(Reading time: 14 - 28 minutes)

" புகழும் நானும் சின்ன வயசுல இருந்தே  ப்ரண்ட்ஸ்  ... அவன் எங்கள் பக்கத்து வீட்டில் தான் குடியிருந்தான் .. என் அப்பா மிலிட்டரி மென் ..ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு ... அவருக்கு நானும் புகழும் ப்ரண்ட்ஸ் ஆ இருக்குறது பிடிக்காது ,... அதுனால  நானும் அவனும் சீக்ரட்டா தான் மீட் பண்ணுவோம் .. ஒருதடவை எனக்கு காய்ச்சல் வந்துருச்சு .. புகழ்  எனக்காக மலை மேல இருக்குற முருகர் கோவில்ல வேண்டி பிரசாதம் கொண்டு வந்து தந்தான் ..அதுக்கு அப்பறம் தான் எனக்கு குணமானிச்சு ...

அன்னையில இருந்து  நானும் புகழும் வாராவாரம் அந்த முருகர் கோவிலில் சாமி கும்பிடுவோம் .. எங்க நட்பும்  வேற லெவல்ல இருந்துச்சு .. அப்போத்தான் எங்கப்பாவுக்கு டிரான்ஸ்வர் கிடைச்சு , நாங்க பிரிஞ்சிட்டோம் " என்றாள் சிரிக்காமல்  ..

" அய்யோ அப்பறம் ?"

"அப்பறம் வருஷா வருஷம், என் பிறந்தநாள் அன்னைக்கு அதே கோவிலில் நாங்க மீட் பண்ணிப்போம் ..இப்போ புகழ்காக தான் நான் இந்த காலேஜே வந்தேன் " என்று கதையை முடித்து அவள் கை நீட்டவும் அவளுக்கு ஹை 5 கொடுத்தான் புகழ் ..

" உம்ம்ம்ம் .. செம்ம நட்பு யாழினி " என்று குமரன் கூறவும் , சிரிப்பை மறைப்பதற்கு பெரும் பாடு பட்டாள்  யாழினி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

" சரி புகழ் , குமரன் நான் ப்ரின்சியை பார்க்கணும் .. அப்பறமா கிளாசில் பார்க்கலாம் .. குமரா உனக்கு அதிரசம் ரொம்ப பிடிச்சது போல ,நாளைக்கு நிறைய கொண்டு வரேன் .. பாய் " என்றபடி சிட்டாய் பறந்தாள் யாழினி...மழை பெய்து ஓய்ந்தது போல இருந்தது அவ்விடம் ..அவள் பேசி சென்ற வார்த்தைகளால் விரிந்திருந்த புகழின் இதழ்கள் அப்படியே சிரித்திருந்தன ...

"செம்ம ஜோடி தல "

"யாருடா ?"

"நீயும் யாழினியும் "

"டேய் !!"

"தல உன்கூடவே இருக்குறேன் நான் .. எனக்கு தோணுது யாழினி தான் உனக்கு சரியான ஜோடி "

"என்னடா உளறிட்டு இருக்க ?"

"ஹனுமாரை முருகர்ன்னு மாத்தி கதை சொன்னா,நான் நம்பிடுவேனா ? அது தித்திக்குதே படக்கதை தானே ?" என்று சிரித்தான் குமரன் ..

"அடப்பாவி.. அப்போ அவ பொய் சொல்றான்னு உனக்கு தெரியுமா?"

"அவள்  பொய் சொன்னதும் தெரியும் அதை நீ ரசிச்சதும் தெரியும் .. இந்த மாதிரி ஹியுமர் சென்ஸ் உள்ள பொண்ணுங்களை பார்க்குறது  கஷ்டம் தல ... எனக்கு என்னமோ அவ தான் உன் ஆளுன்னு தோணுது " என்றான் குமரன் .. குமரன் பேச்சுக்கு பதில் கூறாமல் தோள் குலுக்கி கொண்டான் புகழ் .. அவனின் பார்வையோ அனிச்சையாய் ,அவள் நடந்து சென்ற பாதையை பார்த்து கொண்டிருந்தது !!

அந்த நினைவோடு நம்ம நித்திரா தேவியும் புகழை தழுவிக்கொள்ள, அதற்கு மேல நாம ப்ளாஷ் பேக் பத்தி தெரிஞ்சுக்க முடியாது என்ற காரணத்தினால்,இப்போ நாம தமிழின் கதைக்கு போவோம் ..

தே 2013 (தமிழின் நினைவுகள் )

அப்படி இப்படின்னு கஷ்டபட்டு எட்டு போட்டு லைசன்ஸ்  எடுத்த சந்தோஷத்தில் தோழியின் ஸ்கூட்டரை ஓட்டி கொண்டிருந்தாள் யாழினி .. அவளது சின்ன சின்ன லட்சியங்களில் ஸ்கூட்டர் ஓட்டுவதும் ஒன்று ! நம்ம எம்டன் அப்பாவுக்கு தெரியாமல் இதை சாதித்து விட்டதில் கூடுதல் மகிழ்ச்சி .. "என்றென்றும் புன்னகை முடிவில்லா புன்னகை " நம்ம மேடியின் பாடலை கேட்டுக் கொண்டே தலையசைத்து கொண்டு போனவள் தன்னை நோக்கி ஒரு சைக்கிள் வரவும் , தன்னை காப்பாற்றிக் கொள்ளும் நல்லெண்ணத்தின் ஒரு சுவர் மீது இடித்து நின்றாள் ..

"டேய் "என்று அவள் சீரியதுமே 14-15 வயதுள்ள சிறுவன்

"அக்கா சாரிக்கா ..கார் வந்துருச்சு குறுக்க ,. அதான் இந்த பக்கமா வந்துட்டேன் " என்றான் .. அவன் சொல்வதில் உண்மை இருக்குமா இல்லையா ?  என்ற ஆராய்ச்சி கூட அவளுக்கு தோன்றவில்லை .."பாவம் சின்ன பையன் .. அந்த கார் இடிச்சிருந்தா என்ன  ஆயிருக்கும் ?" என்ற ஆதங்கமே தோன்றியது ..

" அந்த கருப்பு கலர் காரா டா ?" என்று தோராயமாய் அவள் ஒரு காரை காட்ட ,தன் மீது இருந்த தவறில் இருந்து தப்பிக்கநினைத்தவன்

"ஆ ...ஆமா அக்கா " என்றான் ..

"உன் பேரு என்ன ?"

"கமல் அக்கா "

" கமல் நீ பத்திரமா போடா ..அந்த கார் காரனை நான் பார்த்துக்குறேன் " என்றவள் மீண்டும் சிட்டாய் பறந்துவிட்டாள் .. ஒருவழியாய் அந்த காரை ஓவர்டேக் செய்து தனது ஸ்கூட்டியை காரின் முன் நிறுத்தி கை கட்டி நின்றாள் ..

" டேம் இட் ... யாரிது ? ஏற்கனவேநான் லேட்டு ..இதுல இவ வேற " என்று கருவியப்படி கார் கண்ணாடியை இறக்கி தலையை மட்டும் வெளியில் நீட்டினான் .. அவன் முகத்தில் கொஞ்சமும் இளக்கம் இல்லை ..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.