(Reading time: 25 - 50 minutes)

வாருங்கள் மன்னா..உள்ளே நுழைந்த கணவரை வரவேற்றார் மகாராணி.மன்னரின் முகம் வாடியிருப்பதையும் ஏதோ யோசனையில் இருப்பதும் ருக்மாதேவிக்கு நன்றாகவே புரிந்தது. 

அன்பரே..நீங்கள் ஏதோ சிந்தனையில் இருப்பதுபோல் தெரிகிறதே..

ஆம்..ருக்மா..மனம் மிகக் கவலை கொண்டுள்ளது..

என்னவாயிற்று மன்னா..?

ருக்மா..எதை எதிர்பார்த்தோமோ அது வெகு சீக்கிரமே நடக்கவிருக்கிறது..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

மீரா ராமின் "மருவக் காதல் கொண்டேன்..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

என்ன நடக்கவிருகிறது அரசே..

ருக்மா..போர் மூளும் சூழல் உருவாவிட்டது..சோழன் பெரும் படையோடு நம் மீது படையடுத்து வருகிறானாம்.இன்னும் பத்து நாட்களுக்குள் அவன் நம் நாட்டின் எல்லைக்குள் வந்து விடுவானாம்.அவன்

நம் அருமை மகள் மதியைக் கவர்ந்து செல்லவும் குப்த இளவரசரைச் சிறைபிடிக்கவும் நம் சுந்தரனின் உயிருக்குக் ஹானி விளைவிக்கவும் திட்டமிட்டுள்ளானாம்.ஒற்றர்கள் அறிந்து வந்துள்ளார்கள் இவ்விஷயங்களை...இவ்விஷய்ங்களை அறிந்ததிலிருந்து பெருங்கவலையாய் உள்ளது.இன்னது செய்வதென்றே புரியவில்லை ருக்மா.

ஆடிப்போனார் மகாராணி மன்னர் சொன்னவற்றைக் கேட்டு...மனம் பதை பதைத்தது,,மகளுக்கும் மகனுக்கும் என்ன தீங்கு ஏற்படுமோ எனும் கவலை சூழ்ந்தது அவரை.

மன்னரின் மனதிற்கு தைரியமும் நம்பிக்கையும் தரும் வார்த்தைகளை அவர் வாய் சொல்லிக்கொண்டிருந்ததே தவிற அவர் கொஞ்சம் கொஞ்சமாக தைரியத்தை இழந்து கொண்டிருந்தார்.

கொஞ்ச நேரம் மகாராணியோடு பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கிளம்பினார் மன்னர் அதிவீரன்.

ன்னர் விடை பெற்றுச் சென்றதும் மகாராணியால் சும்மா இருக்க முடியவில்லை.சோழன் பாண்டிய நாட்டிற்குள் நுழைவதற்குள் தன் மகளையும் மகனையும்அவன் பிடியிலிருந்து காப்பாற்றுவதே இனி தன் கடமை அதனையும் விரைவாய்ச் செய்ய வேண்டுமென நினைத்து செயல் பட ஆரம்பித்தார் அவர்.

இரவு தன்னை வந்து சந்திக்கும்படி சுசீ மூலம் காளி,வைத்தியர்,சிறைக் காவலர்கள் சிலபேர்,மந்திரிகளில் முக்கியமான ஒருவர் என அனைவருக்கும் சொல்லியனுப்ப..அன்றிரவு அவர்கள் அனைவரும் மகாராணி சொன்ன இடத்திற்கு வந்து காத்திருந்தனர்.இளவரசன் சுந்தர பாண்டியனும் மறைவான இடத்தில் யார் கண்களிலும் படாதவாறு ஒளிந்து கொண்டிருந்தான் அவ்விடத்தில்.

