(Reading time: 9 - 17 minutes)

07. ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்... – ஜெய்

srungara seendalgal sillendra oodalgal

காலைப் பனியும் நீ கண்மணியும் நீ   என் கனவும் நீ

மாலை மயக்கம் நீ பொன் மலரும் நீ   என் நினைவும் நீ

ரியும், தீபாவும் ஸ்வேதா என்றொரு ஜீவன் அருகிலிருப்பதை கணக்கில் கொள்ளாமல் அவர்கள் பாட்டுக்கு பேசிக்கொண்டிருந்தார்கள்.  ஓரளவிற்கு மேல் பொறுத்த ஸ்வேதா தாங்க முடியாமல் அவளுக்கு பசிக்கிறது என்று சொல்லி அவர்களை உணவு உண்ண அழைத்து சென்றாள்.  அங்கும் ஹரி, தீபாவின் சமையலைப் புகழ, ஸ்வேதாவிற்கு காதில் ரயில் என்ஜின் புகைய ஆரம்பித்தது.  ஒரு வழியாக ஹரி சாப்பிட்டு அவன் அறைக்கு செல்ல ஸ்வேதாவிற்கு அப்பாடி என்று இருந்தது.  ஸ்வேதா தீபாவிடம் தனக்குத் தூக்கம் வருவதாக சொல்லி அவள் அறைக்கு சென்றாள்.

தீபா அவள் அறைக்கு சென்று கதவை சாத்தியவுடன்,  ஸ்வேதா முதலில் அழைத்தது கௌரியைத்தான்.

“ஹலோ ஸ்வேதா, நியூயார்க் போய் சேர்ந்தாச்சா.  தீபா எப்படி இருக்கா.  வீடெல்லாம் வசதியா இருக்கா?”, கௌரி வரிசையாக கேள்வி மேல் கேள்வி கேட்க எதற்கு முதலில் பதிலளிப்பது  என்று தெரியாமல் ஸ்வேதா இந்தப் பக்கம் முழித்தாள்.

“ஹலோ... ஹலோ ஸ்வேதா கேக்கறதா.......லைன்ல இருக்கியா.......”

“ஹான் மன்னி ஒரு ஒரு கேள்வியா கேளுங்கோ, வரிசையா கேட்டா ஆர்டர் மறந்து போய்டறது.  இங்க எல்லாம் சூப்பர்.  ஆனா மன்னி எனக்கு உங்க மேல கோவம்..... நீங்க கூட ஹரி ஏர்போர்ட் வர்றதைப் பத்தி சொல்லவே இல்லை”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“என்னது ஹரி ஏர்போர்ட் வந்தானா..... இது  எப்போ நடந்தது.  நீ வரப்போற ஃப்ளைட் பத்திக்கூட அவன்கிட்ட நான் சொல்லலையே.  Infact அம்மாக்கிட்ட கூட சொல்ல வேண்டாம்ன்னு சொல்லி வச்சிருந்தேன்.  அதனால அவனுக்குத் தெரிய சான்சே இல்லையே.  இரு.. இரு.... ஒரு வேளை எங்க வீட்டு எட்டப்பன் போட்டுக் கொடுத்துட்டாரா தெரியலையே”

“யாரு அண்ணாவையா சொல்றேள், ச்சே ச்சே இருக்காது மன்னி.  நான் அவன் கிட்ட சொல்லக்கூடாதுன்னு சொல்லி இருந்தேன்.  அதனால அவன் சொல்லி இருக்க மாட்டான்”

“யாரு உங்கண்ணா சொல்லி இருக்க மாட்டாரா....  நீ உங்கண்ணாவை ரொம்ப நம்பற ஸ்வேதா.  அவர்தான் நாம பேசறதை எல்லாம் லைவ்வா அவர் போன் வழியா ஹரிக்கு டெலிகாஸ்ட் பண்றார்.  எப்ப நீ ஸ்கைப்ல வந்தாலும் ஃபோனும்  கையுமா வந்து உக்காருவாறே, ஏன்னுத் தெரியுமா.... அந்தப் பக்கம் ஹரி Facetimeல இருப்பான்.  இங்க பேசறதை அப்படியே அவனுக்கு காட்டுவார்”

“அச்சோ என்ன மன்னி சொல்றேள், இதை மொதல்லையே எங்கிட்ட சொல்றதுக்கென்ன, நான் உஷாரா இருந்து இருப்பேனோ இல்லையோ, infact நிறைய வாட்டி ஹரியைத் திட்டிக்கூட கௌஷிக்கிட்ட பேசி இருக்கேன்.  எல்லாத்தையும் ஹரி கேட்டிருப்பாரா”,அழமாட்டாத குறையாக கேட்டாள் ஸ்வேதா.

