Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 18 - 35 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (1 Vote)
Pin It
Author: vathsala r

காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலா

'Katrinile varum geetham

நேற்று இரவு....

இங்கே கோகுலும் முரளியும் வேதாவை பற்றி, சரவணனை பற்றி  ஏதாவது தகவல்கள் கிடைக்குமா என்று தேடிக்கொண்டிருந்த நேரத்தில்...  

திடுக்கென்று விழித்துக்கொணடாள் வேதா.... அப்போது அந்த காரில் பயணித்துக்கொண்டிருந்தாள் அவள்!!!. பின் சீட்டில் கிடத்த பட்டிருந்தாள் அவள்!!!!

காருக்கு உள்ளேயும் வெளியேயும் இருட்டு. எங்கே போய்க்கொண்டிருக்கிறோம் என்றே புரியவில்லை அவளுக்கு. அந்த சூழ்நிலை அவளை அவளை உலுக்கிய  போதும் அடி மனதில் இருந்த தைரியம் இன்னுமும் கரைந்து விடவில்லை.

படுத்திருந்த படியே மெல்ல எட்டிப்பார்த்தவளுக்கு முன் சீட்டில் அமர்ந்திருந்தவர்கள் கண்ணில் பட்டார்கள் அரை குறை இருட்டில் அதில் இருவர் தெரிந்தனர். சில நொடிகள் கழித்து அது விக்கியும் டிரைவரும் என புரிந்தது அவளுக்கு..

அவன் எங்கே? என்னிடம் கோகுலாக நடித்தவன் எங்கே?? தெரியவில்லை அவளுக்கு. நேற்று இரவு வரை தன்னுடன் இருந்தானே??? கோதையுடன் நான் பேச வேண்டும் என்றதும் சரி என்று ஒப்புக்கொண்டானே??? இப்போது எங்கே போனான் அவன்???

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "தமிழுக்கு புகழென்று பேர்..." - நட்பும் காதலும் கலந்த தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

அந்த இருட்டில் கை கடிகாரத்தில் நேரம் கூட தெரியவில்லை. எத்தனை மணி நேரமாக மயங்கி கிடக்கிறேன்??? தெரியவில்லை அவளுக்கு. நிச்சயம் ஒரு பத்து மணி நேரமாவது கடந்திருக்க வேண்டும்.

தான் அவர்களால் எத்தனை தூரம் ஏமாற்ற பட்டிருக்கிறோம் என்று நினைக்க நினைக்க இதயம் பற்றி எரிந்தது வேதாவுக்கு..

சில மணி நேரங்கள் முன்னால்...... கோவிலை விட்டு சில அடிகள் விக்கியுடன் நடந்தவளுக்கு மனதுக்குள் நிறையவே யோசனைகள். அப்பாவின் நண்பர் ராஜகோபாலன்!!! இவர் ஒருவரே இப்போது அவள் தப்பிக்க வழி என்று தோன்றியது. ஆனால் அதே நேரத்தில் அவளை ஏமாற்றிய இந்த கயவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டாமா???

விக்கியின் எதிரில் அவரிடம் எதுவும் பேசவும் முடியாது. பேசாமல் அவனுடன் நடந்தாள் வேதா. மெதுவாக எழுந்தது அவள் குரல்...

'கோகுல் எங்கே விக்கி???'

'அவன் கொஞ்சம் வெளியிலே போயிருக்கான்னு சொன்னேனே. நாம இப்போ கொஞ்ச நேரத்திலே இங்கிருந்து கிளம்பி நேரே ரிஜிஸ்டர் ஆபீஸ் போறோம். அவன் அங்கே வந்திடுவான்' சொல்லிக்கொண்டே அவன் கோவிலை தாண்டி நடக்க..

'விக்கி... நான் கோவில் பிரகாரம் சுத்த மறந்திட்டேன். நீ போயிண்டே இரு நான் சுத்திட்டு வந்திடறேன்... ஒரே நிமிஷம்...'

'சரி சீக்கிரம் வா...' என்றபடி அவன் முன்னோக்கி நடக்க... மறுபடியும் கோவிலை நோக்கி ஓடினாள் வேதா.

ஒரு முறை திரும்பி பார்த்து அவன் பின்னால் வர வில்லை என்பதை உறுதி செய்துக்கொண்டு  ராஜகோபாலனிடம் சென்றாள். அந்த கோவிலில் அவர்களை தவிர வேறு யாருமில்லை.

