(Reading time: 23 - 46 minutes)

20. கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது... - தங்கமணி சுவாமினாதன் 

Koncham periya kuzhanthaigalukkana kathai ithu

ஞ்சத்தில் எழுந்து அமர்ந்து கொண்ட மதிவதனியின் மனம் மிகவும் பரபரப்பாய் இருந்தது.ஆயிற்று இன்னும் சற்று நேரத்தில் சுசீ வந்துவிடுவாள்.அவள் வருவதற்குள் கிளம்பி தயாராகி விடவேண்டும்.முதன் முதலில் ஹஸ்தனை சந்திக்கு வேளையில் எப்படியிருக்கும்?நேற்றே சிந்தித்ததுதான் என்றாலும் மீண்டும் மீண்டும் அன்னினைப்பே தோன்றியது.கட்டாயம் அவராய் அவர் மனதில் நான் இருக்கிறேனா?என்னை அவர் மனம் விரும்புகிறதா எனச் சொல்லவேண்டும்.அவசரப்பட்டு நாமாய் ஏதும் சொல்லிவிடக்கூடாது.முக்கியமாய் ரொம்பவும் உணர்ச்சி வசப்பட்டுவிடக்கூடாது.மிகுந்த கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும்.சரி அப்படி எந்த உணர்வும் காட்டாதிருந்தால் அவர் என்ன நினைப்பார்..ஒரு பெண் அதுவும் இளவரசி சிறைக்கு வந்து ஒரு குற்றவாளியாய்க் கருதப்படுபவனைப் பார்க்க வரவேண்டிய அவசியம் என்ன?என்று நினைக்கமாட்டாரா?

பின் எதற்காக வந்ததாய்ச் சொல்லுவது?ஒன்றும் புரியவில்லையே..இன்னொன்று அவரைப்பார்க்கப் போகும் போது எளிமையான அலங்காரத் தோற்றத்தோடு செல்வதா?மிகையான அலங்காரத்தோடு செல்வதா?

ம்ஹூம்..ரொம்பவும் எளிமையாகத்தான் செல்லவேண்டும்.இல்லாவிடில் இளவரசி நாம் சிறையில் இருக்கும்போதும் அது பற்றி வருந்தவில்லை போலும் என நினைப்பார்.இப்படி மாறி மாறி சிந்தனை அலை அடித்தது மதிவதனியின் நெஞ்சில்.அப்போது இளவரசி..இளவரசி என்று சுசீ அழைக்கும் குரல் கேட்டது.

சட்டென தாளிட்டிருந்த கதவினைத் திறந்தாள் மதிவதனி.கையில் ஒரு சிறிய துணி மூட்டையோடு நின்றிருந்தாள் சுசீ.

உள்ளே வா சுசீ என்று மதிவதனி அழைக்கவும் உள்ளே நுழைந்த சுசீ..இளவரசி கிளம்ப ஆயத்தமாகி விட்டீர்களா?

இன்னும் இல்லை சுசீ..ஒரே குழப்பமாக உள்ளது..

என்ன குழப்பம்?

ஒன்றும் புரியவில்லை..அது சரி அது என்ன துணி மூட்டை..?

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

இது உங்களுக்கான ஆடை..இதை அணிந்துதான் நீங்கள் ஹஸ்தனைச் சந்திக்கப்போகிறீர்கள்..சொல்லிக் கொண்டே மூட்டையை அவிழ்த்தபோது அதில் இருந்தது ஒரு ஆணின் உடை...

என்ன இது சுசீ..இதையா நான் அணியவேண்டும்?

ஆம் இளவரசி..பெண்ணின் உடையோடு நீங்கள் சென்று ஹஸ்தனைச் சந்திக்கப் போவதில்லை..அவ்வாறு செல்வது இயலாத காரியம்.பெண்கள் சிறைக்குச் சென்று கைதிகளைப்பார்க்க அனுமதி இல்லை என்பது உங்களுக்கே தெரியும்.எனவே இதனை அணிந்து கொள்ளுங்கள் இளவரசி.நேரம் ஆகிறது.உங்களுக்காக வைத்தியர் காத்திருப்பார்.அவரோடுதான் நீங்கள் சிறைக்குச் செல்லவிருக்கிறீர்கள்.

என்ன சொல்கிறாய் சுசீ..வைத்தியரோடு செல்ல வேண்டுமா?

ஆம்..இளவரசி வைத்தியரோடுதான் செல்லப்போகிறீர்கள்.குப்த இளவரசர் ஹஸ்தனுக்கு சிறையில் வைத்தியர் சிகிச்சை அளிக்கும்போது அவருக்கு உதவி செய்யும் உதவியாளராகச் செல்லப்போகிறீர்கள்.. ஆண் உடையில் சென்றால்தான் யாருக்கும் சந்தேகம் ஏற்படாது...இந்த உடையை அணிந்து கொள்ளுங்கள் இளவரசி.

சிறிது நேரம் முன்பு வரை  எளிமையாகவா?மிகையாகவா?எப்படி அலங்கார செய்து கொள்வது என்ற குழப்பத்திலிருந்த மதியின் குழப்பம் சுசீ ஆண் உடையில் செல்லப்போகிறீர்கள் என்று சொன்ன சொல்லால் நீங்கியது.

அடுத்து சிறு பொழுதில் கனகச்சிதமாய் இளவரசி மதிவதனி ஆணுடையில் மிக அழகிய வாலிபனாய் உருமாறியிருந்தாள்.கூந்தலை மறைத்து சிறிய முண்டாசு..காதில் வளையம்..நெற்றியில் சந்திர பிரபை போன்ற பொட்டு..மெல்லிய மீசை..இளவரசர்கள் அணிவதைப்போன்ற அரைக்கை வைத்த அங்கி மன்னர்கள் அணிவதைப் போன்ற இடுப்பிலிருந்து கால்வரைத் தொங்கும் ஆடை என ஆளே மாறிப்போயிருந்தாள்.

ஆனாலும் கச்சுக்குள்ளும் கட்டுக்குள்ளும் அடங்க மறுத்து அவளின் பெண்மை கொஞ்சம் முரண்டுதான் பிடித்தன.அவற்றையும் மார்பின் குறுக்காய் ஒரு துகில் கொண்டு மூடியாயிற்று.இப்போது யாருக்கும் இளவரசியைப் பார்த்தால் சிறிதும் சந்தேகம் வராது.

இளவரசி..

சொல் சுசீ...

உங்களைப் பார்த்தால் இளவரசி மதிவதனி என்று என்னாலேயே நம்ப முடியவில்லை..நீங்கள்தான் எவ்வளவு அழகான வாலிபனாகத் தெரிகிறீர்கள்..

அப்படியா..?

ஆம் இளவரசி.. இளவரசர் ஹஸ்தனாலும் நீங்களாய்ச் சொன்னாலன்றி உங்களை இளவரசி என்று அடையாளம் காண முடியாது..சரி வைத்தியர் காத்திருப்பார் கிளம்புங்கள் இளவரசி..

ஆகட்டும்..இதோ வந்து விடுகிறேன் சுசீ என்றபடி இன்னொரு அறைக்குள் சென்ற மதிவதனி தானே வரைந்த தன்னுடைய உருவ ஓவியம் ஒன்றினை எடுத்து முதுகுக்கும் முதுகின் மீது படிந்திருக்கும் ஆடைக்கும் இடையே வைத்துக்கொண்டாள் வெளியே தெரியாதவாறு.அறையை விட்டு வெளியே வந்த இளவரசி..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.