(Reading time: 7 - 13 minutes)

06. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

Dear friends, Thanks so much for all your comments. Enjoying my final week of stay in chennai. So full swing shopping. kidaitha nerathil para paraavaa adiththathu. So excuse the spelling errors. Will surely give big updates after coming back. Cheers

சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்  தோன்றுதே நூறு கோடி வானவில்

எனதுயிரே   எனதுயிரே     எனக்கெனவே நீ கிடைத்தாய்..      

ரியும், ஸ்வேதாவும் தீபா இருக்கும் அபார்ட்மெண்ட் வந்தடைய, ஹரி உஷாராக அவள் கையை எடுத்து அவள் மடியில்  வைத்த பின்பே ஸ்வேதாவை  எழுப்பினான்.  அவன் எழுப்பியவுடன் அடித்துப் பிடித்து எழுந்த ஸ்வேதா, பாதித் தூக்கத்தில் மலங்க மலங்க முழித்தாள்.  இதில் அவள் தூங்கும்போது கனவு வேறு வந்து தொலைத்தது.  அதன் தொடர்ச்சியாக.........

“என்ன ஹரி, நாம தாஜ்மஹால் வந்தாச்சா..... குழந்தை எங்கக் காணும்”, என்று வேறு கேட்க,  இப்பொழுது முழிப்பது ஹரியின் முறையானது.  ஒரு ரெண்டு மணி நேர பயணத்துல கல்யாணம் பண்ணி, குழந்தைக்கூட  பெத்துட்டாளே, சூப்பர் ஃபாஸ்ட்தான்.  இத்தனை ஆசைய மனசுல வச்சுண்டு எதுக்கு வெட்டி வீராப்பு என்று ஹரிக்கு தோன்றியது.

“அதுக்கு இன்னும் குறைஞ்சது பத்து மாசம் ஆகும்டா குட்டி.  வெயிட் பண்ணித்தான் ஆகணும்.  இப்போதைக்கு நாம மொதல்ல இறங்கி தீபா வீட்டுக்குப் போலாம்.  அப்பறமா தாஜ்மஹால் போறதைப் பத்தி யோசிக்கலாம்.  சரியா”, என்று கேட்க, முழு விழிப்பிற்கு வந்த ஸ்வேதா, தான் சொன்னதை மறந்து விட்டு, எதற்கு பத்து மாதம் ஆகும் என்று கூறுகிறான், நாம் இங்கே மூன்று மாதம்தானே இருக்கப் போகிறோம் என்று யோசித்தபடியே கீழே இறங்கினாள். நல்லகாலம் ஹரி பேசியது அரைகுறையாகத்தான் ஸ்வேதா காதில் விழுந்தது.  முழுதாக கேட்டிருந்தால், ஹரிக்கு இன்னொரு தாஜ்மஹாலை அங்கேயே ஸ்வேதா கட்டி இருப்பாள்.   ஹரி அவளின் பெட்டிகளை இறக்கிவிட்டு காரை பார்க் செய்துவிட்டு வர, இருவருமாக மூன்றாம்  தளத்திலிருந்த தீபாவின் ஃபிளாட்  நோக்கி சென்றார்கள்.        

தீபா சென்னையில் ஸ்வேதாவுடன் வேலை செய்தவள்.  இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஆறு மாதம் முன்பு அமெரிக்கா வந்துள்ளாள்.  ஸ்வேதாவும், தீபாவும் ஒரே நேரத்தில் காம்பஸ் இன்டர்வியூ மூலம் தேர்வாகி வேலையில் சேர்ந்தவர்கள்.  அதனால் மிகுந்த தோழமை.  ஹரியைப் பற்றிக் கூட தீபாவிடம் கூறி இருந்தாள் ஸ்வேதா.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஹரியும், ஸ்வேதாவும் அவள் இருக்கும் தளம் வந்து சேர, ஹரி தீபா வீட்டு அழைப்பு மணியை அழுத்தினான். 

“ஹே வெல்கம், வெல்கம் ஸ்வே, எத்தனை நாள் ஆச்சு பார்த்து.  என்னதான் ஸ்கைப்ல பார்த்துப் பேசினாலும்  நேர்ல பாக்கறா மாதிரி வராது”, என்று ஸ்வேதாவை அணைத்து வரவேற்றாள். 

