(Reading time: 25 - 50 minutes)

சுந்தரா..நீ எனக்கு ஓர் வாக்குக் கொடுக்க வேண்டும்...செய்வாயா..?

தந்தையே இப்படிக் கேட்காதீர்கள்..நீங்கள் செய்யச் சொல்வதை நான் செய்வேன் இது உறுதி தந்தையே..

நல்லது சுந்தரா..என் மகனே...நீ அறிந்த அத்தனை விபரங்களையும் என்னிடம் சொல்லிவிட்டதாக உன் தாயிடமோ உன் அக்காவிடமோ மற்ற எவரிடமோ சொல்லிவிடாதே..சொல்லாமல் இருப்பாயா மகனே..?

சொல்லமாட்டேன் என வாக்குக் கொடுக்கிறேன் தந்தையே...

என் மகனே சுந்தரா என்றபடி மகனை மார்போடு அணைத்துக்கொண்டார் அதிவீரன்.அவர் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீராவின் "புத்தம் புது காலை..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

ரவு.தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தபடிக் கிடந்தார் மன்னர் அதிவீரன்.எப்படித் தூக்க வரும்?ஒருபுறம் சோழன் படையெடுக்காக் காத்திருக்கும் சூழல்.அவனின் பெரும்படையை எதிற்கும் அளவுக்கான அவனுக்குச் சமமான படை பலம் இல்லாத நிலை,யாரும் உதவ முன் வராத கையறு நிலை..பெற்ற மகளும் அவளுக்குத் துணையாக இருந்து மனைவி தனக்குச்  செய்யும் துரோகம்..அனபு மகனின் உயிருக்கான அச்சுறுத்தல் என நாலா பக்கமும் துன்பம் நிழலாய்த் துரத்தும் போது யாரால்தான் தூங்க முடியும்.தூங்கும் நிலையிலா மன்னர் உள்ளார்?

தந்தையே..தந்தையே..சுந்தரன் கூப்பிடும் குரல்.என்ன இன்னேரத்தில் சுந்தரன் அழைக்கிறான்..என்று எண்ணிக்கொண்டே எழுந்து கதவைத் திறந்தார் மன்னர் அதிவீரன்.

தந்தையே...அழைத்தவன் குரல் உடைந்து அழுகையாய் மாறியது.

மகனே சுந்தரா..என்னாயிற்று கண்ணா?ஏன் அழுகிறாய்? சொல் மகனே..சொல்..அவணை அணைத்துக் கொண்டார் அந்த பாசம் மிகு தந்தை.

அடுத்து சுந்தரன் கூறிய விஷயம் மன்னரின் தலையில் இடியாய் இறங்கியது.அடுத்த கணம் ஆவேசத்தோடு வாளை எடுத்துக்கொண்டு கிளம்பினார்.துரோகி உங்கள் இருவரையும் இந்த வாளுக்கு இரையாக்கிவிடுகிறேன் என்ற படி வாசல் நோக்கி நடந்தவரை தந்தையே கொஞ்சம் நில்லுங்கள்.நிதானமாக யோசியுங்கள் என்ற சுந்தரனின் குரல் தடுத்து நிறுத்தியது.

என்ன சொல்கிறாய் சுந்தரா..என்னை ஏன் தடுக்கிறாய்?உன் தாயையும் உன் தமக்கையையும் இந்த வாளால் வெட்டி வீழ்த்த்துவதே விவேகமானது.அவர்கள் செய்யவிருக்கும் செயல் பாண்டிய நாட்டிற்கே பெரும் அவமானத்தை ஏற்படுத்தி தராதா?பாண்டியப் பேரரசின் வரலாற்றில் பெருங்களங்கத்தைஏற்படுத்தாதா? முன்னோர்கள் கட்டிக்காத்த அருமை பெருமைகள் இவ்விருவராலும் அழிந்து போகாதா?....

