(Reading time: 9 - 17 minutes)

ன்ன மன்னி அம்மாவும் இதுல கூட்டுன்னு சொன்ன உடனே  டகால்ன்னு ஜகா வாங்கறேள்.  நீங்க இருக்கற தைரியத்துலதான் நானே இருக்கேன்.  இன்னைக்கே ஹரி கார்ல வர்றச்ச பேசின பேச்சுக்கு என்னால பதில் கொடுக்க முடியாமப் போய் தலைவலின்னு சொல்லி தூங்கிட்டேன்.  அடுத்தும் இதே மாதிரி பேசினா நான் என்ன பண்ண....”

“ஹேய் ஸ்வேதா... நான் எப்பவுமே உன் கட்சிதான்.  டோன்ட் வொர்ரி.  ஹரி கார்ல அப்படி நீ பதில் சொல்ல முடியாத அளவு என்ன சொன்னான்”

“அவர் நான் ஒழுங்கா படிக்கணும் அப்படிங்கறத்துகாகத்தான் அப்போ என்னை வேண்டாம்ன்னு சொன்னாராம்.  அது என் மனசை நோகடிச்சு இருந்ததுன்னா சாரின்னு சொன்னார்”,என்று கூற, ஹரிக்கு கல்யாணத்திற்கான  சகல தகுதிகளும் வந்து விட்டதை நினைத்து  கௌரி மனதிற்குள் சபாஷ் போட்டாள்.   விவாதமே செய்யாமல் டமால் என்று காலில் விழுவதே சிறந்த தாம்பத்தியத்தின் தத்துவம் என்பதை ஹரி புரிந்து கொண்டுவிட்டான், இனி நான் என்ன ஏத்தி விட்டாலும் அவன் ஸ்வேதாவை வழிக்கு கொண்டு வந்து விடுவான் என்று நினைத்தாள்.    

“நிஜமாவே ஹரி தேறிட்டான் ஸ்வேதா.  முன்னாடி எல்லாம் இப்படி இருக்க மாட்டான்.  முடிஞ்ச வரை காதுல இருந்து ரத்தம் வர்ற அளவுக்கு அட்வைஸா பண்ணித் தள்ளுவான்.  அவன் சொல்றது சரின்னு நாம ஏத்துக்கற வரை விடமாட்டான்.  உன் விஷயத்துல எல்லாம் தலை கீழா போச்சு.   உனக்கு நிஜமாவே ஹரி மேல கோவம் இருக்கா ஸ்வேதா.  அவனை கல்யாணம் பண்ணிக்க உனக்கு இஷ்டம் இல்லையா”

“ஏன் மன்னி திடீர்ன்னு கேக்கறேள்.  நீங்களும்தானே இத்தனை நாளா அவரெல்லாம் ஒரு ஆளா.  அதெல்லாம் நீ ஒத்துக்காதேன்னு சொல்லிண்டு இருந்தேள்....”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

“ஹேய், அது நான் அவனை வெறுப்பேத்த அப்படி உன்னை ஏத்தி விட்டேன் ஸ்வேதா.  இப்பவும் சொல்றேன் அவன் உன்னைக் காய விட்டதுக்கு நீ அவனை நன்னா வாட்டி எடுத்துட்டு அப்பறம் சம்மதம் சொல்லு.  ஆனா நிஜமா உனக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைன்னா நான் கம்ப்பல் பண்ண மாட்டேன்.  ஹரிக்கிட்ட நானே பேசி உன்னைத் தொந்தரவு பண்ண வேண்டாம்ன்னு சொல்லிடறேன்”

“அச்சோ மன்னி அப்படி எல்லாம் பண்ணிடாதீங்கோ.  எனக்கு இப்போன்னு இல்லை... பாஸ்ட், ப்ரெசென்ட், ஃப்யூச்சர் எல்லா டென்ஸ்லயும் அவரைப் பிடிக்கும்.  அவர் வேண்டாம்ன்னு சொன்னது மனசுக்கு கஷ்டமா இருந்தாலும், அவர் சொன்னது நான் ஒழுங்கா படிக்கனும்ன்னுதானே.  இருந்தாலும் இப்போ அவர் எங்கிட்ட இந்த மாதிரி கெஞ்சிண்டு நடக்கறது பிடிச்சிருக்கு”

“ஹா ஹா ஹா ஸ்வேதா.  என்னோட சேர்ந்து சேர்ந்து நீயும் ஃபார்ம்க்கு வந்துட்ட.  அவனைக் கொஞ்சம் சுத்தல்ல விட்டுட்டே உன் சம்மதத்தை சொல்லு.  நான் என்னதான் அவனை வெறுப்பேத்தினாலும் அவனை மாதிரி நல்லவன் கிடைக்கறது கஷ்டம் ஸ்வேதா.    மிஸ் பண்ணிடாத....”, இவர்கள் இங்கே ஹரியை எப்படி எல்லாம் காலில் விழ வைக்கலாம் என்று அடுத்த கட்ட திட்டத்தைப் போட, கதவை லேசாக திறந்து வைத்து இருந்த தீபா அத்தனையையும் ஒன்று விடாமல் கேட்டு வைத்தாள்.  

