(Reading time: 14 - 28 minutes)

03. தமிழுக்கு புகழ் என்று பேர் - புவனேஸ்வரி கலைச்செல்வி

Tamilukku pugazh endru per

"மிழ் வெட்ஸ்  யாழினி " அந்த அழைப்பிதழை பார்த்தவனின் நினைவலைகள் பேயாட்டம் போட்டன .. கண்ணீரும் கோபமும் பொங்கிட யாழினி தன்னை பார்த்த பார்வை அவனின் கண்முன் நின்றது.. அதை உணர்ந்து தணிந்திடும் பொறுமை அவனிடம் இல்லாமல் இருந்தது அன்று .. அவன் மட்டும் கொஞ்சம் பொறுமையாய் இருந்திருந்தால் இந்த மூன்று வருடங்கள் இப்படியா அர்த்தமே இல்லாமல் கடந்திருக்கும்.. ?

ஆணுக்கும் அழுகைக்கும் இருக்கும் பந்தம் மிக அழகானது .. உணர்வு பூர்வமானது ... இல்லாதவர்களுக்குத் தான் அருமை தெரியும் என்ற வாசகம் கேட்டது உண்டா ? ஆண்களின் கண்ணீரும் கூட அப்படித்தான் .. அதென்னவோ , அழுகையை பொறுத்தவரை பெண்ணுக்கு நாம் கொடுத்த சுதந்திரம் ஆணுக்கு கொடுக்காமல் போய்விட்டோம் .. அழுவதற்கு சுதந்திரம் இருந்ததாலோ என்னவோ ஒரு பெண் தனது வலியையோ  அல்லது இழப்பையோ கண்ணீரில் வெளிப்படுத்த தயங்குவதே இல்லை .. அவளை சுற்றி உள்ளவர்களுக்கும் இது பழகி போனதாக இருக்கும் .. "அழுகிறாயா ?" என்று அக்கறை ஆரம்பித்து , " அவள் அழுமூஞ்சித்தான் " என்று பட்டபெயர் வாங்கும் அழவிற்கு சுதந்திரம் இருக்கிறது .. ஆனால் ஆண்களுக்கு ? இதுவரை ஒரு ஆணை கைக்காட்டி "இவன் சரியான அழுமூஞ்சி" என்று கைகாட்டி இருக்கிறோமா ? அதானலோ என்னவோ , ஆண்கள் எளிதில் அழுவதில்லை ..சின்ன சின்ன துயரங்களுக்கு அவர்கள் கண்ணீரை ஆயுதமாய் பயன்படுத்துவதாய்  இல்லை .. இதை எல்லாம் மறந்து ஓர் ஆண்  அழுகிறான் என்றால் , அவன் தனக்கான தடைகளை உடைத்து துவண்டு கொண்டிருக்கிறான் என்றுத்தான் அர்த்தம் ..

இதோ இங்கும் மொத்தமாய் உடைந்திருந்தான் புகழ் .. அவன் கண்களில் உருவாகி கன்னங்களில் தவழ்ந்து அந்த பத்திரிகை மீது விழுந்தது முதல் கண்ணீர் துளி .. சரியாய் அதேவேளை  அந்த அறையில் கதவை திறந்தான் தமிழ்..

"புகழ் !!!!!"என்று மூச்சிரைக்க ஓடி வந்தவனின் காலடியில் அதே திருமண அழைப்பிதழ் கிடந்தது..அந்த அறை முழுக்க, திருமண அழைப்பிதழ் சிதறி கிடந்தது ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

" என்னை வெறுத்து விடுங்க தமிழ் .. இந்த கல்யாணத்தை வேணாம்னு சொன்னதுக்கு தண்டனையா என்னை விட்டுட்டு போயிருங்க " கண்ணீருடன் யாழினி அவனிடம் மூன்று வருடங்களுக்கு முன்பு சொன்ன வார்த்தைகள் காதில் விழுந்தன ..

