(Reading time: 7 - 14 minutes)

34. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ninaithale Inikkum

"பிரபு ..டேய் பிரபு ..எழுந்திரி டா"மகனை உலுக்கி எழுப்பினார் நளினி .. நந்துவுடன் கனவில் டூயட் பாடிகொண்டிருந்தவனுக்கு எப்படித்தான் விழிப்பு வரும் ? போர்வையை முகம் வரை போர்த்தி கொண்டு இன்னும் நன்றாய் உறங்கினான் அவன் ..

"டேய் கோவிலுக்கு போகணும் டா " என்று மீண்டும் நளினி அதட்டல் போடவும், கடுப்பாகினர் ஞானப்ரகாஷ் ..

"நளினி "

"என்னங்க ?"

"" கொஞ்சம் என் கூட வெளில வா "

"ஏன் எங்க ?"

"" அடியே நான் உனக்கு தாலி கட்டின புருஷன் டீ .. கேள்வி கேட்டு பதில் சொன்னாத்தான் என் கூட வருவியா நீ ?' உரிமையுடன் அவர் கேட்ட விதத்தில் சிரிப்புத்தான் வந்தது  நளினிக்கு .. இருந்தும் முகத்தில் அதை காட்டிக்கொள்ளாமல் இருந்தார் அவர் ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "காற்றினிலே வரும் கீதம்" - விறுவிறுப்பான குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

"என்னமோ போங்க, இங்க வந்த 4 நாளில் நீங்க சரியே இல்ல .. வாடி போடின்னு  சொல்றதும் , அப்பபோ லுக்கு விடுறதும் "

"ராமா , உன் பையனை வெச்சுகிட்டு என்ன பேச்சு பேசுற நீ ? வந்தா வா இல்லன்னா  உன் இஸ்டம் "என்று விட்டு அந்த அறையில் இருந்து வெளியேறினார்  ஞானப்ரகாஷ் ..

மனைவி சொன்ன வார்த்தைகளை கேட்டு அவருக்கும் சிரிப்புத்தான் வந்தது .. அவரை பொருத்தவரை "பெரிய வீடு "என்றாலே அவருக்கு  மன தாங்களையும்  அவமானத்தையும் தந்த இடமாகத்தான் இருந்தது .. ஆனால் அங்கு வந்ததும் , அவரையும் மீறி கொஞ்சம் பழைய  நினைவுகள் தென்றலாய் வருடியது என்பதுதான் உண்மை ..

இதே வீட்டில் அவர் சந்தோஷமாய் கழித்த நாட்கள் எல்லாம் கண்முன்னே  நின்றன.. மற்றவர்களை போல இளம் வயதில் சொகுசான வாழ்க்கை வாழ்ந்து காதலில் விழுந்தவர் அல்ல ஞான பிரகாஷ் .. உழைப்பு  மட்டுமே வாழ்வாதாரமாய் கொண்டு முன்னேரியவருக்கு , நளினியின் தந்தை மனமுவந்து பெண் கொடுத்தார் .. அவர் எதிர்பார்த்ததை விட ஆரின் இல்லறம் நல்லறமாய்  அமைந்ததற்கு ஒரே காரணம் நளினிதான் .. குணத்தில் பொறுமையும்  பழக்க வழக்கத்தில் நேர்த்தியும் அதே நேரம் சுட்டித்தனமாகவும்  இருந்த மனைவி அவருக்கு மிகவும் பிடித்தம் ... பிரகாஷ்  கொஞ்சம் இறுக்கமான  மனோபாவம் கொண்டிருப்பவராய் இருந்தாலும் கூட , அவரின் மனைவியை அவர் கட்டுபடுத்தி வைப்பதில்லை .. சொல்லப்போனால் தனக்கு எதிர்மாறாய் இருக்கும் மனைவியை அவர் ரசிக்கத்தான்  செய்தார் ..