தந்தையே உங்களின் வேதனையும் தவிப்பும் எனக்குப் புரிகிறது.உங்களுக்கு நான் வாக்குக் கொடுக்கிறேன் தந்தையே பாண்டிய நாட்டின் பெருமைகளையும் அதன் மகோந்னதத்தையும் புகழையும் வரும் காலத்தில் நான் மீட்டெடுப்பேன் தந்தையே.இது சத்தியம்.மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் எனும் பெயரைப் பெறுவேன் தந்தையே..என்னை நம்புங்கள்..எனவே கொஞ்ச அமைதியாய் இருங்கள் என்றான் தந்தையின் கால்களில் வீழ்ந்து.அப்படியே அமர்ந்து கல்லாய்ச் சமைந்து போனார் மன்னர் அதிவீரன்.

தியம் சுசீ வந்து சொன்னதிலிருந்து அமைதியற்றுப் போயிருந்தாள் மதி.

இளவரசி...சோழன் நம் நாட்டின் மீது படையெடுத்து வருகிறானாம்.உங்களைச் சிறைஎடுத்துச் செல்லவிருக்கிறானாம்.அதோடு கூட குப்த இளவரசரைக் கைதியாக்கி தன்னோடு கொண்டு செல்லப்  போகிறானாம்.எனவே அவன் அவ்வாறு செய்வதற்குள் உங்களையும் குப்த இளவரசரையும் இன்றிரவு இன்னாட்டிலிருந்து தப்புவிக்கப் போகிறாராம் அந்த முக்கியமானவர்.இளவரசர் சுந்தரனையும் பாது காப்பான ஒருவரிடம் ஒப்படைக்கப் போகிறாராம்.நீங்கள் இதற்கு சம்மதிக்கிறீர்களா எனக் கேட்டு அறிந்து வரும்படி என்னை அனுப்பினார் என்று சுசீ சொன்ன போது முதன் முறையாக பெற்றவர்களின் நினைவும் சுந்தரனின் நினைவும் வந்தது மதிக்கு.கொஞ்ச நாட்களாக ஹஸ்தனின் நினைப்பிலேயே இருந்த மதிக்கு இப்போதுதான் பெற்றவர்களின் பாசமும் உடன் பிறப்பின் பாசமும் உறைத்தது.அழுதாள் மதி.ஆனால் ஹஸ்தனை பிரிவதென்பது எளிதல்ல என்ற நினைப்பு பாசத்தை வென்றது.அந்த நினைப்பே அவளைச் சமதிக்க வைத்தது.

ரவு நடு நிசியைத் தொடும் நேரம்.மகாரணியின் முன்னால் நின்றுகொண்டிருந்தாள் சுசீ.அழுதழுது ராணியின் முகம் சிவந்து போய் உப்பியிருந்தது,கண்களிலிருந்து வழியும் கண்ணீர் நிற்கவே இல்லை.

அவரைச் சமாதனம் செய்ய முடியாமல் வருத்தத்தோடு நின்றுகொண்டிருந்தாள் சுசீ.இன்னும் சிறிது நேரத்தில் மகளைப் பிரியப்போகிறோம் என்று அறிந்த எந்தத் தாய்தான் அழாமல் அமைதியாக இருப்பார்?

மகளைப் பிரியும் துக்கம் ஒருபுறம் கணவன் அறியாது மகளை நாட்டைவிட்டு அவள் விரும்பிய ஒரு கைதியோடு வெளியேற தானே உதவியாய் இருப்பதை நினைத்து இன்னொரு புறம் என்று தாங்கமுடியாத சோகத்தில் தவித்தார் ராணி ருக்மா.

சுசீ...சொன்னதைச் செய்ய மாட்டாயா..?

மகாராணி..உங்களின் இந்த முடிவு வேண்டாம் மகாராணி..என்னால் செய்தல் ஆகாது மகாராணி..

இல்லை சுசீ நீ இதைச் செய்துதான் ஆகவேண்டும்...

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.