(Reading time: 14 - 28 minutes)

" தென்ன கதவு ?"

"நீ யாழினி ரூமுக்கு போனதே இல்லையா தமிழ் ?இது இன்டர் கனெக்டிங் டோர் (inter connecting door) ..நான் எப்போ இங்க தங்கினாலும் நானும் அவளும் இந்த கதவை திறந்து வெச்சுட்டு விடிய விடிய கதை பேசுவோம் .."என்றான் அன்றைய நினைவில் கரைந்த குரலில் ..

" ஆமா உனக்கிது தெரியாதா ? எப்படி டீ டா ?"

" ஒரேஒரு தடவை அவகிட்ட கேட்டேன் டா .. ஆனா அவள்பதில்சொல்லாமல் லைட்டா அழுதாள் .. அதுக்கு அப்பறம் நானும் கேட்கல .."

" ம்ம்ம்ம் நினைவுகள் தமிழ் ! ..சிரிச்ச நொடிகளை நினைத்து பார்க்குறப்போ அழுவோம் .. அழுத நொடிகளை நினைத்து பார்க்கும்போது சிரிப்போம்..அதான் நினைவுகளின் பவர் " என்றான் அவன் ..

" சரி லேட்டாச்சு ..நீ  தூங்கு !!"

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...

படிக்க தவறாதீர்கள்...

"நீ ?"

" நான் யாழினியை பார்த்துட்டு வரேன் ..குட் நைட் டா "

"குட் நைட் தமிழ் "

யாழினியின் அறை  ..! வழக்கம் போல பூனை நடைப்போட்டு நடக்க முயன்றான் தமிழ் ..அதற்குள் அவளே அவன் எதிரில் கை கட்டி நின்றாள் ..

" ஹே தத்தி தூங்கலையா நீ ?" அதிர்ச்சியை சமாளித்து கொண்டு இயல்பாய் கேட்டான் தமிழ்.

" ஓஹோ நீ ? நல்லா தூங்கிட்டு வர்றியோ ?"

" இல்லடி அது வந்து "

" சேவகம் எல்லாம் முடிஞ்சதா ?நான் சொல்லசொல்ல கேட்காமல் அவனை அந்த ரூமில் தங்க வைச்சிருக்க நீ !"

"ஹே இல்லை டீ ... நான் வர்றதுக்குள்ள  அவன் உள்ளே போயிருந்தான் .."

" ஆமா நீ , நத்தை மாதிரி நகர்ந்தால் லேட்டாத்தான் போவ "

"  சரி நீ தூங்கலையா ?"

" பேச்சை மாற்றாதே தமிழ் "

"ஷ்ஷ்ஷ்ஷ் ..கத்தாதே டீ பிசாசே ..எம்டன் முழிச்சாருன்னா என்ன ஆகும் ?" .. அடுத்த நொடியே கப்சிப் என்றாகிவிட்டாள்  யாழினி..ஆனால் கண்கள் மட்டும் மீண்டும் கலங்கியது ..

" என்னடா ?" என்றான் தமிழ் ..அவன் கழுத்தை கட்டிக்கொண்டு சலுகையாய் சாய்ந்து கொண்டாள் ..அவனின் வலது கரம் அடுத்த நொடியே ஆதரவாய் அவளின் கூந்தலை வருடியது ..

" பயம்மா இருக்கு தமிழ் "

".."

"என்னால முடியாது தமிழ் ... இன்னொரு தடவை என்னால் வலி தாங்க முடியாது .. எல்லாரையும்விட உனக்குத்தான்  என்னை நல்லா தெரியும் ..எதுக்கு இதெல்லாம் பண்ணுற நீ ?"

" நமக்காக ...மாமாவுக்காக..புகழ் ..அவனுக்காகவும் தான் !"

"எல்லாம் சரியாதானே போய்ட்டு இருக்கு ..நான்தான் அவனை மறந்துட்டேனே ! "

"அப்படின்னு உன் வாய் தான் சொல்லுது மனசு இல்லை "

" என் மனசுல நீ தான் இருக்க "

"தெரியும் .., அதனாலத்தான் உன் மனசுல என்னல்லாம் நடக்குதுன்னு எனக்கு தெரியுது ".. அவனை நிமிர்ந்து பார்த்தாள்  யாழினி..

" இதுதான் உன் ஜோக்கா ? சகிக்கல "

" உண்மையை சொன்னேன் டீ .. "

" கிழிச்ச !! "

"சரி தூங்கு டீ .."

"தூக்கம் வரல "

" எனக்கு வருது டீ "

" அப்போ நீ தூங்கு "

" நீ தூங்காமல் நான் எப்போ தூங்கி இருக்கேன் ?"

" என்னை ஏன் இவ்வளவு லவ் பண்ணுற தமிழ் ? நான் உன்னை ரொம்ப சுயநலமாய் பயன்படுத்தி இருக்கேன் .."

"ஷாபா ...நீ அடங்க மாட்ட..வா நாம நம்ம கதையை படிச்சுகிட்டே தூங்கலாம்" என்றபடி தனது டைரியை எடுத்தான் தமிழ் .. அது அவர்களின் வழக்கம் ! அவர்களது இனிய நினைவுகளை அவன் டைரியில் குறித்து வைத்திருந்தான் .. இருவரும் சோகமாய் இருக்கும் தினத்தில் அதை படித்து கொண்டே அன்றைய நாட்களை பற்றி பேசிக்கொண்டே உறங்குவார்கள் .. டைரியை திறந்தான் தமிழ் ..

அதே நேரம் சோபாவில் படுத்திருந்த புகழும் தனது அகக்கதவைத் திறந்து , முதல் முறையாய் யாழினியை சந்தித்ததை நினைவு கூர்ந்தான் ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.