“ஏய்...  அவா ரெண்டு பேரும் செய்யறது தப்பு.  இதுல நீ எதுக்கு கில்ட்டியா feel பண்ற.  எனக்கு முன்னாடியே தெரிஞ்சு இருந்தா உங்கிட்ட சொல்லி இருக்க மாட்டேனா ஸ்வேதா.  நீ ஊருக்குப் போறதுக்கு முன்னாடி பேசின இல்ல, அப்போ உங்கண்ணா எனக்கு ஆபீஸ் கால் இருக்குன்னு அவசரமா ரூம்க்குள்ள போய் பேசினார் பாரு அப்போதான் கண்டுபிடிச்சேன்.  இனிமே நீ ஹரியைப் பத்தி எதுவும் அவர் இருக்கறச்ச பேசாத சரியா”

“சரி மன்னி.  ஆனா ஹரி நான் திட்டினதைக் கேட்டு என்னைப் பத்தி தப்பா நினைச்சுப்பாரா.  நிறைய வாட்டி ஜடம், சாமியார் இப்படி எல்லாம் சொல்லி இருக்கேன்....”

“உன்னைத் தப்பா நினைச்சு இருந்தான்னா ஏர்போர்ட் வந்து இருப்பானா, அதனால ஃப்ரீயா விடு.  ஹேய் கேக்க மறந்துட்டேன்.  ஏர்போர்ட்ல என்ன ஆச்சு.  ஹரி உன்னைப் பார்த்து freeze ஆக நீ அவனைப் பார்த்து freeze ஆகன்னு இளையராஜா மியூசிக்கோட ஒரே குஜாலா”

“நீங்க வேற மன்னி உங்கத் தம்பி இங்க அமெரிக்கா வந்து ரொம்ப கெட்டுப் போய்ட்டார்.  அவர் பண்றதை எல்லாம் பார்த்தா ரிஷ்யஸ்ருங்கர், கோகுல கிருஷ்ணனா அவதாரம் எடுத்தா மாதிரி இருக்கு”

“என்னது ஹரி=கிருஷ்ணர்..... நம்ப முடியவில்லை..... இல்லை.... இல்லை”, கோரஸ் எப்ஃபெக்ட்டுடன் கௌரி கூற, ஸ்வேதா ஏர்போர்ட்டில் நடந்ததைக் கூறினாள்.

“அடப்பாவி, உன் கைய பிடிச்சானா.  ரொம்பத்தான் தேறிட்டான் போ.  அதுவும் தீபா முன்னாடி.....”

“என்னது தீபா முன்னாடியா..... அவ எங்க இருந்து வந்தா..... அவதான் ஏர்போர்ட் வரவே இல்லையே.... அவளுக்கு கடைசி நேரத்துல வயறு சரி இல்லாம போனதால்தானே ஹரியே வந்தார்......”

“இரு இரு..... எங்கயோ இடிக்கறதே.   அது எப்படி நீ கிளம்பற வரைக்கும் நன்னா இருந்த தீபாக்கு சடன்னா வயறு சரி இல்லாமப் போகும்.  இதுல ஏதோ உள்குத்து   இருக்கறா மாதிரி இருக்கே”

“ஆமாம் மன்னி... நீங்க சொன்ன உடனதான் எனக்கும் தோணறது”

“சரி இப்போ டின்னர் என்ன சாப்பிட்டேள் சொல்லு”

“அது இன்னைக்கு தீபாதான் சமைச்சு இருந்தா... புலாவ், ஆலூ  பராத்தா, சென்னா அப்பறம் பனீர்.  அப்பறம் டெஸர்ட்க்கு ரஸ்மலாய் வேற வாங்கி வச்சு இருந்தாளே”

“பார்த்தியா வயறு சரி இல்லாதவ சாப்பிடற சாப்பாடா இது..... ரெண்டு பேருமா சேர்ந்து உன்னை நன்னா ஏமாத்தி இருக்கா.......”

“ரெண்டு பேர் இல்லை மன்னி, மூணு பேர்.... எங்கம்மாவும் சேர்ந்துதான் இந்த சதிக்கு கூட்டு”

“ஹ்ம்ம் ஸ்வேதா இனிமேத்தான் நீ ஜாக்கிரதையா இருக்கணும்.  ஹரி பக்கம் எத்தனை பேர் இருக்கா பார்.  அவனை இனிமே கேர்ஃபுல்லா ஹாண்டல் பண்ணு”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.