(Reading time: 13 - 26 minutes)

தில் அவர் மகளுக்காக செய்த தயிர் சாதம் இருந்தது.மகள் கொண்டு செல்லும் பிரியாணியில் சிறு துணுக்கு கூட அவளுக்கு கிடைக்கப் போவதில்லை என்று முன்னெச்சரிக்கையாக தயிர் சாதம் செய்து,அவசரத்திற்கு தான் மாங்காய் ஊறுகாயையும் செய்தார்.

அதை வாங்கிக்கொண்டு புறப்பட்டவள் கல்லூரிக்கு சென்றதும்,கல்லூரி முன் இருக்கும் கேண்டினில் கொண்டு வந்திருந்த ஹாட் பேகை வைத்துவிட்டு,அங்கிருந்த ஆன்டியிடம்,”அசின் மாதிரி இருக்கீங்கக்கா”என்று புகழ் மழையில் நனைத்துவிட்டு,பிரியாணியின் பாதுகாப்புக்காக அவரை நியமித்துவிட்டு வந்தாள்.

வகுப்பு தொடங்கும் நேரங்களில் சேட்டை செய்யாமல் நல்ல பிள்ளையாக இருந்துவிட்டு,கடைசி பத்து நிமிடங்கள் எல்லா சேட்டையையும் செய்து நண்பர்களை சிரிக்க வைத்துவிட்டு,ஒன்றுமே தெரியாதது போல அமர்ந்துவிடுவாள்.

ஆரம்பகாலத்தில் அவளுடன் இருந்த தோழிகளை மட்டும் நிற்க வைத்த பேராசிரியர்கள் இப்போது கொஞ்சம் சுதாரித்து இவளையும் நிற்க வைத்துவிடுகிறார்கள்.

“எவ்வளவு நேரம் தான் உட்கார்ந்துட்டே தூங்கறது..இப்போ மேம் பர்மிஷனோட நின்னுட்டே கண்ணை திறந்துட்டு தூங்குவோம்”என்று மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல பெருமை பேசிக்கொள்வார்கள்.

மதிய உணவு வேளையில் கேண்டினுக்கு ஹாசினி,வர்ஷு சகிதம் சென்ற செவ்வந்தி உணவு மூட்டையை(?) எடுக்க,அதில் எடை குறைவாக இருந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்...

வர்ஷு கொஞ்சம் புத்திசாலி என்பதால்,”உன்னோட மாமன் தான் கொட்டிக்க வந்திருப்பான்..அவன் காதலியோட கடலை போடறதுக்கு நீயும் ஹெல்ப் பண்ணிட்டு வா..இருக்கதை நான் எடுத்துட்டு போறேன்”என்று செவ்வந்தியிடம் சொல்லிவிட்டு,ஹாசினியையும் விட்டுவிட்டு வர்ஷு சென்றுவிட்டாள்.(நமக்கு சோறு தான் முக்கியம்..!!)

வர்ஷுவின் வாக்கு தப்பாது என்பது போல அங்கு மூன்று ப்ளேட்டில் சாதத்தை பரிமாறி ஸ்பூனோடு,தனது நண்பன் யஷ்வந்த்துடனும் தயாராக அமர்ந்திருந்தான் சரண்.

ஹாசினியோடு செவ்வந்தியும் அமர,ஹாசினி கையில் ஸ்பூனை கொடுத்த சரண்,”நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ப்ளேட் போதும்னு சொன்னேன் சின்னு..இவன் தான் விடமாட்டேன்னுட்டான்”என்று எதிரில் இரு ஜீவன்கள் இருப்பதை மறந்து கடலை போட ஆரம்பித்துவிட்டான்.

செவ்வந்தி முறைக்கவும் தான் அடங்கியவன்,”உன்னோட தயிர் சாதம் அங்க பத்திரமா தானே இருக்கும் அவந்திகா..அதை போய் நீ சாப்ட்டுக்க”என்று சொன்னவன் நண்பனுக்கும் பரிமாறிவிட்டு,அவளை பார்க்க வைத்து உண்டு கொண்டிருந்தான்.

“ஏன்டா மாமா.பிரியாணி வேணும்னா வீட்டுலையே கேட்டிருக்க வேண்டியது தானே..அதுக்காக இவ்வளவு தூரம் வந்திருக்கணுமா”

“நீ செஞ்ச சாப்பாடு.அதுக்கு நான் மதிப்பு கொடுக்கணுமில்ல..அதான் இவ்வளவு தூரம் வந்தேன்.அப்படியே ஹாசினியையும் பார்க்கலாம்னு”என்று வழிய,ஹாசினி வெட்கப்பட,செவ்வந்தி பல்லைக் கடித்தாள்.

யஸ்வந்தோ ஞானி போல அங்கு நடப்பது எதையுமே கவனிக்காமல் உணவிலையே கவனம் வைத்திருந்தான்.

‘இவனை போய் சரண் எங்க பிடிச்சிருப்பான்’தனக்குள் தோன்றிய கேள்வியை அப்படியே கேட்டுவிட்டாள் செவ்வந்தி.

“இவன் என்னோட ஸ்கூல் மேட்.அமெரிக்கால தான் படிச்சான்.அங்கேயே வேலை பார்க்கவும் டச் விட்டுப் போச்சு” 

“உன்னோட பிரண்ட்ஸ் எல்லாரை பத்தியும் சொல்ற நீ,இவங்களை பத்தி மட்டும் ஏன் சொல்லலை”விளையாட்டாக அவள் கேள்வி கேட்க,யஷ்வந்த் இடைமறித்தான்.

“அவன் எல்லாத்தையும் உங்க கிட்ட ஏன் சொல்லணும்னு எதிர்பார்க்கறீங்க”என்று கோபமாக கேட்டான்.

பிரியாணியின் காரம் மூக்கில் ஏறிவிட்ட கடுப்பு அவனுக்கு..!!

“நான் சரண்கிட்ட தானே கேட்டேன்..அவன் எனக்கு சொல்லுவான்.நீ சொல்லுடா மாமா”என்று கேட்க..

“நான் எதுக்கு உன்கிட்ட சொல்லணும்”என்று நண்பனின் பேச்சுக்கு இசைவாய் பேசிவிட்டான்..

“என்கிட்ட எதுக்கு சொல்லணுமா”என்று சேரில் இருந்து எழுந்து வேண்டுமென்றே  அலறியவள்..

“உன்னக் கட்டிக்க போறவகிட்ட இதெல்லாம் நீ சொல்லித்தான் ஆகணும்டா மாமா”என்று சொல்ல மூவரின் வாயில் இருந்த கடைசி துணுக்கு உணவு கீழே விழுந்தது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.