(Reading time: 25 - 50 minutes)

ரி அன்பரே.. வெகு நேரம் ஆகிவிட்டது இன்னேரம் நான் திரும்பாததால் பொறுமை இழந்திருப்பார் வைத்தியர்.நான் அணிந்து வந்த தலைப்பாகையையும் மேலே மூடியிருந்த துணியையுமே எடுக்கவே மீண்டும் வந்தேன்.வந்தது நல்லதாய்ப் போயிற்று.எனக்கு உதவும் அந்த முக்கியமானவர் உங்களுக்கும் உதவுவதை பற்றி அறிந்துகொள்ள முடிந்தது...என்று சொல்லியபடியே ஹஸ்தனிடமிருந்து தலைப்பாகையை வாங்கி அணிந்து கொண்டு துணியையும் வாங்கி மேலே போர்த்திக்கொண்டாள். சுவற்றோரம் கிடந்த ஒட்டுமீசையை எடுத்து ஒட்டவைத்துக்கொண்டாள்.இப்போது மீண்டும் ஆணாக அழகிய வாலிபனாக ஆகி நின்றாள் மதிவதனி...

அஹா..நீங்கள் பெண்ணுருவில் இருந்தாலும் சரி ஆணுருவில் இருந்தாலு சரி எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் மதி..என் மனைவிதான் எவ்வளவு அழகு..சொல்லியபடியே மதியை இழுத்து அணைத்து முத்தமிட்டான் ஹஸ்தன்..

கணப்பொழுது மகிழ்ந்து மயங்கிய மதி சுதாரித்துக்கொண்டு.அவன் அணைப்பிலிருந்து விலகி...வருகிறேன் குப்த இளவரசே வைத்தியர் காத்திருப்பார் என்று சொல்லிவிட்டு விரைவாக நடந்தாள் சிறையைவிட்டு.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

சிறை வாசலில் பொறுமை இழந்து நின்று கொண்டிருத்த வைத்தியருக்கு இளவரசியைக் கண்டதும் அப்பாடா என்றிருந்தது.

நல்லவேளை மீண்டும் சந்திரசேனானாகத் திரும்பிவந்தீர்கள் இளவரசி அதோ பாருங்கள் சிறைக்காவலர்கள் வருகிறார்கள்.அவர்கள் சற்று முன்னரே வந்திருந்தால்..?உங்களை இளவரசியாய்ப் பார்த்திருந்தால்?நினைக்கவே அச்சமாக உள்ளது இளவரசி என்றார் மதியின் செவிகளுக்கு மட்டும் கேட்குமாறு.

அவர் சொல்வது உண்மைதான் என நினைத்தாள் மதி.

இருவரும் சிறை வளாகத்தைவிட்டு வெளியேறி அரண்மனை நோக்கி நடக்க ஆரம்பித்தனர்.அவ்வாறு நடக்கும் போது இருவரும் ஏதும் பேசிக்கொள்ளவில்லை.இளவரசியிடம் ஏதும் கேட்பது மரியாதைக் குறைவானது என எண்ணினார். என்னதான் இளவரசி தன்னோடு நடந்து வந்தாலும் அவர் இன்னாட்டின் இளவரசி..மன்னருக்கும்,ராணிக்கும் அடுத்தபடியாக அதிகாரம் மிக்கவர்.அவராக ஏதும் சொல்லாதவரை நாமாய் கேட்பது தவறு என எண்ணி பேசாமல் இருந்துவிட்டார்.

மதியும் அவரிடம் பேசும் மன நிலையில் இல்லை.என்னதான் உயிருக்குயிராய் நினைத்தக் காதலனைச் சந்திதிதுப் பேசினாலும் கணப்பொழுதில் அவனின் அணைப்பில் தடுமாறிப் போய் அவன் தம் கரம்பிடித்து மோதிரம் போடு வரை உணர்ச்சி மேலீட்டால் மௌனமாக இருந்தோமே..இது தவறில்லையா?பெற்றெடுத்த தாய்க்கும் தந்தைக்கும் தெரியாமல் அவர்கள் அறியாமல் செய்துவிட்ட இச்செயல் மன்னிக்கக்கூடிய குற்றமா?நாம் செய்திருக்கும் இச்செயலால் இனி என்னனென்ன விபரீதம் ஏற்படுமோ?நம் பெற்றோருக்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்திவிட்டோமோ?நாம் ஒரு சாதாரணப் பெண்ணில்லையே.மாபெரும் ராஜ்ஜியத்தின் இளவரசியல்லவா?ஒரு சராசரிப் பெண்போல்நடந்து கொண்டுவிட்டோமோ?..