" ச்ச ... என்ன இது ? வேணாம் பழசு எதையுமே நினைக்க வேண்டாம் "என்று தனக்குத் தானே கூறி கொண்டான் தமிழ் ..

" புகழ் , நீ இங்க என்ன பண்ணுற ?நீ இந்த ரூமில் தங்க வேண்டாம் !"

" ஏன் ?"

"ஏன்னா ... ஏன்னா ...ஆங் ..இந்த ரூமை சுத்தம் பண்ணனும் ..பாரு எவ்வளவு தூசியாய் இருக்குன்னு ... கிளீன் பண்ணின பிறகு நீ இங்க வந்துக்க "என்றான் தமிழ் சமாளிப்பாய் ..

" உண்மையை மறைக்காத தமிழ் .. யாழினி தானே உன்னை அனுப்பி வைச்சா ?"

" அது வந்து .."

"இல்லன்னா நீ இல்லன்னு சொல்லி இருப்பியே தமிழ் ..." என்றவன் தமிழை பார்த்து ," நீ ரொம்ப மாறிட்ட தமிழ் " என்றான் .. சற்றுமுன் யாழினி கூறிய அதே வார்த்தைகள் ! இதழில் மென்னகை தவழ " என்னதான் சண்டையோ உங்க ரெண்டு பேருக்கும் ... ஆனா பேசுறது மட்டும் ஒரே மாதிரி ! அவளும் இதேதான் சொன்னா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி"என்றான் ..

" சரி உனக்கு எந்த வேலையுமில்லன்னா கொஞ்சம் உதவி செய் , ரூமை கொஞ்சம் பெருக்கி சுத்தம் பண்ணிடலாம் "

" ஐயோ , அந்த ராட்சசிகிட்ட என்னை மாட்டி விட பார்க்குறியா ? வேணாம்டா... நான்தான் சொல்லுறேன்ல ? வேற ரூமுக்கு போகலாம் .. "

" அவ ஏன் அப்படி சொல்லி இருப்பான்னு எனக்கு நல்லாவே தெரியும் டா.. நான் பார்த்துக்குறேன் .. அவளை சமாளிக்க உனக்கு சொல்லியா தரனும் ? இன்னும் நீ என்னென்னமோ சமாளிக்கணும் டா " என்றான் புகழ் .. உண்மைதான் ! எதற்கும் தயாராகிய பிறகுத்தான் புகழை அந்த வீட்டிற்கே அழைத்து வந்தான் தமிழ் .. அப்படி இருக்கையில் இதை கூட சமாளிக்க மாட்டானா ? அடுத்த அரைமணி நேரத்தில் கீழே கிடந்தபொருட்களை ஒரு புறமாய் அப்புரபடுத்திவிட்டு, அறையை சுத்தம் செய்தனர் இருவரும் ..

"பெட் இன்னும் தூசியா இருக்கு டா ... ஹே பரவாயில்ல...நான் எப்பவும் அந்த சோபாவில் தான் படுப்பேன் .." என்று புகழ் ஒரு சோபாவை காட்ட  , அப்போதுதான் அந்த கதவை பார்த்தான் தமிழ் .. இத்தனை நாளாய் அந்த அறைக்குள் அவன் வந்ததே இல்லை என்பதினால் அப்போதுதான் அந்த அறையில் இருந்த கதவை கவனித்தான் .. இதே போன்றகதவு யாழினியின் அறையிலும் இருந்தது .. இரண்டும் ஒரே கதவோ ?? குழப்பமாய் புகழை பார்த்து கேட்டான் ..

" புகழ் ..இதென்ன கதவு ??"

"...." அமைதியாய் அந்த கதவையே பார்த்தான் புகழ் .. உடல் மட்டும் அங்கிருக்க அவனின் மனமோ  அன்றைய நாட்களை அசைப்போட  தொடங்கி இருந்தது ..

" டேய் புகழ் "என்று அவனை உலுக்கினான் தமிழ் ..

"என்னடா "

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.