(Reading time: 25 - 50 minutes)

சுசீ..வெகு நேரமாகிவிட்டதோ நாங்கள் திரும்ப என்று கேட்டார் வைத்தியர்.

ஆம் வைத்தியரே..வெகுனேரம் ஆகி விட்டதுதான் கவலையாகி விட்டது எனக்கு..

தன்னால்தான் நேரமாகிவிட்டது என்பதை அறிந்திருந்த மதி ஒன்று சொல்லவில்லை.

சரி..சுசீ  இதோ சந்திர சேனன்..உன்னிடம் ஒப்படைத்து விட்டேன்.நான் கிளம்புகிறேன்..வருகிறேன் இளவரசி

மிக மெதுவான குரலில் இளவரசியிடம் விடை பெற்றுக்கொண்டார் வைத்தியர்.

அதுதான் கடைசி முறையாக இளவரசியை அவர் பார்ப்பது என்று அவருக்குத் தெரிந்திருக்க நியாயம் இல்லை.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா V யின் "காதலை உணர்ந்தது உன்னிடமே..." - காதலை எப்போது சொல்வேன் உன்னிடமே

படிக்க தவறாதீர்கள்... 

இளவரசி மதியும் சுசீயும் மதியின் இருப்பிடம் நோக்கிச் சென்றனர்.அவ்வாறு செல்லும் போது மதியின் வலது கை விரலில் இருந்த மோதிரம் சுசீயின் கண்களில் பட்டது.ஆ..இது என்ன இளவர்சி அணிந்திருக்கு மோதிரத்தைப் பார்த்தால் பாண்டிய நாட்டினர் அணியும் மோதிரம் போல் இல்லையே.பார்க்க வித்தியாசமாக அல்லவா இருக்கிறது?அப்ப்டியென்றால் இது குப்த இளவரசரின்  மோதிரமாகத்தான் இருக்க வேண்டும்.

அது எப்படி இவர் கையில் வந்தது?ஒரு ஆணின் மோதிரம் அந்த ஆணை விரும்பும் பெண்ணின் வலது கை விரலில் வந்தால் அதற்கு என்ன அர்த்தம்?ஒரு வேளை குப்த இளவரசரே இவரின் கரம் பிடித்துப் போட்டிருப்பாரோ?அப்படி நடந்திருந்தால் இருவருக்கும் மணமாகிவிட்டதாக அல்லவா ஆகிவிடும்?அப்படித்தான் நடந்திருக்க வேண்டும்.இளவரசி நம்மிடம் இது பற்றித் தாமாகச் சொல்லு வரை நாமாக அவரிடம் கேட்கக்கூடாது என்று முடிவெடுத்தாள் சுசீ.

மதியும் சுசீயும் மதியின் இருப்பிடத்திற்குள் நுழைந்தனர்.

இளவரசி..நீங்கள் வேண்டுமானால் ஓய்வெடுங்கள்.நான் செல்லட்டுமா?என்று சுசீ கேட்க..தனிமையில் இருக்க விரும்பிய மதி..சரி என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னாள்.

வருகிறேன் இளவரசி..வெளியே வந்தாள் சுசீ..

இளவர்சி ஹஸ்தனைச் சந்தித்துத் திரும்பி விட்டதை மகாராணியிடம் தெரிவிக்க எண்ணிய சுசீ ராணியின் இருப்பிடம் நோக்கி நடந்தாள்.

சிறிது தூரம் நடந்திருப்பாள்.சுசீ..வைத்தியரின் குரல் அழைத்தது.

என்ன இது..அப்போதே வைத்தியர் விடை பெற்றுச் சென்றுவிட்டாரே..இப்போது அவர் எனை அழைக்கும் குரல் அல்லவா கேட்கிறது?குரல் வந்த திசை நோக்க ஒரு ஓரமாய் நின்று கொண்டிருந்தார் வைத்தியர்.

அவரின் அருகில் சென்ற சுசீ வைத்தியரையா நீங்கள் இன்னும் வீட்டுக்குச் செல்லவில்லையா?அப்போதே விடை பெற்றீர்?

இல்லை சுசீ..உன்னிடம் கொஞ்சம் பேச வேண்டும்.

சொல்லுங்கள் வைத்தியரே..? சிறையில் என்ன நடந்தது..?

சுசீ..சிறையில் நான் ஹஸ்தனைச் சந்தித்து அவரின் நலன் விசாரித்தேன்..பின்னர் மகாராணியின் அறிவுறைக்கேற்ப இளவரசியும் ஹஸ்தனும் தனிமையில் பேசிக்கொள்ளட்டும் என்று அவ்விட விட்டு வெளியேறினேன். சிறையில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியாது.ஆனால் சுசீ..சிறையிலிருந்து இளவரசி வெளியே வர வெகு நேரம் ஆயிற்று என்றார்.

ஓஹோ..என்றாள் சுசீ பொதுவாக..

சுசீ..சிறிது நேரம் முன்பு ஐந்தாறு குதிரைகளில் வீரர்கள் அரண்மனைக்குள் செல்வதைப் பார்த்தாயா?

ஆம் பார்த்தேன் வைத்தியரே..இன்னொன்றையும் கண்டேன் வீரர்கள் அனைவரின் முகத்திலும் கவலை அப்பியிருந்ததையும் கண்டேன்..

மிகச் சரியாய்ச் சொன்னாய் சுசீ....பாண்டிய நாட்டுக்கு நேரம் சரியில்லை எனத் தோன்றுகிறது சுசீ..ஏதோ நடக்கப்போவதாக என் உள்ளுணர்வு சொல்கிறது...மனம் மிகவும் கலக்கமடைகிறது..

ஆம் வைத்தியரே..எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது..பெரும் கவலை மனதில் சூழ்கிறது..

சரி நான் கிளம்புகிறேன் சுசீ..

வைத்தியரே..மகாராணியை சந்திக்க வரவில்லையா..?

ம்ம்ம்ம்..ஆம் மகாராணியைச் சந்திக்கத்தான் வேண்டும்..முதலில் நீ செல்..பின்னால் நான் வருகிறேன் என்று வைத்தியர் சொல்ல கிளம்பினாள் சுசீ..

காராணி ருக்மாதேவி மிகக் கவலையொடு அமர்ந்திருந்தார்.நடப்பது எதுவுமே அவருக்குப் பிடிக்கவில்லை.மனம் அமைதியின்றி தவித்தது.மகளின் நலனுக்காக கணவருக்கு துரோகம் செய்கிறோம் என்ற எண்ணமே அவரை வாட்டியது.

வணங்குகிறேன் மகாராணி..என்று சொல்லியபடியே வந்து நின்ற சுசீயை நிமிர்ந்து பார்த்தார் ருக்மாதேவி.

வா சுசீ...மதி வந்தாயிற்றா?

ஆம் இளவரசி வந்துவிட்டார் மகாராணி..

வந்துவிட்டாரா..?சொல் சொல் ஏதாவது சொன்னாரா?ஹஸ்தனிடம் பேசியதாய்ச் சொன்னாரா?மிகுந்த பரபரப்போடு கேட்டார் ருக்மா.

இல்லை..என்னிடம் ஏதும் சொல்லவில்லை..ஆனால் மகாராணி...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.