(Reading time: 13 - 26 minutes)

02. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

ரிங் ஆகிக்கொண்டே இருக்கும் போனை எடுக்கலாமா வேண்டாமா என்ற பெரிய ஆராய்ச்சிக்குப் பின் போனை எடுத்தான் யஷ்வந்த்.

அவனது அப்பா ஸ்பீக்கரில் போடவும்,“எங்கடா மாமா இருக்க”என்ற பெண்  குரல் கேட்கவுமே,குமார் அமைதியாக இருக்காமல் தன் மனைவியிடம்,”உனக்கு தம்பி பொண்ணு எதுவும் இருக்கா தாமரை..நான்  தான் மறந்துட்டனா”என்று அவர் பங்குக்கு எடுத்துக் கொடுக்க,

“அப்படி மட்டும் இருந்திருந்தா,இந்நேரம் அழுகாச்சி நாடகம் நடத்தியாவது இவனுக்கு கட்டி வைச்சிருக்க மாட்டேனா”என்று அங்கலாய்த்துக் கொண்டார்.

அவர்கள் பேசியது மறுபுறம் கேட்டுவிட,”சாரி..இது சரணோட போன் தானே”தயக்கத்துடன் அவந்திகா கேட்கவும்,

“சரண்  என்னோட போனை மாத்தி எடுத்துட்டுப் போயிட்டான்.எதுவும் முக்கியமான விஷயம்னா சொல்லுங்க.நான் கூப்பிட்டு சொல்றேன்”என்றான்.

“கான்பிரன்ஸ்ல அவனை கூப்பிடறீங்களா..உங்க போன் அவன்கிட்ட தானே இருக்கும்”எனவும்,நம்பாமல் கேட்கிறாள் என்று எண்ணிக்கொண்டவன் சரணுடன் தன் இணைப்பை இணைத்தான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

அதே நேரம் ‘நண்பர்கள்  போல’ என்று  எண்ணிக்கொண்ட யஷ்வந்தின் பெற்றோர்கள் ‘சுவாரசியம் இருக்காது’ என்பதால் வேறுபக்கம் நகர்ந்துவிட்டனர்.

சரண் அழைப்பை ஏற்ற உடன்,”ஏண்டா அறிவுகெட்ட மரமண்டை மாமா.ஹாசினையை  எங்கடா கூட்டிட்டுப் போன..இப்போ நீ மட்டும் கொண்டு வந்து விடலை..நீ கடத்திட்டுப் போனதா சொல்லி,போலிஸ்ல கம்பிளைன்ட் பண்ணிடுவேன்..”என்று மிரட்டினாள்.

“ஹான்..நீ இப்படி எல்லாம் பேசினா நான் பயந்துடுவேனா..என்  நண்பன்  சாட்சிக்கு இருக்கான்”

“அவன்  உனக்கு  துணைன்னு சொல்லி,அவனையும் சேர்த்து உள்ள வைச்சிடுவேன்”என்று கத்தவும்,யஸ்வந்த் போனை தன்னிடமிருந்து சற்று தள்ளி வைத்தான்.

‘என்னமா பேசறா’நொந்து கொண்டவன்,மறுபடியும் போனை காதுக்கு வைக்க,

“இப்போ மட்டும்  நீ வரலைன்னா,உன்னை ஹாசினியோட அப்பாகிட்ட  கோர்த்து விட்டுடுவேன் பார்த்துக்கோ..சாராயக் கடை  ஓனர் பொண்ணை..காதல் படத்தில வர்ற மாதிரி தள்ளிட்டுப் போகணும்னு நினைச்ச,நானே வீடு  பூந்து அடிப்பேன்”என்று வில்லி ரேஞ்சுக்கு மிரட்டினாள்.

“உனக்கு ஏண்டி இவ்வளவு கோபம்”

“ஹாசினி அப்பா  எனக்கு போன் பண்ணிட்டே இருக்கார்டா.ரொம்ப நேரமா பிளேடு போடறார்டா..எனக்கு மேல பொய் பொய்யா சொல்றார்.வொய் ப்ளட்..சேம் பிளட் அளவுக்கு பொய் பேசறார்.என்னால முடில..தயவு செய்து கொண்டு போய் விட்டுடு”என்று கெஞ்சினாள்.

“சரி.கொண்டு போய் விடறேன்”மனமில்லாமல் பீச்சிலிருந்து ஹாசினியை அழைத்துக்கொண்டு கிளம்பினான்.

சரணுடன் பேசிவிட்டு ஒரு மரியாதைக்கு கூட,”நன்றி”என்று கூறாமல் அவள் அழைப்பை துண்டித்துவிட,அப்போது தான் திரையில் இன்னும் மிளிர்ந்து கொண்டிருந்த,”செவ்வந்தி”என்ற பெயரை உற்றுநோக்கினான் யஸ்வந்த்.

‘ஒரே ஆள் தான் போல’என்று எண்ணியவன் தன்னுடைய அலுவல்களை பார்க்க சென்றுவிட்டான்.

நெருங்கியவர்கள் மட்டுமே செவ்வந்தி என்று அழைக்கப்படும் அவந்திகாவின் பேருக்கு பின் பெரிய தங்கமலை ரகசியமே உள்ளது.

அவர்களது பரம்பரையில் பிறக்கும் பெண்குழந்தைகளுக்கு மலர்களின் பெயரையே சூட்டுவது வழக்கம்.

அப்படியே செவ்வந்திக்கு வைத்துவிட்ட பின்னால்,அவளது அப்பா பாண்டியன்’ரொம்ப பழைய பேரா இருக்கு.என் பொண்ணுக்கு நான் வேற பேர் வச்சுக்கறேன்’என்று அடம்பிடித்து வைத்த பெயர் தான் அவந்திகா என்றாலும்,வீட்டில் யாரையும் அப்படி அழைக்க சொல்லி வற்புறுத்தவில்லை.

மகளின் மேல் கொள்ளை பிரியம்!

இதோ இப்போது கூட மகளுக்காக சமையலறையில் ஏதோ செய்துகொண்டு தான் இருக்கிறார்.

காலேஜுக்கு கிளம்பிவிட்ட செவ்வந்தி,கைக்கடிகாரத்தை மாட்டிக்கொண்டு ஒரு காதில் போனை வைத்து தலை சாய்த்து பேசிக்கொண்டே சமையலறைக்கு வந்தவள்,இன்னும் பாண்டியன் ஏதோ செய்து கொண்டிருப்பதை கண்டு பதறிப்போய் போனை கீழே போட்டுவிட்டு அவரிடம் ஓடி வந்தாள்.

ஏதோ உடைந்து விழுவதை கேட்டதும் திரும்பிய பாண்டியன்,”இந்த போனையும் உடைச்சுட்டியா..எத்தனை முறை பதட்டப்படும் போது,கையில இருக்கதை கவனமா பிடிச்சுக்கன்னு சொல்லுறது”என்று கண்டித்தவர்,அவசரத்திற்கு செய்து கொண்டிருந்த மாங்காய் ஊறுகாயை கிண்டிவிட்டுவிட்டு கையை துடைத்தவர்,அருகில் இருந்த தன்னுடைய புது போனை எடுத்து,அதில் உடைந்து போன செவ்வந்தியின் போனில் இருந்த சிம்கார்டை எடுத்து மாட்டிக் கொடுத்தார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.