(Reading time: 25 - 50 minutes)

காராணி என்னை வற்புறுத்தாதீர்கள்..

இல்லை சுசீ..கணவருக்கு மனமறிந்து துரோகம் செய்யும் எந்த மனைவியும் வாழத் தகுதியற்றவர்..

எந்த ஒரு தாயும் செய்யத் துணியாத ஒரு செயலை பெற்ற மகள் விரும்பியவனோடு பிறந்த வீட்டை விட்டு வெளியேற அவளே அறியா வண்ணம் உதவும் என் போன்ற தாய் இது போன்ற இழி செயலைச் செய்யும் தாய் நான் ஒருவளாகத்தான் இருப்பேன்.என்னை உண்மையாய் நேசிக்கும் கணவரும் அறியாமல் இவ்விழி செயலைச் செய்யும் நான் இனியும் உயிரோடிருப்பதற்குத் தகுதியற்றவள்.இச்செயலைச் செய்த பிறகு  மன்னரான என் கணவரின் முகத்தில் நான் எவ்வாறு விழிப்பேன்?அவருக்கு உண்மை தெரிய வரின் என் நிலை என்னாகும்?சொல் சுசீ..என் மகன் சுந்தரத்தைப் பாது காக்கும் பொறுப்பையும் மந்திரி சிவபாதரிடம் ஒப்படைத்து விட்டேன்.ஆனாலும் தாயை இழந்த பிள்ளையாய் அவன் இருக்கப் போகும் நிலையை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லைதான்.ஆனால் நான் இனி உயிரோடிருப்பது பாபம்.நேர மாகிறது போ சுசீ நான் சொன்னதைக் கொண்டு வா..என்றார் ராணி ருக்மா.

அசையாமல் நின்றாள் சுசீ..

வேண்டாம்..மகாராணி... நானே செல்கிறேன் என எழ முயன்றவரைத் தடுத்து விட்டு அங்கிருந்த இருக்கை ஒன்றில் வைக்கப் பட்டிருந்த செம்பிலிருந்த பாலை நன்கு கலக்கி பக்கத்திலிருந்த குவளையில் ஊற்றினாள் சுசீ.குவளையை மகாராணியிடம் நீட்டியவள் கதறி அழுது விட்டாள்.அது வைரக்கற்கள் பொடித்துப் போடப்பட்ட பால்.உள்ளுறுப்புகளையெல்லாம் அறுத்து மரணத்தை நிச்சயம் தரும் குணம் வைரத்திற்கு உண்டு என்பதால் வைரத்தை பொடித்து பாலில் கலந்து தரும்படி சுசீயை மகாராணி வற்புறுத்திச் செய்ய வைத்திருந்தார்.அதற்கு மாற்று மருந்து கிடையாது என்பதால் எந்த வழியிலும் தான் பிழைத்து விடக்கூடாது என மகாராணி உறுதியாக இருந்ததால் இந்த ஏற்பாடு.

குவளையை வாங்கிக் கடகடவென்று வாயில் சரித்துக்கொண்டார் மகாராணி.சட்டென மீதிப்பாலிருந்த செம்பை எடுத்து அதிலிருந்த பாலைப் பருகினாள் சுசீ..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ராசுவின் "பேசும் தெய்வம்" - அன்பென்றாலே அம்மா...

படிக்க தவறாதீர்கள்... 

சுசீ என்ன காரியம் செய்து விட்டாய்?நீ ஏன் விஷப் பாலை அருந்தினாய் சுசீ..?

மன்னிக்க வேண்டும் மகாராணி..உங்களின் அனைத்து செயல்களிலும் நானும் பக்குகொண்டிருந்தவள் அல்லவா?அப்படிப் பார்த்தால் நானும்தானே மன்னர்க்கும் இன்னாட்டிற்கும் துரோகம் செய்தவள்?நானும் இனி உயிர் வாழ தகுதியற்றவள் ஆகிறேன் மகாராணி..

ஐயோ.. தவறு செய்து விட்டாய்..தவறு செய்துவிட்டாய் சுசீ..நீ வாழ வேண்டியவள்..

இல்லை மகாராணி..இல்லை..உண்மையை மன்னர் அறியவரும் போது நானும் குற்றவாளியே என்பது நிரூபிக்கப் படும்..அதன் பின் என் நிலை என்னாகும் என நினைத்துப் பாருங்கள் மகாராணி...

சுசீ...நீதான் எத்தனை தூய்மையானவள்....சுசீயை பக்கத்தில் அழைத்து அவளை அணைத்துக்கொண்டார் மகாராணி.

இருவருக்குமே அடிவயிற்றில் லேசாய் வலிக்க ஆரம்பித்தது..

சுசீயின் மனதில் காளி வந்து சென்றான்.அவள் கண்களில் கண்ணீர் திரண்டது.

அடுத்து நடந்தது என்ன..?அடுத்த வாரம் தெரிந்து விடும்.தெரிந்த பின் கதையும் முடிந்து விடும்.

நன்றி..

தொடரும்...

Episode 20

Episode 22

{kunena_discuss:956}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.