(Reading time: 25 - 50 minutes)

21. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

ஸ்தனைத் திரும்பித் திரும்பி பார்த்தபடி சிறையைவிட்டு வெளியே வந்ததும் மதிவதனியின் வருகைக்காகக் காத்து நின்ற வைத்தியர் இளவரசியைப் பார்த்ததும் துணுக்குற்றார்.காரணம் மதிவதனி தலைப்பாகை இன்றியும் மீசையைக்காணாமலும்  போர்த்தியிருந்த மேல் துணியின்றியும் இருந்ததுதான் அவரைத் துணுக்குற வைத்தன.ஐயோ இதென்ன இவரைப் பார்த்தால் பார்ப்பவர்கள் இவர் இளவரசி மதிவதனி என்று எளிதில் கண்டுபிடித்துவிடுவார்களே என பயந்தார்.அதன் பின் கேட்கவே வேண்டாம்.விஷயம் மன்னரின் காதுகளுக்கு எட்டிவிடும்.அப்புறம் முடிந்தது கதை என அச்சமடைந்தார்.அதனால் அவசர அவசரமாக..இளவரசி என்ன இது..உங்களின் தலைப்பாகை, மீசை,ஒன்றையும் காணோமே?இப்போது நீங்கள் பெண்ணின் உருவத்திலல்லவா தெரிகிறீர்கள்?இப்படியே திரும்பிச் சென்றால் மாட்டிக்கொள்வது நிச்சயம் என்றார்.

அப்போதுதான் தன் தவற்றை உணர்ந்தாள் இளவர்சி மதி.நல்லவேளை வைத்தியரே சொன்னீர்கள் என்றபடியே மீண்டும் உளளே சென்றாள்.அங்கே மதி அணிந்து வந்திருந்த தலைப் பாகையைத் தன் தலையில் அணிந்து கொண்டும் அவள் உடுத்தி வந்த மேலாடையைத் தன் மீது போர்த்தியபடியும் அமர்ந்திருந்தான் ஹஸ்தன்.  காலடி ஓசை கேட்கவே திரும்பியவன் மதி மீண்டும் வருவதைப் பார்த்து திகைப்படைந்தான்.மதீ என்று அழைத்தபடியே அவளை நோக்கி எழுந்து ஓடிவந்தான்.மதீ..மதீ உங்களாலும் பிரிந்து செல்ல முடியவில்லை அல்லவா? நீங்கள் இங்கிருந்து சென்ற அடுத்த கணமே என்னால் உங்களின் பிரிவைத் தாங்க முடியவில்லை..இனி உங்களைப் பிரிந்து கணமும் என்னால் வாழ முடியாது மதி.நீங்கள்  என்னுடன் இல்லாத நேரம் இனி எனக்கு இக்கொடுஞ்சிறையை விடக் கொடுமையாக இருக்கும் மதி.

நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.எப்படியாவது இங்கிருந்து தப்பிக்க முயலப் போகிறேன்.விமலாதித்தனைக் கொலை செய்துவிட்டுப் பழியை என் மீது போட்டு இக்கொடுஞ்சிறையில் நான் இருக்கக் காரணமான சேர இளவரசனை பழிவாங்குவேன் என்னை நிரபராதி என நிரூப்பிபேன்.என் உயிரான உங்களை இங்கிருந்து என்னோடு என் னாட்டிற்குக் கூட்டிச் செல்வேன்.பரந்து விரிந்த என் குப்த ராஜ்ஜியத்தின் ராணியாக்குவேன்.மதி..மதி..நான் தப்பிச் செல்கையில் நீங்கள் என்னோடு வருவீர்கள் தானே?

