(Reading time: 9 - 17 minutes)

05. அமிழ்தினும் இனியவள் அவள் - ஜான்சி

Amizhthinum iniyaval aval  

"சோதனை மேல் சோதனை போதுமடா சாமி,

வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி

சோதனை மேல் சோதனை போதுமடா சாமி"

ஹாலில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் ரசிகரான அம்மா மிக ரசித்துக் கேட்டுக் கொண்டிருக்கும் பாட்டு ரூபனுக்கு என்னவோ தனக்கான சிச்சுவேஷன் சாங்க் மாதிரி தோன்றியது.

" இது உனக்குத் தேவையா? " என்று அவன் தன்னைத் தானே நூற்றி முப்பத்து நான்காவது முறையாக கேட்டுக் கொண்டு இருந்தான். அத்தைவந்துக் கேட்ட போதே மறுத்திருக்க வேண்டும். 

“சரி ஒரே ஒரு பாடம் தானே, அதுவும் அனிக்கு மேத்ஸ் வரவில்லை என்று தானே கேட்கிறார்கள். ஒருமணி நேரத்தில் என்ன ஆகி விடப் போகிறது என்று சம்மதித்தது இப்போது பாதகமாக ஆகிவிட்டதே??”.

அதிலும் அம்மா வந்து கூடவே ஜீவனையும் சேர்த்துக் கொள்ளச் சொன்னபோதாவது சுதாரித்து இருக்க வேண்டும். அதுவும் இல்லை. இப்போ இவங்கரெண்டு பேர் போடற சண்டையை தீர்க்கிற வேலையை மட்டும் தானே செஞ்சிட்டு இருக்கிறேன். ஒரு மணி நேரத்தில ஒரு அஞ்சோ பத்தோ நிமிஷம்கிடைச்சா ஒரு மேத்ஸ் சம் போட்டு காண்பிக்கிறதோட சரி. ஒரு மணி நேரம் முடிஞ்சதும் வெட்டி முறிச்ச மாதிரி பையை அவசர அவசரமா எடுத்துட்டுபோற ரெண்டு பேரையும் பிடிச்சு முதுகுல ரெண்டு வச்சா என்னன்னு தோணினாலும் அப்படி அவனாலச் செய்யத் தான் முடியுமா? டென்ஷனில் கைவிரல் நகத்தைக் கடிக்க ,

"அடச் சே இது என்ன ஜீவன் பழக்கம் எனக்கும் வந்திட்டு" என்று தன்னைக் கடிந்துக் கொண்டவனாக விரல்களைக் கழுவிக்கொண்டான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

அந்த நேரம் அவனைச் சோதிப்பதற்காகவோ என்னமோ அந்தப் பாடலின் அழுகாச்சி வரிகள் அவன் காதில் விழுந்து வைத்தது..

"மாமா காஞ்சிப்போன பூமி எல்லாம் வத்தாத நதியை பாத்து ஆறுதல் அடையும்.

அந்த நதியே காஞ்சி போய்ட்டா??

துன்பப் படுறவங்க எல்லாம் அந்த கவலையை தெய்வத்துகிட்ட முறையிடுவாங்க.

ஆனா தெய்வமே கலங்கி நின்னா??

அந்த தெய்வத்துக்கு யாரால ஆறுதல் சொல்ல முடியும்?"

ஐயோ ஐயோ ஐயோ......என்று தலையை முட்டிக் கொள்ளலாமா என்று அவன் யோசித்துக் கொண்டிருந்தான். மேத்ஸ் டியூஷன் டீச்சராகஅவன். ட்யூஷனுக்கு வந்த அதுங்க ரெண்டும் மேத்ஸ் தவிர முக்கியமான ஏதோ ஒன்றைச் செய்துக் கொண்டு இருக்கிறதுகள். பயங்கரக் கடுப்புடன்பார்த்துக் கொண்டிருந்தான். இதில் வேற இந்த அனிக் குட்டிப் பிசாசு அவன் க்ளாஸ் மேட் எல்லாரையும் கூட்டி வந்து இவனை கண்காட்சிப் போல காட்டிவிளக்க ஆரம்பித்து விட்டாள்.