மகாராணி ருக்மாவும் அவ்விடம் வந்து சேர மிகக் குறைவான நேரத்திற்குள்ளாகவே முக்கியமான முடிவொன்று எடுக்கப்படது.அம்முடிவு என்னதென்று அறிந்தபோது சுந்தர பாண்டியன் அதிர்ந்து போனான்.

கூட்டம் கலைந்தது.அனைவரும் அவ்விடம் விட்டு அகன்றதும் சுந்தரனின் கால்கள் தந்தை அதிவீரனின் இருப்பிடம் நோக்கித் தாமாகவே சென்றன.

சுந்தரன் சொல்லச் சொல்ல அவற்றைக் கேட்டபடியே இருந்த மன்னர் அதிவீரனின் முகம் மாறிமாறி உணர்ச்சிகளைக் காட்டியது.அவர் செவிகளை அவராலேயே நம்ப முடியவில்லை.தன் மகளா இப்படி?தன் உயிருக்கும் மேலாக எண்ணியிருந்த மதியா இப்படி?அவளா சிறையிலிருக்கும் கைதி ஒருவனை கொலைக் குற்றம் சாட்டப்பட்டவனை விரும்பியதோடு மட்டுமல்லாது மோதிரமும் மாற்றிக்கொண்டாள்?

பெற்றவர்களுக்குத்த் தெரியாமல் இப்படியொரு செயலை நம் மகளா செய்யத் துணிந்தாள்?ஒரு தந்தையாய் எப்படி இதனைக் கவனிக்கத் தவறினோம்?மதியையும் ஹஸ்தனையும் சிறையில் சந்திக்க ஏற்பாடு செய்தது நம் மனைவியா?இன்னாட்டின் மன்னனும்  அவரது  கணவனுமாகிய எனக்குத் தெரியாமல் என்னவெல்லாம் செய்திருக்கிறார்?இப்படியொரு துரோகத்தைச் செய்ய அவரால் எப்படி முடிந்தது?என்னில் பாதியான என் மனைவியே இப்படியொரு செயலை நான் அறியாவண்ணம் செய்திருக்கிறாரே?அப்படியென்றால் என் மகளுக்கு ஒரு நல்ல தந்தையாகவோ என் மனைவிக்கு ஓர் நல்ல கணவனாகவோ இவர்கள் இருவரும் னான் அறியா வண்ணம் செய்யும் செயல்களையெல்லாம் கண்டுகொள்ளத் தெரியாத ஒரு திறமையற்ற மன்னனாகவோ இருந்திருக்கிறேனா?இப்போதுகூட ருக்மாவை சந்தித்து என் கவலைகளைச் சொல்லி ஆறுதல் தேடச் சென்றேனே பொய்யான ஆறுதலையா எனக்குச் சொன்னார் என் மனைவி?இதென்ன கொடுமை?நான் யாரை நம்புவது?என்று நினைத்து நினைத்துத் தடுமாறியது அவர் மனம்.தாங்க முடியாத வேதனையால் வருந்தியது.சட்டென அவர் கை நெஞ்சைப் பிடித்துக்கொண்டது.நெஞ்சில் பளீர் பளீர் என்று வலி பரவியது.உடல் உழுதும் வியர்வையால் தெப்பமாக நனைந்தது.அப்படியே உட்கார்ந்திருந்த இருக்கையிலேயே சாய்ந்த மன்னர் லேசான மயக்கத்திற்கு ஆளானார்.

அவர் கண் விழித்துப் பார்த்தபோது கவலையே உருவாக பக்கத்தில் அமர்ந்திருந்தான் சுந்தர பாண்டியன்.

தந்தையே இப்போது நீங்கள் எப்படி உள்ளீர்கள்?

ஒன்றும் இல்லை நலமாகவே உள்ளேன் சுந்தரா..மெள்ள எழுந்து அமர்ந்து கொண்டார் மன்னர் அதிவீரன்.

சுந்தரா..மகனின் கைகளைப் பிடித்துக் கொண்டார் மன்னர்..

சொல்லுங்கள் தந்தையே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.