சுத்தமான பாலில் விஷம் கலந்தது போலவே , அன்பு மட்டுமே குடியிருந்த அவர்  நெஞ்சில் சுபாங்கியின் சுபாவம் விஷமாய் இறங்கியது .. ஒரு பக்கம் சுயகௌரவம் . ஒரு பக்கம் மனைவி இரண்டுக்கும் நடுவில்  ஒவ்வொரு நாளும் அவருக்கு போராட்டம் தான் ..

தன்னிலை விளக்கமாய் அவர் பல நியாயங்களை வைத்திருந்தாலும் கூட  , இங்கு வந்ததும் லேசாய் குற்ற உணர்வு தலை தூக்கத்தான் செய்தது .. அதுவும் கொஞ்சமும் முகம் சுளிப்பு  இல்லாமல் வளம் வரும் பாஸ்கரனும் நந்திதாவும் அவரை  பெரிதாய் பாதித்து  இருந்தனர் ..

அவர்கள் வீட்டில் என்று மட்டுமின்றி அந்த ஊரில் இருந்த பலரும் இன்முகத்துடன் தான்  அவரை எதிர்கொண்டனர் .. "பெரிய வீட்டின் மாப்பிளை "என்ற அந்தஸ்தும் மரியாதையும் அவருக்கு கொடுத்தது கொடுத்ததாகவே இருந்தது ..

ஒரு பெண்ணின் குணத்தினால் மொத்த குடும்பத்துக்கும் தண்டனை தந்து  விட்டோமோ ? தன்னைத்தானே கேட்டு கொண்டார் .. இன்னொரு பக்கம் அவரை பாதித்தது  சந்துருவின் செயல் !

வந்ததில் இருந்தே நந்திதாவின் மீது சுள்ளென எரிந்து விழுந்து கொண்டிருந்தான் சந்துரு .. அவனுடைய சின்னச் சின்ன வேலைகளையும் கூட அவளியே செய்ய வைத்தான் .. "ஏய் , ஒய் " என்று அவளை அவன் அதட்டி வைப்பது பார்த்து அவருக்கே கோபம் வந்தது .. ஒரு அளவிற்கு மேல் பொறுத்திருக்க   முடியாமல்

" என்னதான் டா பிரச்சனை உனக்கு ? "என்றவர் அவனிடம் கேட்க

"அவங்க வீட்டு பெண் பண்ணின அவமானத்தை அவங்க வீட்டு பெண் தானே  அப்பா துடைக்கணும் "என்றான் சந்துரு கசந்த குரலில் .. அவன் சொன்னதை கேட்டு தூக்கி வாரி போட அதிர்ச்சியை பார்த்தார் அவர்..நல்லவேளையாய் நளினி அப்போது அங்கு இல்லை ..

'என்னடா பேசுற ? முட்டாளா நீ ? இந்த மாதிரி எல்லாம் உலராத சந்துரு .. நாளைக்கே நீ நம்ம வீட்டுக்கு கிளம்பு "என்று அவர் ஆணையிட 

"அப்பா வந்த வேலை முடியாமல் நான் போக மாட்டேன் .."என்று விட்டான்  அவன் .. மேலும் அவர் பேசுவதற்கு வாய்ப்பு தராமல் அங்கிருந்து  சென்றிருந்தான் அவன் .. அவனை நினைத்து அவருக்கு மேலும்  கவலையாய் இருந்தது ..தனது கோபம் அவனுக்கு தப்பான் வழிகாட்டுதலாய் அமைந்துவிட்டதா ? குழப்பத்தில் இருந்தான் அவர்  .

"என்னங்க என்ன விஷயம்? எதுக்கு கூப்பிட்டிங்க ?"

"அவனை எழுப்ப வேணாம் நளினி ... கோவிலுக்கு நீயும் நானும் மட்டும் போகலாம்  "

"ஏன் ..என்னாச்சு ?'"

"நீ தெரிஞ்சு கேக்குறியா இல்ல தெரியாம கேக்குறியா ?"

"புரியல "

"ரெண்டு மூனு நாளாய் உன் பையன் அந்த பொண்ண பாடாய் படுத்துறான் .. உனக்கு தெரியாதா ?"

" தெரியும் .. அதுக்கு நான் என்ன பண்ணனும் ?"

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.