(Reading time: 13 - 26 minutes)

03. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

தாமரையும்,அவரது கணவரும் கன்னத்தில் கை வைத்து அமர்ந்தபடி,தங்களது மகனை பார்த்துக் கொண்டிருந்தனர்.

யஷ்வந்த் தன்னுடைய  கண்ணாடியை கழட்டவும்,”இந்த சோடாபுட்டி கண்ணாடியை கழட்டிட்டு அழகா,புளூ கலர்,இல்ல கிரீன் கலர்ல லென்ஸ் வாங்கி மாட்டிக்கக் கூடாதா.பார்க்கற பொண்ணுங்க எல்லாம்,இதை தான் குறையா சொல்றாங்க”என்று அலுத்துக் கொண்டார் குமார்.

“இது தான் எனக்கு பிடிச்சிருக்குப்பா”என்றவன் அம்மாவின் மடியில் தலைவைத்து படுக்க,குமார் அவனது காலை எடுத்து தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டார்.

ஒரே பிள்ளை என்பதால் அளவுக்கதிகமான பாசம் வைத்துவிட்டனர்.

அவனது கண்ணாடியை துடைத்து அவனுக்கு போட்டுவிட்ட தாமரை,”நாங்க ஒரு பொண்ணு பார்த்திருக்கோம் யஷு.பொண்ணு நல்லா குடும்ப பாங்கா இருக்கா”என்றதும் எழுந்து அமர்ந்தவன்,

“நம்ம கம்பெனிய கவனிக்க போதுமான திறமை இருக்க பொண்ணா இருந்தாலே போதும்”என்றவன் எழுந்து சென்றுவிட்டான்.

குமாருக்கு தான் இதில் வருத்தம் அதிகம்.தனக்காகத்தான் மகன் இப்படி சொல்லிவிட்டு செல்கிறான் என்று தெரியும்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்... 

“நான் அன்னைக்கு சொன்னதை இன்னும் மனசில வைச்சுட்டு இருக்கான் பார்.கல்யாணம் பண்ற பொண்ணுகிட்ட அழகு இருக்கா,குடும்பத்தை பார்த்துக்கற குணம் இருக்கான்னு பார்க்கணும்.இவன் முதல் ரெண்டு விஷயத்தை விட்டுட்டு,நல்ல மேனேஜ்மென்ட் தெரிஞ்ச பொண்ணா பார்க்க சொல்லிட்டு இருக்கான்.இதெல்லாம் நடக்கற காரியமா”என்று அலுத்துக்கொண்டார்.

குமார் சொந்தமாக ட்ரான்ஸ்போர்ட் கம்பெனியும்,வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் கம்பெனியும் வைத்திருக்கிறார்.

பரம்பரையாக வந்த சொத்து அல்ல.சிறுக சிறுக சேமித்த பணத்தை முதலாக போட்டு,முன்னுக்கு வந்திருந்தார்.

யஷ்வந்த் பிறக்கும் வரை ஆட்டோ ஓட்டுனர் தான்.அதுவும் சொந்தம் இல்லை.அவன் பிறந்த போது,குழந்தையை பார்க்க வரும் உறவினர்கள் கொடுத்த தொகையை முதல் தவணை தொகையாக கொடுத்து ஆட்டோ வாங்கினார்.

இருக்கும் வசதியை வைத்துக்கொண்டு,யஸ்வந்த்தை நல்ல பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்ற உறுதியுடன் அடுத்த குழந்தையை கூட பெற்றுக்கொள்ளவில்லை.

ஏன் அப்படி செய்தோம் என்று அவன் பள்ளிப்படிப்பு முடிந்த பின் தான் குமாருக்கு தோன்றியது.

“இன்னொரு பிள்ளையை ஏன் பெத்துக்காம போனோம்னு இப்போ தான் எனக்கு வருத்தமாவே இருக்கு”என்று மகனிடம் அதை சொல்ல,

”இப்போ கூட உங்களுக்கு வயசு ஆகிடலை”என்ற கிண்டல் பேச்சு தான் கிடைத்தது.

அவர் அப்படி யோசிக்க காரணம்,கஷ்டப்பட்டு உருவாக்கிய தொழிலை பிற்காலத்தில் மகன் பார்த்துக்கொள்வான் என்ற நம்பிக்கையில்,தங்கள் தொழிலுக்கு ஏற்ற படிப்பை படிக்க சொல்ல,அவன் அதற்கு சற்றும் சம்மந்தமில்லாத தகவல் தொழில்நுட்ப படிப்பை தேர்ந்தெடுத்தான்.

தாமரை அப்போதும்,”நீங்க மட்டும் என்ன பட்டப்படிப்பு படிச்சா,இவ்வளவு பெரிய கம்பெனிய உருவாக்கினிங்க.இப்போ அவனுக்கு பிடிச்ச படிப்பை படிச்சிட்டு,கொஞ்ச நாள் கழிச்சு நம்ம கம்பெனிக்கு வரட்டும்.ஒண்ணுக்கு நாலு ஆள் வச்சு தேவையானதை கத்துக்கொடுங்க”என்று கணவரை அடக்கினார்.

தொழிலை எடுத்து நடத்த மாட்டேன் என்று அவன் உறுதியாக இருக்க,படித்த படிப்புக்கு ஏற்ற தொழிலை சொந்தமாக வைக்க,உதவி செய்யலாம் என்று குமார் எண்ணிய போது,படிப்பை முடித்து லண்டன் மாகாணத்திலையே வேலையும் வாங்கிக் கொண்டான்.

அனுபவ அறிவை வளர்த்து கொள்ளட்டும் என்று பெற்றவர்கள் சம்மதிக்க,அதிலாவது நிலைத்தானா..கிடையாது..!!

ஒரே வருடத்தில் இந்தியாவிற்கு வந்துவிட்டான்.அதற்கு பின் அவன் தேர்ந்தெடுத்த வேலை நிச்சயம் அவர்கள் எதிர்பாராதது.

அப்போது ஒரு உறுதி கொடுத்தான்.

“எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பை உங்களுக்கே கொடுக்கறேன்.பொண்ணு நம்ம பிசினசை கவனிக்கற மாதிரி பாருங்க”என்றான்.

குமார் நல்ல திறமையான பெண்ணை தேடி பிடிக்க,தாமரை குணவதியாக அழகியாக,குடும்பத்தை நிர்வகிக்க கூடிய பொறுமை உள்ள பெண்ணாக பார்க்க,அனைத்தும் சேர்ந்த கலவை இன்னும் அவர்களுக்கு கிடைக்கத்தான் இல்லை.

தாமரை பொறுமை இல்லாமல்,”இந்த வேலையை விட்டுடு”என்று ஒரு நாள் கத்தவும்,மறுநாளே..

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.