(Reading time: 18 - 35 minutes)

'வளை முதன் முதலில் பார்த்த போது... நாய் குட்டிக்கு பயந்து ஓடிச்சென்று அப்பாவின் பின்னால் அமர்ந்துக்கொண்ட போது அவனை கொஞ்சமாக எட்டிப்பார்த்து சிரித்தனவே அவள் கண்கள்... அதே போன்றதொரு ஒற்றை பார்வை போதுமே....' அவனுக்குள்ளே சின்னதாக ஒரு ஏக்கம் பிறக்க....

சட்டென தன்னை தானே கடிந்துக்கொள்ளவும் செய்தான் அவன் 'ச்சே எத்தனை சுயநலமாக யோசிக்கிறேன் நான்???'

கார் ஒரு சிக்னலில் சென்று நின்றது. மெல்ல அவள் பக்கம் திரும்பினான் கோகுல்.

'ஒரு வாட்டி திரும்பி தான் பாரேன்' உதடுகள் சொல்ல தவித்த நேரத்தில்,,,,

அவர்கள் காருக்கு அருகில் வந்து நின்றது இன்னொரு கார். அந்த காரின் ஜன்னலிலிருந்து சட்டென வெளியே எட்டிப்பார்த்தது ஒரு பெரிய நாய். அவளை நோக்கி அது ஒரு காலை நீட்ட... திடுக்கிட்டு அவள் சற்று பின்னால் தள்ளிக்கொண்ட நிலையில் இருவரது மனமும் அதே பழைய புள்ளியை தோட...

இறுக்கம் தளர்ந்த இள நகையுடன் அவள் அவன் பக்கம் திரும்ப.... குளிர் சாரல் அவனிடம்.

'போதும்... இப்போதைக்கு இது போதும்....' அவன் காரை கிளப்பிய வேகத்திலேயே அவனது சந்தோஷம் புரிந்தது கோதைக்கு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

நேற்று இரவு....

காரில் படுத்திருந்த வேதாவின் கையில் இருந்தது அந்த சின்ன கண்ணாடி பாட்டில். அதனுள்ளே இருந்தன தூக்க மாத்திரைகள். இரண்டு நாட்களுக்கு முன் அவளது அப்பா வாங்கி வர சொன்ன மாத்திரைகள் அவை. அவரிடம் அவற்றை கொடுக்க மறந்திருந்தாள் அவள்.

'இத்தனை மாத்திரைகளையும் அருகில் இருக்கும் அந்த தண்ணீர் பாட்டிலில் கலந்து விட்டால்???' அதை அவர்கள் இருவரும் அருந்தினால்???

'இது சாத்தியமா??? நடப்பது சாத்தியமா??? அதுவும் ஒரே நேரத்தில் இருவரும் அந்த தண்ணீரை அருந்த வேண்டுமே??? சரி ஒருவன் மயங்கினால் கூட சமாளித்து விடலாம். பார்ப்போம்.

சத்தம் இல்லாமல் அந்த தண்ணீர் பாட்டிலை திறந்து அதில் அந்த மாத்திரைகளை போட்டிருந்தாள் வேதா. சில நிமிடங்கள் கடக்க அப்படியே படுத்திருந்தாள் அவள். மாத்திரைகள் நீருக்குள் கரைய ஆரம்பித்திருந்தன. அவர்கள் இதை அருந்த வேண்டுமே???'

'கண்ணா....' மெல்ல உச்சரித்தன அவளது உதடுகள். சரியாக அந்த நொடியில் அருகில் இருந்தவனை பார்த்து கேட்டான் விக்கி.

'தண்ணி பாட்டில் எங்கேடா???'

'எந்த தண்ணி???'

'ஆங்... இப்போ குடி தண்ணி மட்டும் தான். மத்தது எல்லாம் காரியம் முடிஞ்சதும் பார்த்துப்போம்...' என்றபடியே அவன் திரும்ப கண்களை மூடிக்கொண்டு அசையமால் படுத்திருந்தாள் வேதா.

கொஞ்சம் எட்டி  அந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக்கொண்டவன் சொன்னான்

'இன்னும் மயக்கமா தான் கிடக்கா... சீக்கிரம் போடா... இவளை அவனுங்க கிட்டே தூக்கி போட்டுடணும். ஒரு காலத்திலே நான் இவளை லவ் பண்ணேன்டா. என்னை வேண்டாம்னு சொல்லிட்டா... நான் நல்லவன் இல்லைன்னு என்னை தூக்கி போட்டுட்டா... அப்போ முடிவு பண்ணேன்... எனக்கு இவ வேண்டாம் ஆனா... இவ வாழ்கை சீரழியணும்ன்னு முடிவு பண்ணேன்... ' தண்ணீர் பாட்டிலை திறந்து வாயில் கவிழ்த்துக்கொண்டான் விக்கி.

அவன் பேசுவதை கேட்க கேட்க ரத்தம் கொதித்தது வேதாவுக்கு.  கொஞ்சம் தண்ணீரை அருந்திவிட்டு தொடர்ந்தான் விக்கி......

'அந்த சரவணனை வெச்சு ஏதாவது செய்யலாம்னு பார்த்தேன்... அவன் குறிக்கோள் பணம் வேறே ஒரு பணக்கார பொண்ணு கிடைச்சதும் பாதியிலேயே கழண்டுகிட்டான்... அதான் இவளை விலை பேசிட்டேன்... முடிஞ்சது. இன்னையோட இவள் வாழ்கை முடிஞ்சது...' சொல்லியபடியே விக்கி சிரிக்க அவனுடனே இணைந்துக்கொண்டே அந்த தண்ணீர் பாட்டிலை வாங்கி நீரை அருந்தினான் அருகில் இருந்தவன்.

கிட்டதட்ட பாட்டிலில் இருந்த மொத்த நீரையும் இருவரும் சேர்ந்து அருந்திவிட எல்லாவற்றையும்  கவனித்த படியே மூச்சை அடக்கிக்கொண்டு படுத்திருந்தாள் வேதா.

'தண்ணி ஏன்டா ஒரு மாதிரி இருக்கு? ஒரு வேளை பழைய தண்ணியா இருக்குமோ???' இருவரும் பேசிக்கொள்ள தடதடத்தது வேதாவின் இதயம்.

சில நிமிடங்கள் கடக்க 'தலை சுத்துறா மாதிரி இருக்குடா. நீ கொஞ்சம் கார் ஒட்டறியா என்றான் அவன். விக்கியின் நிலையம் கிட்டதட்ட அதே என்பதால், கொஞ்சம் தடுமாற்றத்துடன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினர் இருவரும்.

மெல்ல எழுந்து அமர்ந்தாள் வேதா. தடுமாறியபடியே திரும்பிய விக்கியின் கண்ணில் வேதா. பட...

'டேய்... அவ முழுசிட்டாடா...' என்றான் அவன். இருவரும் வேகமாக காரின் பின் சீட்டில் ஏற... இருவரையும் தனது பையால் மாறி மாறி அடிக்க துவங்கினாள் வேதா. மாத்திரையின் தாக்கத்தில் அரை மயக்க நிலையில் இருந்தவர்களால் அவளை தடுக்க முடியவில்லை. சில நொடிகளில் இருவரும் கார் சீட்டிலேயே மயங்கி விழுந்திருந்தனர்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.