(Reading time: 9 - 17 minutes)

நீங்க வாங்கத்தான்” என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டுச் சென்றாள்.

“ஏய் ரூபன் கோபப்படாத இவ இப்படித்தான் எதையாவது செஞ்சு வைப்பா”

விஷயம் புரியாமல் திரும்பி பார்த்தவனை

“அம்மா நீ எல்லாரையும் நல்லாப் பார்த்துக்கணும்னு வேற சொல்லி வச்சிருப்பாங்க போல அதான் அவளுக்கு கொஞ்சம் ஆர்வக் கோளாறு” என்றுச் சொல்லி சிரித்தான் கிறிஸ்.

இன்னும் ரூபனுக்கு ஒன்றும் புரிந்திருக்கவில்லை.

“அத்தான் இது தான் சந்தோஷ் அண்ணா, என் பிரண்ட் மாலதியோட அண்ணா தர்ட் இயர் படிக்கிறாங்க ”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

என்று முன்பின் தெரியாத ஒருவனிடம் கொண்டு போய் நிறுத்தியிருந்தாள்.

“சந்தோஷ் அண்ணா இது தான் எங்க ரூபன் அத்தான். நான் சொன்னேன்ல இவங்க நம்ம காலேஜுக்கு ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்காங்க, அதான் எங்க போகணும், எப்படிப் போகணும்னு எல்லாம் அவங்களுக்கு தெரியாது, நீங்கதான் எங்க அத்தானுக்கு ஹெல்ப் செய்யனும் ப்ளீஸ்”

“ அதுக்கென்னத்துக்குமா ப்ளீஸ் எல்லாம், நீ போம்மா உன் அத்தானுக்கு என்ன ஹெல்ப் வேணுமோ அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன், சரியா?” என்றுச் சொல்லிச் சிரித்த சந்தோஷிடத்தில் நட்பு பாவனை இருந்தது.அவனும் ரூபனும் கை குலுக்கிக் கொண்டனர்..

தன் தங்கையின் செய்கையால் தர்ம சங்கடமாக நின்ற கிறிஸ்ஸிடம் அதெல்லாம் ஒன்றுமேயில்லை என்பது போல தலையசைத்தான் ரூபன்.

“பை அத்தான்” என்று தான் வந்த வேலை முடிந்தது என்ற பாவனையுடன் அண்ணனுடன் விடைப் பெற்றுச் சென்ற அனிக்கு பதில் பை சொல்லி சந்தோஷீடன் திரும்பி நடந்த ரூபன் மனதில் என்னவென்றே புரியாத விதத்தில் சொல்லொண்ணா வகையில் இதம் பரவி இருந்தது.

தொடரும்

Episode # 04

Episode # 06

{kunena_discuss:970}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.