(Reading time: 25 - 50 minutes)

ன்ன ஆனால்..சொல்..சுசீ..

மகாராணி..இளவரசியின் வலது கை மோதிர விரலில் வித்யாசமான மோதிரம் ஒன்றைக் கண்டேன்..

வித்யாசமான மோதிரம் என்றால்?

ஆம் மகாராணி..அதுபோன்ற மோதிரம் நம் நாட்டில் அணியப்படுவதில்லை...

பின்..

அது குப்த நாட்டின் மோதிரமாக இளவரசர் ஹஸ்தனின் மோதிரமாக இருக்கலாமோ என நினைக்கிறேன் மகா ராணி..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

VJ Gன் "அனு என் அனுராதா..." - காதல் கலந்த குடும்ப தொடர்

படிக்க தவறாதீர்கள்... 

இதெற்கென்ன பொருள்..?

................

ஆம் உன் சந்தேகம் சரியானதாகத்தான் இருக்குமென நினைக்கிறேன் சுசீ..என்று சொன்ன ராணி ருக்மா திடீரென தம் இரு கைகளிலும் முகத்தைப் புதைத்து அழ ஆரம்பித்தார்.

பதறிப் போனாள் சுசீ...மகாராணி..மகாராணி...என்னவாயிற்று மகாராணி.?அப்படிக்கேட்டாளேயொழிய...ஆனாலும் மகாராணி அழுவதற்கான காரணம் அவளுக்குப் புரிந்தே இருந்தது.யாருக்குத்தான் புரியாது?

பத்துமாதம் சுமந்து பெற்று பாராட்டி சீராட்டி வளர்த்து ஆளாக்கி அழகு பார்த்த மகள் திடீரென வந்த ஒருவனைக் கண்டு காதல் கொண்டு அவனின் பொருட்டு பெற்ற தந்தையையும் தாயையையுமே மறக்கத் துணிந்து பெற்றவர்களோ மற்றவர்களோ உற்றாரோ சுற்றத்தாரோ யாருமின்றி உடன் பிறப்புமின்றி மாலையின்றி,மேள தாளமின்றி..இப்படி யாரும்.. எதுவும் இல்லாமல் கொடுஞ்சிறையில் வெறும் மோதிரம் மாட்டித் திருமணம் செய்து கொண்டால் எந்தத் தாய்தான் அழமாட்டார்?கண்ணீர் உகுக்க மாட்டார்?அதுவும் மதி ஒரு சாதாரணப் பெண்ணா?ஒரு நாட்டின் இளவரசிக்குத் திருமணம் நடக்கும் முறையா இது?..

மெள்ள அழுது ஓய்ந்தார் ருக்மாதேவி.

ர்பாரில் அமர்ந்திருந்த மன்னர் அதிவீரரின் முகத்தில் பெருங்கவலை படிந்திருந்தது.பேச்சின்றி ஒரு சிலைபோல் அமர்ந்திருந்தார் மன்னர்.மனதில் பெருங்குழப்பம்.அவரின் சமீபமாய் அமர்ந்திருந்த முக்கிய மந்திரி,சேனாதிபதி,ராஜ குரு,அனைவருமே கிட்டத்தட்ட மன்னரின் மன நிலையிலேயே இருந்தனர்.

குதிரையில் வந்த வீரர்களும் அவ்வாறான மன நிலையிலேயே இருந்தனர்.அவ்விடத்தின் சூழல் அவ்வாறு  இருப்பதற்கான காரணம் அக் குதிரை வீரர்கள் கொண்டு வந்திருந்த செய்திகளேயாகும்.

மன்னா..ஆரம்பித்தார் சேனாதிபதி..மன்னா..நமக்கு இப்பொது கிடைத்திருக்கு செய்தி பெருங்கவலை அளிக்கக் கூடியதுதான்..அதில் ஐயமில்லை.அனாலும் நாம் கலங்கிப்போய் கைகட்டி இருந்துவிட முடியாது.

சோழ மன்னன் சேரனோடு சேர்ந்து கொண்டு பெரும்படையோடு நம் மீது படை யெடுத்து வருவதை அறியும் போது மிகக் கவலையாகவே உள்ளது.அவனோடு கூட வேறு சில நாடுகளும் அணி சேந்திருப்பது கவலையை அதிகரிப்பதாகவே அமைந்துள்ளது.சோழன் நம் இளவரசியைக் கைக்கொண்டு செல்லவும் குப்த இளவரசைக் கைது செய்து தம் நாட்டிற்குக் கொண்டு செல்லவிருப்பதும் பெரும் கவலையையும் என்ன செய்வதென்று தெரியாத நிலைமையையும் உருவாக்கியுள்ளது.என்னதான் நம் படை வீரத்தோடு போராடினாலும் சோழன் கொண்டுவரும் மிகப் பெரும் படையோடு போராடி வெற்றி கொள்வது அவ்வளவு எளிதல்ல.இப்போரில் வெற்றி கொள்ள வீரம் மட்டும் போதாது.விவேகத்தோடும் செயல் பட வேண்டும்.

சோழன் பாண்டிய வமிசத்தையே வேரறுப்பேன் என சபதம் எடுத்துள்ளானாம்.நம் இளவரசருக்கும் ஏதும் தீங்கு நேரிடுமோ எனக் கவலையாக உள்ளது.இதோ நிற்கும் நம் ஒற்றர்கள் மிகத் திறமையனவர்கள்.

அவர்கள் திரட்டி வந்திருக்கும் விஷயங்கள் பொய்யாகாது.இன்னும் பத்து நாட்களுக்குள் சோழனின் படை நம் நாட்டின் எல்லையைத் தொட்டுவிடும்.அதற்குள் நம் இளவரசி இளவரசர் மகாராணி அனைவரின் பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்ய வேண்டும்.குப்த ராஜ்ஜியத்தின் இளவரசர் ஹஸ்தனின் பாது காப்பும் கேள்விக்குறியாகி உள்ளது.போர் மேகம் சூழ்ந்துள்ளதை அறிந்தால் நாட்டு மக்களும் கிளர்ச்சியில் ஈடுபடுவார்கள்.சேனாதிபதி சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் னிதர்சனத்தைஎடுத்துக் காட்ட அனைவரின் முகத்திலும் பெருங்குழப்பம்.

சேனாதிபதி இனி புலம்புவதில் பயனில்லை..படையை ஆயத்த நிலையில் வையுங்கள்.எது நடக்குமோ அது நடக்கட்டும்..பாண்டிய நாடு எதற்கும் பயந்து விடக் கூடாது..என்று ஒரு உத்வேகத்துடன் சேனாதிபதியைப் பார்த்துச் சொன்னார் மன்னர் அதிவீரன்.

தங்கள் உத்தரவு...அப்படியே செய்கிறேன் மன்னா..பதிலளித்தார் சேனாதிபதி.

அனைவரும் கலைந்து சென்றனர்.

மனதில் பல்வேறு சிந்தனைகள் கிளம்பி நிலையில்லாமல் தவிக்க அதிவீரன் ராணியிடம் மனவிட்டுப் பேசினால் கொஞ்சம் மனம் அமைதி அடையாதா என்ற  எண்ணத்தில் அந்தப்புரம் நோக்கிச் சென்றார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.