(Reading time: 18 - 35 minutes)

ரு ஆழமான மூச்சை எடுத்துக்கொண்டு காரை விட்டு கீழே இறங்கினாள் அவள். இருள் மண்டிக்கிடந்த அந்த சாலையின் இருபுறம் அடர் மரங்கள். ஒரு காட்டுக்குள் இருப்பது போன்றதொரு. எந்த ஊரில் இருக்கிறோம் என்று கூட தெரியவில்லை.

பயம் அழுத்திய போதும்... கண்ணீர் வரவில்லை அவளுக்கு. மறுபடியும் காருக்குள் ஏறி முன் சீட்டில் அமர்ந்துக்கொண்டாள் அவள். பின் சீட்டில் இருவரும் ஒருவர் மீது ஒருவர் விழுந்து கிடந்தனர். அவர்கள் விழிப்பதற்குள் பாதுகாப்பான ஒரு இடத்துக்கு சென்றாக வேண்டுமே???.

ஒரு வருடம் முன்பு கவிதாவுடன் சேர்ந்து அவள் கார் ஓட்ட பழகியது உண்டு. ஆனால்  உரிமம் பெற்ற பிறகு காரை தொட்டதே இல்லையே??? ஆனால் வேறு வழியே இல்லை. இப்போது காரை செலுத்தியே ஆக வேண்டும்.

'சாவி அதிலேயே இருக்க இயக்கினாள் அதை. சாலையில் வாகனங்கள் அதிகம் இல்லை. படபடக்கும் இதயத்துடன் காரை கிளப்ப நகர்ந்தது அது. பயந்து பயந்து அதை திருப்பி அவர்கள் முன்பு சென்றுக்கொண்டிருந்த திசைக்கு எதிர் திசையில் காரை செலுத்த ஆரம்பித்தாள் வேதா.

சீரான வேகத்தில் நகர்ந்துக்கொண்டிருந்தது கார். பயத்தில் சுவாசம் அழுந்துவது போல் ஒரு உணர்வு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சிவாஜிதாசனின் "அமேலியா" - சர்வதேச காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

காலையில் இருந்து எதுவுமே சாப்பிட வில்லையே.!!! சோர்வும் பயமும் ஒன்றாக சேர்ந்து  அழுத்த ...உடலில் நடுக்கம் பிறக்க.... எல்லாவற்றையும் தாண்டி ஜெயித்து விட வேண்டும் என்ற வேகத்திலேயே செயல் பட்டுக்கொண்டிருந்தாள் அவள். எப்போதோ கற்றுக்கொண்ட கார் டிரைவிங் இப்போது கை கொடுத்துக்கொண்டிருந்தது அவளுக்கு.

'எங்கே இருக்கிறேன்??? எங்கே போய்க்கொண்டிருக்கிறேன்??? புரியவில்லை அவளுக்கு. இந்த உலகத்தில் அவள் மட்டுமே தனியாக இருப்பது போன்றதொரு உணர்வு.

'கண்ணா... ஏதாவது ஒரு வழி காட்டு..'  

கார் நகர்ந்துக்கொண்டே இருக்க.... திடீரென  அவள் சீட்டின் பக்கத்து சீட்டில் கிடந்த அவளது பையில் இருந்து ஏதோ சத்தம். திடுக்கென்றது அவளுக்கு. கைப்பேசியின் சத்தமா அது??? ஆம். எங்கிருந்தோ அந்த கைப்பேசிக்கு வந்த குறுஞ்செய்தி எழுப்பிய சத்தம்.

'கைப்பேசியா. என் பைக்குள் கைப்பேசி இருக்கிறதா??? எப்படி வந்தது. நான் தேடும் போது இல்லையே???'

அப்போதுதான் நினைவுக்கு வந்தது அவளுக்கு. வீட்டை விட்டு அவள் கிளம்புவதற்கு முன்னால் நடந்த அந்த சம்பவம் நினைவுக்கு வந்தது அவளுக்கு.

'எனக்காக இந்த ஹெல்ப்பையானும் பண்ணு நீ' கோதை சொல்ல

'என்ன பண்ணனும் சொல்லுடா?" இவள் கேட்க

'அது... என் போனை நீ உன் பேக்லே வெச்சுக்கோ.. நான் ஒரு நிமஷம் வழியிலே கோவில்லே இறங்கி பெருமாளை கை கூப்பிட்டு வந்திடறேன். உள்ளே எடுத்துண்டு போனேன்னா பெருமாள் சேவிச்சுண்டு இருக்கறச்சே  கரெக்டா அடிக்கும்..' கோதை சொல்ல இவள் அதை வாங்கி தனது பையில் போட்டுக்கொள்ள...... அதன் பிறகு அதை அவள் வாங்கிக்கொள்ளவே இல்லையே???

'அப்படி என்றால் என் பையினுள் போன் இருக்கிறதா???' எப்படியோ சமாளித்து அவசரமாக தனது காரை சாலை ஒரமாக நிறுத்தி விட்டு பையை அவள் துழாவ இப்போது கண்ணில் பட்டது அந்த கைப்பேசி. கோதையின் கைப்பேசி.

மனமெங்கும் சந்தோஷ அருவி. 'ஜெயித்துவிட்டேன். நான் ஜெயித்துவிட்டேன். இதுவரை எட்டிப்பார்க்காத கண்ணீர் சந்தோஷத்தில் இப்போது கொஞ்சம் எட்டிப்பார்த்தது.

'யாரை அழைப்பது??? இப்போது யாரை அழைப்பது???'

அதே நேரத்தில்...

தனது ஊரை நோக்கி பயணித்துக்கொண்டிருந்தான் சரவணன். விடிந்தால் அவனுக்கு திருமணம். அவசர திருமணம். அந்த பெண்ணின் தந்தை அவனது ஊரிலேயே பெரிய பணக்காரர்.

'பொண்ணு நிறத்திலே, உயரத்திலே கொஞ்சம் கம்மிடா. உனக்கு பரவாயில்லையா???' அப்பா கேட்க...

'அதெல்லாம் எனக்கு ஒரு மேட்டரே இல்லைப்பா..' பெருந்தன்மையாக சொல்வதை போல் சொன்னான் சரவணன். 'ஆம் இவனது குறி வசதியும் பணமும் தானே...'

இவனது அப்பா அந்த திருமணத்தை நிச்சயிக்க... வேதாவை விட்டு விடுவது என நான்கு நாட்கள் முன்னாலேயே முடிவெடுத்து விட்டிருந்தான் சரவணன். ஆனால் விக்கி கொடுத்த தொந்தரவின் காரணமாகவே அவளை அவனிடம் அழைத்து வந்து விட்டிருந்தான் அவன். கடைசியாக அவள் வீட்டை விட்டு கிளம்பும் போது அவளுடன் பேசியது கூட விக்கியே.

'பெருமை சரவணனுக்கு. எல்லோரையும்... எல்லாவற்றையும் ஜெயித்து விட்டதை போன்றதொரு பெருமை சரவணனுக்கு...' அசுர வேகத்தில் அவனது ஊரை நோக்கி சென்றுக்கொண்டிருந்தது அவன் பயணித்துக்கொண்டிருந்த டாக்சி... அதே வேகத்தில் எதிர்ப்பக்கத்தில் வந்துக்கொண்டிருந்தது அந்த லாரி..... அவன் அருகில் அமர்ந்து அவனை பார்த்து சிரித்துக்கொண்டிருந்தன அவன் செய்த பாவங்கள். அதற்கான தண்டனைகளை அவன் அனுபவிக்க வேண்டாமா என்ன???

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.