸ் சித்து, நான் ஆசைப்பட்டேன் என்று, நீ நிறைய கஷ்டப் பட்டிருக்கிறாய்,'

'என்ன பேசறீங்க, இது நம் குழந்தை, நம் குழந்தைக்காக நான் கொஞ்சம் கஷ்டப் பட்டால், வாழ் நாள் முழுக்க சந்தோஷப் படப் போகிறோம், அது மட்டுமில்லை இது பெண்களுக்கு மட்டும் கிடைத்திருக்கும் பெருமை, ஒரு வேளை, ஆண்களுக்கு இந்த படைப்பு இருந்தால், நீங்கள் எனக்காக இந்த கஷ்டப் படமாட்டீங்களா, நான் உங்களுக்கு நன்றி சொல்கிறேன், எனக்கு இந்த இரண்டு குழந்தைகளை பெற்று கொடுத்தீர்களே, எனக்கு இந்த சந்தோஷமான வாழ்கையை கொடுத்தீர்களே' என்று அவள் உணர்ச்சி வெள்ளத்தோடு கண்களில் கண்ணீரோடு பேசினாள், அவள் கையில் குழந்தையைக் கொடுத்து, அவளையும், தன் மகனையும் அனைத்துக் கொண்டு உச்சி வகிட்டில் முத்தம் கொடுத்தான், ருத்ரா

அவள் வீட்டுக்கு வந்து, இரண்டு வாரமாகியது, பேர் வைக்கும் நாள் குறிக்கப் பட்டது, சித்ராவிடம் கேட்டான்,' என்ன பேர் வைக்கலாம் நம் குழந்தைக்கு,' என்று

'இது உங்க டர்ன், நீங்கதான் பேர் வைக்கவேண்டும், நம் பையனுக்கு நான் பேர் வைத்தேன், இப்போ நீங்க நல்ல பேரா செலக்ட் செய்யுங்க,' என்றாள்

'வீணா, எப்படியிருக்கு சித்து,'

'ருத்ர வீணா, எப்படியிருக்கு ருத்ரா,’ என்று அவள் கேட்க

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்...

'ஏய், என்னை பேர் வைத்து கூட்டு விட்டாய், ஹஹஹஹ.....,' என்று அவன் சத்தமாக சிரித்தான், அதைக் கேட்ட ரூபேஷ்

'வாட் டாட், எதுக்கு அப்படி சிரிச்சீங்க,' என்று கேட்க,' உன் அம்மா என் பேரை சொன்னாடா, அதான் அப்படி சிரிச்சேன்,' என்றான் மகனிடம், சித்ராவுக்கு வெட்கத்தில் முகம் சிவந்தது,

'ரூபெஷும், ' ஓ, ரியல்லி,’ என்று அம்மாவிடம் 'அம்மா என்னெதிரே ஒரு முறை அப்படி கூப்பிடேன்,' என்றான், அவள் பேச்சை மாத்தினாள் ' ரூப் தங்க பாப்பாவுக்கு, ருத்ர வீணா, என்ற பேர் எப்படி இருக்கு, சொல்லு பார்க்கலாம்,' என்று கேட்டாள்

'வாவ், நல்லா இருக்கு மாம், டாட் பேரும், இருக்கு இல்லை, என்றான்

'ஆமாம் கண்ணா, நல்லா இருக்கா,' என்று பெருமையுடன், கேட்டாள், ருத்ராவைப் பார்த்து கண்ணடித்தாள்,

'ரூப், சீக்கிரமே நம் வீட்டில் இன்னொரு சின்ன பாப்பா பிறந்திடும், உங்க அம்மா.......,’ என்று அவள் கிட்டே போய், அவளை அனைத்து அவளின் வாயில் முத்தம் கொடுத்தான், அவளைப் பார்த்து கண்ணடித்து என்ன ரெடியா இன்னொன்னுக்கு, என்று அவன் கேட்க, நல்ல ஆளுதான் நீங்க, என்னை வாழ்க்கை முழுக்க, பிள்ளை பெத்துக்க சொல்லுவீங்க போல.... என்று கல கலவென்று சிரித்தாள், அவர்களின் சிரிப்பைக் கேட்ட பெரியவர்களும் கீழே சிரித்துக் கொண்டனர்...... தாத்தா நீலகண்டன் கடவுளிடம் தன்  பேரனின் வாழ்வில் இந்த சிரிப்பும் சந்தோஷமும் கொடுத்த கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.

Episode # 22

முற்றும்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

அன்புள்ள வாசகர்களே! உங்களுக்கு என் மனமார்ந்த நன்றி !

இவ்வளவு  நாள் உங்களுடைய எத்தனையோ வேலைகளிடையே, நேரம் ஒதுக்கி என்னுடைய "என் மனதை தொட்டு போனவளே !" கதையை படித்ததுக்கும், அதற்கு ஒவ்வொரு வாரமும் என்னுடைய கதைக்கு கருத்து தெரிவித்து அதன் மூலம்  என்னையும், என்னுடைய எழுத்தையும் புரிய வைத்தீர்கள், என்னாலையும் கதை எழுத முடியும் என்று புரிய வைத்தீர்கள், இது எல்லாவற்றிற்கும் நான் தலை வணங்குகிறேன் ...

இந்தக் கதையில் ஹீரோ (ருத்ரா) கொஞ்சம் வேகமானவன் என்று பலரோட கருத்து, ஆம், அது உண்மையே, ஹீரோ ரொம்ப பொறுப்பானவன் என்றாலும் இளமையின் வேகமும், அவன் தன் காதலியை தான் முதன் முதல் பார்த்ததிலிருந்து, தன் மனைவியாக நினைத்துக் கொண்டான், அந்த உரிமையும், அவளது அழகும், அருகாமையும் சேர்ந்து அவன் உரிமை எடுத்துக் கொண்டான், நிறைய கதைகளிலும் சரி, வாழ்க்கையிலும் சரி நடக்காதது இல்லை இந்த கதையில் வரும் சம்பவம், இது யார் மனதையாவது புண் படுத்தி இருந்தால் , என்னை தயை கூறி மன்னிக்கவும்.

இது வெறும் கற்பனைக் கதையே, சில்சியும், சில்சி வாசகர்களும் இது வரை எனக்கு ஆதரவு கொடுத்தற்கு மிகவும் நன்றி !!!

 

{kunena_discuss:958}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.