(Reading time: 7 - 13 minutes)

து..... படிக்கற வயசுல ஒழுங்காப் படின்னு சொன்னது உங்க ஊருல படுத்தறதா.... அது சரி.... அவ ஃபிரெண்ட்தானே அதான் அவளை மாதிரியே பேசற....”

“ஏற்கனவே நல்லாப் படிக்கற பொண்ணு இன்னும் இன்னும் என்ன நல்லாப் படிக்கணும்.  அதுவும் இல்லாம,  அவ லவ்வை நீங்க அச்செப்ட் பண்ணி இருந்தாலும்  அடுத்த நாள்லேர்ந்து டெய்லி காலேஜ் கட் அடிச்சுட்டு சுத்த கூட்டிட்டா  போய் இருப்பீங்க.  சும்மா இருங்க ஹரி.  சப்போஸ்  அப்படி ஏதானும் மிராக்கிள் நடந்திருந்தா கூட வருஷத்துக்கு ஒரு வாட்டி அவங்க வீட்டுல அவங்க அம்மாக்கு நேரா அவளைப் பார்த்து பேசி இருப்பீங்க அவ்வளவுதான்”

“ச்சே என்னைப் பத்தி எத்தனை தப்பா எடை போட்டு வச்சிருக்க.....  நாளைலேர்ந்து பாரு,  இந்த ஹரி என்னலாம் பண்ணி ஸ்வேதாவை கவுக்க போறான்னு, அதைப் பார்த்துட்டு லவ் பண்ண என்கிட்டயே டிப்ஸ் கேக்க நீ வரப் போற பாரு”

“அதையும் பார்ப்போமே....”, இவர்கள் வழக்காடிக்கொண்டிருக்கும்போதே ஸ்வேதா தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு வந்தாள்.  தீபா சென்று மூவருக்கும் காஃபி கலந்து வர, அதை குடித்தபடியே தீபாவும், ஹரியும் அமெரிக்க பொருளாதாரம்,  வேலை வாய்ப்பு, வாகன நெரிசல், கால்பந்தாட்டம் என்று கலவையாகப் பேசிக்கொண்டிருக்க இங்கு ஸ்வேதாவிற்கு அடுப்பில்லாமலேயே புகைய ஆரம்பித்தது.  அவளும் நடு நடுவில் அவர்கள் பேச்சில் இடைப்புக பார்க்க, ஒன்றும் வேலைக்கு  ஆகவில்லை.  பொறுத்தது போதும் என்று பொங்கி எழுந்து விட்டாள் ஸ்வேதா.....

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

“ஹரி உங்களுக்கு நேரம் ஆகறது.  நீங்க ஆத்துக்கு கிளம்புங்கோ..... நாளைக்கு வேற ஆஃபீஸ் இருக்கு.... கார்த்தால சீக்கிரம் எழுந்துக்கணும்”, என்று கூற... அவள் கூறியது புரியாத மாதிரி ...

“அதெல்லாம் ஹரிக்கு நேரம் ஆகலை ஸ்வே.... இதோ இங்க பக்கத்துல இருக்கற அபார்ட்மெண்ட்.... எட்டிப் பார்த்தாலே தெரியும்... அதுக்குப் போக எத்தனை நேரம் ஆகும்.  அதுவும் தவிர நாளைக்கு எனக்கு வொர்க் from ஹோம்.  ஸோ லேட்டா எழுந்தா போதும்”, என்று தீபா கூற, அதற்கு முறைப்பு இந்த முறை ஹரியை நோக்கி பாய்ந்தது.

“நான் சொன்னது உனக்கு இல்லை, ஹரிக்கு....  அம்மா உங்களுக்காக பொடி எல்லாம் குடுத்து விட்டிருக்கா, பாக்கிங் பிரிச்சுட்டு உங்களுக்குத் தரேன்”

“ஏய் என்ன நீ, அவரை விரட்டறதிலேயே இருக்க.... நான் ஹரிக்கும் சேர்த்துதான் டின்னர் பிரிப்பேர் பண்ணி இருக்கேன்.... அதனால நீங்க கண்டிப்பா சாபிட்டுட்டுத்தான் போகணும் ஹரி”

“நானே இத்தனை நேரத்துக்கு மேலப் போய் சமைக்கணுமேன்னு கவலைப்பட்டுண்டு இருந்தேன்.... தேங்க்ஸ் தீபா. அந்த கவலையைப் போக்கிட்ட”, என்று கூற, மறுபடி அவர்கள் பேச்சு ஆரம்பம் ஆனது..... அடுத்த அரை மணி ஹரி,  தீபா அரட்டையுடனும், ஸ்வேதாவின் பல் கடித்தலுடனும் சென்றது.

தொடரும்

Episode # 05

Episode # 07

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.