அடி பைத்தியக்காரி..என்ன இப்படி யோசனை செய்கிறாய்?ஹஸ்தனைச் சந்திக்க வேண்டுமென எப்படி தவித்தாய் நீ..எப்படி துடித்தாய் நீ...பெற்றவர்களிடமே பாராமுகமாய் அல்லவா இவ்வளவு நாட்களாய் நீ இருந்தாய்.அவர்கள் மீண்டும் இன்னொரு நாட்டின் இளவரசரை உனக்குத் திருமணம் செய்து வைக்க முயன்றால் நீ அதனை ஏற்றுக்கொள்வாயா?அப்படி நீ உன் பெற்றோருக்காக  இன்னொருவனை மணக்கத் துணிந்தால் அப்பொது நீ ஹஸ்தன் மேல் கொண்டிருந்த காதல் என்னாவது?உன்னால் அவனை மறந்து விட முடியுமா?அந்த இன்னொருவனோடு உண்மையாய் வாழத்தான் முடியுமா?நீ நேரில் பார்த்தாய் அல்லவா?

உன்மேல் ஹஸ்தன் எவ்வளவு காதலோடு உள்ளார் எத்தனை அன்பு கொண்டுள்ளார் என்று.உன் தாய்தந்தையருக்க்காக குப்த இளவரசரின் அன்பை மறுப்பாயா?என்று மனம் அவளிடம் கேட்க..ஐயோ ஹஸ்தன் இப்போது என் காதலர் அல்ல என் கணவர்.இனி அவரின்றி நான் என்பதை நினைத்தும் கூட என்னால் பார்க்க முடியாது.ஒரு பெண்ணுக்கு பெற்றோர் முக்கியமா?கணவர் முக்கியமா?எனக் கேட்டால் என் தாய் கூட கணவர் என்றுதானே சொல்லுவார்.நான் மட்டும் மாற்றிச் சொல்லுவேனா என்ன?நான் செய்தது தவறு என்று ஒரு மன்னராக என் தந்தை எனக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் ஏற்பேனே தவிற ஹஸ்தனைப் பிரிதல் இனி நடக்காது.அவர் என்ன கேட்டார்?சிறையிலிருந்து தப்பிச் சென்றால் அவரோடு நானும் வருவேனா என்றுதானே..?ஏன் செல்ல மாட்டேன் அவரோடு?கட்டாயம் சென்றுவிடுவேன்.இனி அவர் இருக்குமிடந்தான் எனக்கு சொர்க்கம்.இது நிச்சயம்.இனி வேறு மாதிரி என் மனம் சிந்திக்க விடமாட்டேன் என உறுதி செய்து கொண்டாள் மதி.

வைத்தியரும் ஆணுருவில் இருந்த மதியும் அரண்மனை வாசலில் வந்து நின்றபோது பல குதிரைகள் ஓடிவரும் குதிரைகளின் காலடியோசை கேட்டது.இருவரும் கொஞ்சம் ஒதுங்கி நின்றனர்.அப்பொது ஐந்தாறு குதிரைகளில் அமர்ந்திருந்த வீரர்கள் வெகு வேகமாக குதிரையை செலுத்தியபடி அரணனைக்குள் நுழைந்தனர்.அவர்கள் அனைவரின் முகத்திலும் கவலை படிந்திருந்ததாகப் பட்டது வைத்தியருக்கு.

ம்..என்ற பெரு மூச்சு எழுந்தது அவரிடமிருந்து.

வைத்தியரும் மதியும் அரண்மனைக்குள் நுழைந்தபோது இவர்களுக்காவே காத்திருந்தது போல் சுசீ இளவரசியை நோக்கி விரைந்து வந்தாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.