'மாமா சித்த இப்படி வறேளா????' என்றாள் வேதா. அவரை ஒரு ஓரமாக அழைத்து சென்று

'நான் ஒரு ஆபத்திலே மாட்டிண்டு இருக்கேன் மாமா. என் போனையும் திருண்டிட்டுட்டான் இவன். எப்படியானும் போலீஸ் இங்கே வந்தாகணும். ஏதானும் பண்ணுங்கோ மாமா'

'நினைச்சேன். அவனை பார்த்தவுடனேயே நினைச்சேன். நீ ஒண்ணும் பயப்படாதே. இங்கேயே இரு நான் பார்த்துக்கறேன்' சொன்னவர் தனது கைப்பேசியை தேடி எடுத்து போலீஸ் எண்ணை முயன்ற அந்த நொடியில்... அந்த கைப்பேசியை ஒரு கை பிடுங்கிக்கொண்டது..

பின்னாலிருந்து ஒரு கரம் அவள் முகத்தில் எதையோ வைத்து அழுத்துவதை அவளால் உணர முடிந்தது. சட்டென தலை சுற்றி கண்கள் இருட்டிய அதே நேரத்தில் கண் முன்னே ராஜகோபாலன் சரிந்து விழுவது தெரிந்தது.

'அப்பா...' அவள் உதடுகள் உச்சரிக்க.... ஏனோ அவர் முகம் அவள் கண் முன்னே வந்து போக  அப்படியே மயங்கி சரிந்தாள் வேதா. அதன் பிறகு இப்போதுதான் கண் விழிக்கிறாள். அங்கே ராஜகோபாலனின் நிலை என்ன ஆனது என்றும் அவளுக்கு தெரியவில்லை.

அவரை இவர்கள் அந்த கெஸ்ட் ஹவுஸின் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பதை நடுவில் ஒரு முறை அவருக்கு விழிப்பு அவரது பாக்கெட்டில் இருந்த இன்னொரு கைப்பேசியிலிருந்து அவள் தந்தையை அவர் தொடர்ப்பு கொள்ள முயற்சித்ததையும் இவள் அறிந்திருக்கவில்லை..

சில நிமிடங்கள் அசைவின்றி படுத்திருந்தாள் வேதா. 'என்னை எங்கே கொண்டு செல்கிறார்கள் இவர்கள்???'

அப்போது விக்கியும் அந்த காரை செலுத்திக்கொண்டிருந்தவனும் பேசுவது இவள் காதில் விழுந்தது.

'இன்னும் எவ்வளவு தூரம்டா??? அவ முழுச்சிக்க போறா???'

'இன்னும் அரை மணி நேரத்திலே போயிடலாம். அங்கே அவங்ககிட்டே இவளை ஒப்படைச்சிட்டு பணத்தை வாங்கிட்டு போயிட்டே இருக்கலாம்.'

பகீர்ன்றது அவளுக்கு 'என்னை விலை பேசி இருக்கிறார்களா என்ன???'  இப்போது எப்படி தப்பிப்பது???