பித்துப் பிடித்தவன் போல் மதியின் கரம் பிடித்துப் புலம்பினான் ஹஸ்தன்.அவனால் தன்னைப் பிரிந்து இனி கணமும் இருக்க இயலாது எனபுரிந்து கொண்டாள் மதி.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ஹஸ்தா அன்பரே...உங்களால் எப்படி எனைப் பிரிந்து இருக்க முடியாதோ அவ்வாறே உங்களைப் பிரிந்து இனி என்னாலும் இருக்க இயலாது..உங்களின் அருகாமை இன்றி நான் இருக்கும் ஒவ்வொரு கணமும் நடை பிணமாகத்தான் நான் இருப்பேன்.ஆனால் அன்பரே இச் சிறையை விட்டுத் தப்பித்தல் அவ்வளவு எளிதல்லவே..?அது எவ்வாறு சாத்தியமாகும்?

மதீ என் அன்பே...எனை இங்கு சந்திக்க அந்தணர் வந்திருந்தார்.அவர் யாரோ முக்கியமான ஒருவர் தம்மை இங்கு அனுப்பிவைத்ததாகவும் என்னைத் தப்புவிக்க அவர் உதவி செய்ய விரும்புவதாகவும்..சரியா சமயத்தில் அதற்கான ஏற்ப்பாடுகளைச் செய்ய இருப்பதாகவும் சொல்லி அனுப்பியதாகவும் சொன்னார்.

ஆனால் எவ்வளவு கெஞ்சிக் கேட்டும் அந்த முக்கியமானவர் யார் என்பதைத் தெரிவிக்க அந்தணர் மறுத்துவிட்டார்.எப்படியும் அந்த முக்கியமானவர் தக்க சமையத்தில் நான் இங்கிருந்து தப்ப உதவுவார் என்று நம்பியுள்ளேன் மதி என்றான் ஹஸ்தன்..

என்ன சொல்கிறீர்கள் அன்பரே..அந்த முக்கியமானவர் உங்களுக்கும் செய்தி அனுப்பினாரா?..நீங்கள் இச் சிறையிலிருந்து தப்பிச் செல்ல உதவுவதாகச் சொன்னாரா? என வியப்போடு கேட்டாள் மதிவதனி.

அவள் குரலில் தெரிந்த வியப்பைக்கண்டு ஏன் மதி உங்களுக்கு வியப்பாய் உள்ளதா?யாரும் சிறையிலிருந்து தப்பிக்க உதவ முடியாது என எண்ணுகிறீர்களா?..

இல்லை அன்பரே..இங்கே உங்களை வந்து சந்திக்கவும் எனக்கு உதவியவர் ஓர் முக்கியமானவர்தான்.என் தோழியிடம்தான் உங்களை சந்திக்க ஏற்பாடு செய்திருப்பதாகச் சொல்லியனுப்பினார்.உங்களை சந்திக்கும் முன் உங்களின் மொழியையும் நான் அறிந்து கொள்ள உதவியாக னான் அவ்வந்தணரிடம் அம்மொழியைக் கற்க ஏற்பாடு செய்தவரும் அவர்தான்.என்னாலும் அம்முக்கியமானவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை...ஆனாலும் அவர் தான் சொன்னபடி செய்யக்கூடியவர் என்றே தோன்றுகிறது.அவ்வாறு அவர் உங்களை இச்சிறையிலிருந்து தப்பிக்க உதவி செய்தால் நிச்சயம் நானும் உங்களோடு வந்துவிடுவேன்.நீங்களின்றி இனி வாழ்வது என்னால் நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று...நம்மைச் சந்திக்க வைத்த அவர் நம் நலன் மீது அக்கறை கொண்டவராகத் தான் இருப்பார்.உங்களைத் தப்பிக்க வைக்கும்போது என்னையும் உங்களோடு சேர்த்தே அனுப்புவார் என்றே எனக்குத் தோன்றுகிறது...நாம் பிரிவதை அவர் விரும்ப மாட்டார் என்றே நம்புகிறேன்..எப்படியும்  அவர் அந்த நல்லவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அவருக்கு இருவருமாய் நன்றி சொல்லவேண்டும்..என்றாள் மதி..

ஆச்சரியமாய் இருந்தது ஹஸ்தனுக்கு..இருவருக்கும் உதவும் அந்த நல்லவர் யாராய் இருக்கும் என்ற கேள்வி எழுதது அவன் மனதில்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.