(Reading time: 18 - 35 minutes)

டுத்துக்கொண்ட படியே கண்களை சுற்றும் முற்றும் சுழல விட்டவளுக்கு கண்ணில் பட்டது அவளது சீட்டில் அவளருகே இருந்த தண்ணீர் பாட்டில். 'இதை வைத்துக்கொண்டு என்ன செய்ய???' யோசித்தபடியே அவள் சற்றே திரும்ப. சீட்டின் கீழே கிடந்தது அவளது பை.

'இதற்குள் ஏதாவது இருக்குமா??? அவள் கை மெதுவாக அதை துழாவ அவள் கையில் தட்டுப்பட்டது அது!!!! இது உதுவுமா இது சரியாக வருமா??? யோசித்தபடியே அதை கையில் எடுத்தாள் வேதா.

ன்று.....

அங்கே கோதையின் வீட்டில் நின்றிருந்தான் கோகுல்.

'கோதைப்பொண்ணு கிளம்புடா நாம ரிஜிஸ்டர் ஆபீஸ் போறோம்...' அவன் சொல்ல கோதை மெல்ல எழுந்துக்கொள்ள

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிரேமாவின் "கண்ணாமூச்சி ரே ரே.." - காதல் கலந்த குடும்ப கதை...

படிக்க தவறாதீர்கள்...

'வேண்டாம் மாப்பிள்ளை.. வேதாவும் வந்துடட்டும். அதுக்கு அப்புறமே கல்யாணம் நடக்கட்டும் அதுதான் எல்லாருக்கும் நல்லது ... ' சொன்னார் ஸ்ரீதரன்.

'வேதா வரதுக்கும் எங்க கல்யாணத்துக்கும் என்ன சம்மந்தம்???' சட்டென கேட்டான் கோகுல்.  'அவா வந்ததும் வேதா முரளி கல்யாணம் ஜாம் ஜாம்ன்னு நடக்கும். அதை பத்தி கவலை படாதேள். . இப்போ வாங்கோ கிளம்பலாம்.' அவன் நகர எத்தனிக்க

'இல்லை மாப்பிள்ளை...' நகரவில்லை ஸ்ரீதரன். 'நேக்கு ரெண்டு பொண்களும் ஒண்ணுதான். பெரியவோ இருக்கும் போது... சின்னவளுக்கு பண்ணப்படாது ரெண்டும் ஒண்ணாவே நடக்கட்டுமே. அக்னி சாட்சியா கல்யாணம் ஆனதுக்கு அப்புறமே ரிஜிஸ்டர் கல்யாணம் பண்ணிக்கலாமே' அவர் முடிக்கவில்லை...

'சொன்னா புரிஞ்சுக்க மாட்டேளா???' சற்று உயர்ந்தே வெளிவந்தது கோகுலின் குரல். கொஞ்சம் அதிர்ந்துதான் போனாள் கோதை. அவள் முக மாற்றத்தில் சட்டென தணிந்தான் அவன்.

'சித்த புரிஞ்சுக்கோங்கோ... எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு ஆத்திலே எல்லாரும் அங்கே வந்து காத்துண்டிருப்பா... கிளம்புங்கோ ப்ளீஸ்...'

மனமில்லை. சத்தியமாக மனமில்லை ஸ்ரீதரனுக்கு. வேறே வழியே  இல்லாமல் கிளம்பினார் அவர்.

சில நிமிடங்களில்..... அவனருகில் முன் சீட்டில் கோதை அமர்ந்திருக்க... பின் சீட்டில் அவளது தந்தை அமர்ந்திருக்க... காருக்குள்ளே மௌனம் அரசாட்சி செய்துக்கொண்டிருக்க காரை செலுத்திக்கொண்டிருந்தான் கோகுல். அது ரிஜிஸ்டர் ஆபீஸ் நோக்கி  பறந்துகொண்டிருந்தது.

அதே நேரத்தில்... கோகுலின்  வீட்டில்...

இரண்டு பெற்றோர்களும், முரளியும் வீட்டை விட்டு படி இறங்க... அந்த நொடியில் அவனது எண்ணுக்கு வந்தது அந்த அழைப்பு...

'ஹலோ...' என்றான் அவன்.

மறுமுனை ஏதோ சொல்லிக்கொண்டிருக்க, பதில் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தவனின் முகத்தில் சில மாறுதல்கள்... அங்கே இருந்த பெற்றவர்கள் இவன் முகத்தையே படிக்க முயல.... அடுத்த நொடியில் மிக இயல்பான புன்னகை தொற்றிக்கொண்டது அவனது இதழ்களில்...

'திருடன்..... திருடன்.... என்னமா நடிக்கறான் பார்... ' தனக்குள்ளே சொல்லிக்கொண்டார் யசோதா. எதிர் முனையில் ஏதோ ஒரு பிரச்சனை என்பதை மட்டும் அவரால் நன்றாக உணர முடிந்தது.

சில நொடிகள் கழித்து 'குட்... வெரி குட்...'  என்றான் அவன்.

'..................................................'

'ம்.... '

................................................

'ம்......................' அவனுடைய அப்பாவின் முகத்தில் கொஞ்சம் சந்தேக ரேகைகள்.

மறுமுனை எதையோ சொல்ல சில நோடி யோசனை அவனுக்குள்ளே... அதன் பிறகு.....

'நேக்கு டூ ஆர் த்ரீ ஹவர்ஸ் டைம் குடுக்க முடியுமா???' என்றான் முரளி.  'ஏன்னா இன்னைக்கு என் தம்பியோட கல்யாணம்...'

...............................................................................

'ம்............. ஆமாம்....... அதனாலே அது முடிஞ்சதுக்கு அப்புறமா நான் போன் பண்றேன் சரியா??? புரிஞ்சதா??? டேக் கேர்....' அழைப்பை துண்டித்தான் முரளி. அவனை சுற்றி இருந்த எந்த கண்களும் இமைக்க வில்லை.

'என்னத்துக்கு எல்லாரும் என்னை இப்படி பாக்கறேள். கிளம்புங்கோ... டைம் ஆச்சு...'

'யாருடா போன்லே???' யோசனையான குரலில் கேட்டார் அப்பா.

'ஃப்ரெண்ட்பா... நாம கிளம்பலாம்....' டிரைவரிடமிருந்தது சாவியை வாங்கிக்கொண்டு அவன் காரை கிளப்ப அனைவரும் பதில் பேசாமல் ஏறிக்கொண்டனர்.

இங்கே கோகுலின் பக்கம் திரும்பவே இல்லை கோதை. ஜன்னலுக்கு வெளியிலேயே கிடந்தன அவள் கண்கள்.

'நிச்சியமாக அவளால் முழு மனதுடன் இந்த நிகழ்வில் ஈடு பட முடியாது தான்..' அவள் மனநிலை புரிந்திருந்த போதிலும் சமாதானம் அடைய மறுத்தது அவனுள்ளம்..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.