 •  Start 
 •  Prev 
 •  1  2  3  4  5 
 •  Next 
 •  End 

About the Author

Vathsala

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Add comment

Comments  
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாThansiya 2016-06-17 22:18
very nice update mam.. super mam epdi. evlo alaga story kondu poringa mam.. all characters really awsome mam.. waiting for next update mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாchitra 2016-06-17 18:48
wow very good , summa para para nnu thrilla pochu, vetha appadaa thappijutta , ini ellam sari ayidum , supera irunthathu intha epi . :clap:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாKJ 2016-06-17 12:43
Wow... enga kotha ponna miss pannuvomme... Pathu konjam periya epi ya kudunga... Really can't wait for a week to see what will happen... Vedha esc scene is really trilling... Hope all is well at the end :)
Reply | Reply with quote | Quote
+1 # SuperKiruthika 2016-06-17 11:54
Sema Thik thik Epi .. ..Awaiting for teh next epi
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாDevi 2016-06-17 11:36
Interesting penultimate episode Vathsala (y)
Vedha eppadi thapikka poralao nnu thik thik nnu irundhadhu.. .birlliyant .. sleeping pills water bottle kalandhadhu... :clap:
Saravanan kku kodutha end right .. :yes:
Enakku .. .Kodhai poi solla mattnu thonithu.. . :yes: adhe madhiri ava kadaisi nerathule unmaiya solla pora :-)
Murali kku vandha call yarodadhu.. :Q: Vedha vaa.. :Q:
Kodhai - Gokul kalyanam nadakkuma :Q: highly doubted.. :yes:
waiting for happy sooper doopper finale episode (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாChithra V 2016-06-17 10:58
Nice update vathsala (y) (y)
Kodhai unmai ai solli marg a niruthiyirupa nu ninachadhu than ana andha letter avanga padicha situation edhir parkala :no:
But kokul Murali Ku matter teriyume avanga soluvangala :Q:
Kodhsi appa adhai purinjippara :Q:
Saravanan eppadi patta character avanuku indha dhandanai tevai than :yes:
Kodhai phone vedha Kitta than irukanumnu oru doubt vandhuchu :)
Vedha Ku night eh phone kidachum ava en innum varala :Q: :Q:
Ava muraliku than phone seivala :Q:
Ippadi niraya questions oda final epi Ku waiting :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாRoobini kannan 2016-06-17 10:28
Nice epi mam (y)
Thrilling ah iruNthathu
Thik thik nu heart adichetathu maM entha epi ah read panum podhu
Kothai ponnu soft heart ah iruka
Ath gokul puriche keturathu sema
Appa ellam enna sola poranga
Vetha vanthuruvala
Murali ta pesunathu vetha va
Kothai appa letter paduchetu enna sola poranga
Viki and saravana ku nalla pushiment ketaikanum :yes:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாManoRamesh 2016-06-17 09:57
Semma thirller ride.
Intha series la arambathula irunthu ippadi iruke intha ponnunu Vedha mela oru feel irunthute irunthuchu.
Innaiku she Balanced that. excellent presence of mind.
Kodhai wat an integrity.
Intha letter intha situation la logically impact pannalananum takkunu Sridharan affect avaru than.
intha situation laium Kodhai ya rasikkum Gokul ur Typical Hero.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாIshwarya Gopalan 2016-06-17 08:52
Wow... Murali great man... the bonding between gokul and kothai excellent.. waiting for the suspense...
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாvathsala r 2016-06-17 12:12
thanks a lot ishwarya gopalan. :thnkx: :thnkx: murali enakkum romba pidicha character. :yes: :yes: gokul -kothai :thnkx: :thnkx: feeling so happy. final epi padichittu sollunga.
Reply | Reply with quote | Quote
+1 # Thik Thik EpisodeChillzee Team 2016-06-17 08:32
Interesting and thrilling epi (y) (y)
Kothai romba nalla ponnu (y)
Vedha epdiyo thappika pora aana epdi varuva :Q: Oruvela ava call panathu murali ku thanaa :Q:
Kothai appa ku letter kidachute Gokula thappa nenichuduvara :Q:
Saravanan Vikki rendu perukum romba periya thandanai kidaikanum 3:) 3:)

Waiting for Ultimate episode :-)
Reply | Reply with quote | Quote
# RE: Thik Thik Episodevathsala r 2016-06-17 12:05
thanks a lot team for such a sweet comment. :thnkx: :thnkx: unga kelvikellam next week bathil kidaichidum kidaichu aaganume ;-) kandippa rendu perukkum periya thandanai kidaikkum. avanga innum niraya anubavikkanum. :yes: :yes: :thnkx: again team :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாJansi 2016-06-17 06:31
இன்னுமொரு சஸ்பென்ஸ் அத்தியாயம்.

ரொம்ப த்ரில்லா இருந்தது.

சரவணன் முன்பு செய்த தப்பை விட இப்போது செய்தது பெரிய தப்பு. 3:) ...அவனுக்கு தண்டனை உடனே கிடைப்பது..... என்ன சொல்வதென புரியவில்லை.

முரளிக்கு போன் செய்தது வேதா தானா?

வேதா எப்படி திரும்ப வந்து சேருவாள்?

கடிதத்தை படித்து கோகுல் மேல் சந்தேகம் வருமோ?

அதற்குள் கடைசி அத்தியாயமா?

வாசிக்க காத்திருக்கிறேன் :)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர்கதை - காற்றினிலே வரும் கீதம்... - 13 - வத்ஸலாvathsala r 2016-06-17 11:47
this time Jansiyodathu first comment :dance: :dance: thanks a lot Jansi :thnkx: :thnkx: saravanan senjathu migpperiya thappu. Avanukku enna thandanai kidaichathunnu naan sollave illaiye. Ennai poruthavarai maranam enabathu oru thandanai alla. inge irunthu avan anubavikka vendaama? next week solren. ella kelvikkum next week bathil solren. Yes next week kadaisi athtiyaayam. konjam big epi koduthu mudikklaamnnu irukken. kalyanaan kaatchigaloda. thanks again jansi for your sweet comment :thnkx: :thnkx:
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top