“நீங்களும் உள்ள வாங்க ஹரி,    ட்ராஃபிக் ரொம்ப இல்லையா, சீக்கிரமே வந்துட்டீங்க”, ஹரியை வரவேற்றபடியே கேட்க, என்னது..... இது சீக்கிரமா, என்று ஸ்வேதா பார்க்க, ஹரி இதுக்கே அவ குழந்தை பெத்துக்கற அளவுக்கு போயாச்சு, இன்னும் டைம் ஆகி இருந்தா அதுக்கு கல்யாணமும் பண்ணி இருப்பா, என்று நினைத்தபடியே....  தீபாவின் கேள்விக்கு பதில் கூறினான்.

“உனக்கு உடம்பு இப்போ எப்படி இருக்கு தீபா.  வயறு சரியில்லாம போற அளவுக்கு அப்படி  என்ன சாப்ட்ட”, என்று  ஸ்வேதா கேட்க, தீபா ‘என்னது எனக்கு வயறு சரியில்லையா, இது எப்போலேர்ந்து’,  இந்த ஹரி சொன்னதும்தான் சொன்னான் தலைவலி, ஜுரம் இப்படி ஏதானும் சொல்லி இருக்கக்கூடாதா.... இப்போ என்ன சொல்லி சமாளிக்க  என்று அவனை முறைத்தாள் தீபா.

அவளின் முறைப்பிற்கு ஹரி..... சாரி சமாளியேன் என்று கெஞ்சல் பார்வை பார்க்க,  ஒழிந்து போ..... என்று ஸ்வேதாவின் புறம்  திரும்பி, “இப்போப் பரவாயில்லை, அந்த ரூம் உள்ள பாத்ரூம் இருக்கு, நீ ஃபிரெஷ் செஞ்சுக்கனும்ன்னா போயிட்டு வா.  நான் அதுக்குள்ள உங்க ரெண்டு பேருக்கும் காஃபி போடறேன்”, என்று கூறினாள்.

ஸ்வேதா உள்ளே செல்ல, ஹரியின் புறம் திரும்பிய தீபா,  “ஸ்வேதாவை கூப்பிட நான்தான் ஏர்போர்ட் போவேன்னு நேத்து என்கிட்ட கெஞ்சோ கெஞ்சுன்னு கெஞ்சி காலங்கார்த்தால எழுந்து அவளைக் கூப்பிட போயிட்டு, எனக்கு உடம்பு சரியில்லை அதனால வந்தேன்னு கதை விட்டிருக்கீங்க.  சொல்றதும்தான் சொல்றீங்க உங்களுக்கு வேற எந்த வியாதியும் தோணலையா.... உங்க போதைக்கு என்னை ஊறுகாய் ஆக்கிட்டீங்களே.... இந்த லவ்வர்ஸ்க்கு மட்டும் ஃபிரெண்டா இருக்கவே கூடாது.  அது என்னவோ கலாய்க்க மட்டுமே  உபயோகப் படறோம்”, என்று ஒட்டுமொத்த காதலர்களின் தோழர்கள் சார்பாக பொரிந்து  கட்டினாள்.

“சாரி ஸ்வேதா கோச்சுக்காத..... மத்த எந்த ப்ரோப்லம் சொன்னாலும் அவ கண்டுபிடிச்சுடுவா..... இதுன்னா முடியாது இல்லை அதுதான்.  அதுவும் இல்லாம இன்னைக்கு என் காதலை ஊட்டி வளர்த்தா நாளைக்கு உன் காதல் சாப்பாடு போடாமையே வளரும் இல்லை”, என்று கடிக்க....

“இது அடுத்த கொடுமை..... இந்த லவ் பண்றவங்க சொல்ற மொக்க ஜோக்  அவங்க எழுதற வீணாப் போன கவிதை இதை எல்லாம் காதால கேக்க வேண்டிய நிலை.  மிடில....  உங்கள எல்லாம் பார்த்துட்டு நான் லவ் பண்ணுவேன்னு நினைக்கறீங்க.... சத்தியமா இல்லை.  ஏதோ லக்ஷ்மி மாமி சொன்னாங்களேன்னுதான் போனாப்போகட்டும்ன்னு உங்க திட்டத்துக்கு ஒத்துக்கிட்டேன்.  இல்லைன்னா நீங்க ஸ்வேதாவை முன்னாடி படுத்தினதுக்கு,  உங்களுக்கு முன்னாடி நான் கிளம்பி ஏர்போர்ட் போய் இருப்பேன்”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.