அடப்பாவி ஹரி உனக்கு இப்படி ஒரு எதிரியை வீட்டுக்குள்ளயே வளர்த்து விட்டிருக்கியே.  ஸோ ஸாட்.  ஸ்வேதா பேசி முடித்து அவள் படுத்து நன்றாக தூங்கி விட்டாள் என்று தெரிந்த பின் தீபா ஹரிக்கு அழைத்தாள்.

“ஹலோ ஹரி தூங்கிட்டீங்களா....”

“இல்லை தீபா.  நாளைக்கு ஒரு ப்ரெசென்ட்டேஷன் இருக்கு.  அதுக்கு ரெடி பண்ணிண்டு இருக்கேன்.  சொல்லு என்ன விஷயம்”

“உங்களுக்கு எதிரா இங்க மிகப்பெரிய சதி நடந்துட்டு இருக்கு.  இது தெரியாம நீங்க ஜாலியா ஆபீஸ் வேலை பண்ணிட்டு இருக்கீங்க”

“இங்க பார்றா.... எனக்கு எதிரா சதியா....  யாரு  பண்றது”

“உங்கக்காவும், ஸ்வேதாவும்தான்”

“அந்த ரெண்டு வெத்து பீஸுமா.  கௌரி ஒரு ஆளு.   அவ சொல்ற மொக்க ஐடியாவ வச்சு இவ என்னைக் கவிழ்க்க போறாளாமா”

“ஹரி அப்படி எல்லாம் தப்புக் கணக்கு போடாதீங்க.  ரெண்டு பேரும் செம்ம ப்ளானிங்ல இருக்காங்க. அது என்னன்னா.......”

“ஹே தீபா வெயிட்.  நீ எதுவும் என் கிட்ட சொல்லாத.  எனக்குத் தெரியக்கூடாதுன்னுதானே ரெண்டு பேரும் நினைக்கறாங்க.  ஸ்மால் பேபீஸ்.  அப்படியே இருக்கட்டும்.  அவங்க ப்ளானிங் படியே நடக்கட்டும்.  அப்படி என்னதான் பண்றாங்கன்னு ஸ்வேதா பண்ணும்போதே  தெரிஞ்சுக்கறேன்”

“சூப்பர் ஹரி.  எனக்கே கொஞ்சம் கில்ட்டியாத்தான் இருந்துது.  ஸ்வேக்கு ஃபிரெண்டா இருந்துட்டு உங்களுக்கு ஹெல்ப் பண்றேனேன்னு”

“ரொம்ப கில்டியா ஃபீல் பண்ணாத.  இதை சொல்லத்தான் ஃபோன் பண்ணினயா”

“ஆமாம் ஹரி.  அதோட நாளைக்கு கரெக்ட் டைம்க்கு வந்துடுங்க.  எங்க ப்ராஜெக்ட் மேனேஜர் சரியான முசுடு.  கரெக்ட் டைம்க்கு போகலைன்னா வள்ளு வள்ளுன்னு விழும்”

“ப்பா என்ன ஒரு மரியாதை.  எங்க பக்கத்து வீட்டு ஜிம்மியை சொல்றா மாதிரியே சொல்றியே.  அதெல்லாம் கரெக்ட் டைம்க்கு வந்துடுவேன், கவலைப்படாதே”

“உங்க பக்கத்து வீட்டு ஜிம்மி எவ்வளவோ பரவாயில்லை.  ரெண்டு பொறை வாங்கிப் போட்டா கம்முன்னு ஆயிடும்.  இந்தாள் எதைப் போட்டாலும் அடங்க மாட்டான்.  சரி ஹரி நீங்க வேலையைப் பாருங்க.  நாளைக்கு உங்க நாள் நல்ல நாளா அமைய வாழ்த்துக்கள்.  இதை அவளுக்கு நேரா நான் சொல்ல முடியாது.  அதான் இப்போவே வாழ்த்திடறேன்.  குட் நைட்”, இரவு வாழ்த்துக்களுடன் தீபா கைப்பேசியை வைக்க நாளைக்கு ஸ்வேதா என்ன கூத்து பண்ணப்போகிறாள் என்ற யோசனையுடன் வேலையைத் தொடர்ந்தான் ஹரி.   

தொடரும்

Episode # 06

Episode # 08

{kunena_discuss:964} 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.