“ இங்கப் பாரு இது தான் என் ரூபன் அத்தான் அவங்க டென்த்ல, ட்வெல்த்ல மேத்ஸ் மார்க் எவ்வளவு தெரியுமா? ஹன்ரட் ஔட் ஒஃப் ஹன்ரட், நான் இப்போ ரூபன் அத்தான் கிட்ட தான் ட்யூஷன் போறேன். பாரேன் நானும் டென்த்ல செண்ட் பர்செண்ட் வாங்கப் போறேன். இட்ஸ் அ சேலஞ்ச்” என்றதும் இவனை லேபில் பரிசோதனைக்கு வைத்த சுண்டெலியாக அவள் ப்ரண்ட்ஸ் எல்லோரும் பார்த்ததும்,

“ஏன் அனி, நானும் உன் கூட ட்யூஷன் வரேனே, நீ வேணா உன் அத்தான் கிட்ட கேட்டுச் சொல்றியா?” என ஓரிரு ப்ரண்ட்ஸ் கேட்க, “ இது வேறயா, கடவுளே என்னைக் காப்பாத்து” என இவன் வேண்டவும் கடவுள் உடனே அவனுக்கு மனம் இரங்கினார்.

“ஆக்சுவலி யூ நோ எங்க அத்தான் ரொம்ப பிஸி, இந்த வருஷம் அவங்களுக்கும் லாஸ்ட் இயர், எங்க அம்மா ரொம்ப ரிக்வெஸ்ட் செய்து கேட்டதனால தான் அவங்க ஸ்டடீஸ் கூட பார்க்காம எங்களுக்கு ட்யூஷன் எடுக்கிறாங்க, சோ அவங்க இன்னும் யாரையும் ட்யூஷன்ல சேர்க்கிறதா இல்லை” என்று பந்தாவாக பதில் சொன்னாள்.

“இட்ஸ் ஓகே டி” என்றுச் சொல்லி அவள் ப்ரண்ட்ஸ் புறப்பட்டுச் சென்றார்கள்.

அந்த டென்த்ல 100% வாங்க குறிக்கோள் வைச்சிருக்கிற பெரிய மனுஷி தான் இப்போ விழுந்து விழுந்து எதையோ எண்ணிக் கொண்டு இருக்கிறா? அவகிட்ட கேள்வி கேட்டுட்டு அவ என்னச் செய்யிறான்னே புரியாம இந்த ஜீவன் லூசும் அசட்டுத் தனமா சிரிச்சிட்டு அவனோட ரெண்டுக் கையையும், காலையும் ஜூ மங்கி போல நீட்டிட்டு இருக்கிறான்.

“ கன்றாவி கன்றாவி…… இன்னிக்கு ட்யூஷனுக்கு வந்ததும் வராததுமா ஜீவன் அப்படி ஒரு அறிவார்த்தமான கேள்வி கேட்டு வச்சான் பாருங்க கடந்த 15 நிமிடமா புக்கில வித விதமா எழுதி அனியும் தீவிரமா (?) யோசிக்க ஆரம்பிச்சுட்டா…..

அப்படியொன்னும் நாட்டுக்கு நல்லது விளையிற மாதிரி கேள்வி எதுவும் அவன் கேட்கலை, அவன் கேட்டது,

“ஏன் அனி நானும் உன்னோட பெரியவன் அப்படின்னா நீ என்னை ஜீவன் அத்தான்னு தான் மரியாதையா கூப்பிடனும்? என்று..

“என்ன ஒரு அறிவுக் கொழுந்து மேத்ஸ் ட்யூஷன்ல கேட்க வேண்டிய கேள்விதான்டா இது.”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.