(Reading time: 13 - 26 minutes)

நான் வேலைய விட்டுட்டேன்மா..உங்களுக்கு சந்தோஷம் தானே”என்றவன் தங்களுடைய இருப்பிடத்தை சென்னையிலிருந்து,கோவைக்கு மாற்றிக்கொண்டான்.

என்ன செய்து யாரிடம் மாட்டிக்கொண்டானோ..ஊர்விட்டு ஊர் வர வேண்டிய அவசியம் என்ன..!!

அவனிடம் காரணம் கேட்டு அவன் பொய்யே சொன்னாலும்,”நீ சொல்றது உண்மையா தான் இருக்கும் கண்ணு”என்று தாமரை சொல்லிவிடுவார்.

அவனை பெற்றவர்களுக்கு மகன் மேல் அதீத நம்பிக்கை இருந்தது.அந்த நம்பிக்கையில் குமாரும் தன்னுடைய அலுவலை இங்கே மாற்றிக் கொண்டார்.

YES நிறுவனத்தாரின் கிளை தமிழகம் முழுவதும் இருப்பதால் பிரச்சனை இல்லாமல் போயிற்று.

அனைத்து வேலைகளையும் குமாரால் தனியே கவனிக்க முடியவில்லை என்பதால் சரணை பார்டனராக சேர்க்க,யஸ்வந்த் ஆலோசித்துக் கொண்டிருந்தான்.

அதற்காக சரணிடம் பேச வேண்டும் என்று அவனை அழைக்க,”இங்க ஒரு பார்ட்டில இருக்கேன் மச்சான்.அப்புறம் கூப்பிடு”என்றான்.

“எங்கன்னு சொல்லு.நானே வரேன்”

“எங்க தோட்டத்து வீட்டுல தான் பார்ட்டி.அதுவும் ட்ரிங்க்ஸ் பார்ட்டி.நீ வரமாட்ட தானே”என்று நண்பனின் குணத்தை அறிந்து சொன்னான்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

தங்கமணி சுவாமினாதனின் "கொஞ்சம் பெரிய குழந்தைகளுக்கான கதை இது..." - பெரியவர்களுக்கான மந்திர, மாயாஜாலங்கள் நிறைந்த வரலாற்று கதை...

படிக்க தவறாதீர்கள்... 

“திடீர்னு என்ன பார்ட்டி..”

“எப்பவும் மாச கடைசில வைக்கிறது தான்.இன்னைக்கு கொஞ்சம் லேட் ஆகிடுச்சு”எனவும் புரிந்துகொண்டு யஸ்வந்த் போனை அணைத்துவிட்டான்.

சரண் சொன்னது போல ட்ரிங்க்ஸ் பார்ட்டி எல்லாம் நடக்கவில்லை.அவர்களது குடும்பத்தார் மட்டும் கலந்து கொள்ளும் பாட்டு கச்சேரியும் நடன கச்சேரியும் அரங்கேறிக் கொண்டிருந்தது..

பாண்டியன்,”நான் பொல்லாதவன்..”என்று பாடிக் கொண்டிருக்க,அவரது தங்கை மல்லிகாவின் கணவர் சாரதி அதற்கு ஏற்றார் போல நடனம் ஆடிக் கொண்டிருந்தார்.

செவ்வந்தியும்,சரணின் அம்மா மல்லிகாவும் அவருக்கு குரல் கொடுத்து உற்சாகமளித்துக் கொண்டிருந்தனர்.

மல்லிகா பரத நாட்டிய கலைஞர் ஆவார்.நடுத்தரக் குடும்பம் என்பதால் அவரது திறமை மேடை ஏறுவதற்கு முன்,அவரது திருமண நிகழ்ச்சி மேடை ஏறிவிட்டது.

ஆனாலும் ஓய்வு நேரத்தில்,ஆட தெரியாத சாரதிக்கே நடனம் கற்றுக்கொடுத்துவிட்டார்.அதிலே அவருக்கு பரம திருப்தி.

அடுத்து தன்னுடைய மகனுக்கும் மருமகளுக்கும் நடனம் கற்றுக்கொடுத்து,அவர்களுக்கு குருவாக விளங்குகிறார்.

செவ்வந்தியின் நடனத்தை ஒருமுறையாவது மேடையில் காண வேண்டும் என்று மல்லிகா அரும்பாடுபட்டு வருகிறார்.

நடனக் கலைஞரின் மதிப்பு,அவர் எங்கு ஆடுகிறார் என்பதை பொறுத்தே அமைகிறது.

தெருவில் பலரை கவர்ந்திழுக்கும் வகையில் உடலை அசைத்து,வதைத்து ஆடுபவன் தெருக் கூத்தாடியாவான்.

பத்தாயிரம் பேர் அமர வேண்டிய அரங்கில் பத்து பேரை ரசிகராக வைத்துக்கொண்டு ஆடுபவன்,கலையை ஆராதிப்பவனாவான்.

பார்க்கும் கண்களுக்கும்,அவர்கள் இருக்கும் நிலைமைக்கும் தகுந்தவாரே,மனிதர்களின் ரசனைக்கும்,அவர்களின் தொழிலுக்கும் கூட பெயர்கள் வைக்கப்படுகின்றன.

மல்லிகாவும் செவ்வந்தியின் நாட்டியத்தை பெரிய அரங்கில் அரங்கேற்ற விரும்பி அனைத்தையும் செய்தார்.

அவளுடைய பதினெட்டு வயது வரை ஆர்வமாக அனைத்தையும் கற்றுக்கொண்டவள் திடீரென ஒரு நாள்,”அதெல்லாம் வேண்டாம் மாமி”என்று சொல்லிவிட்டாள்.

மருமகளை எதற்கும் கட்டாயப்படுத்தும் குணம் இல்லையென்பதால்,மாதத்திற்கு ஒருமுறை தங்களது வீட்டில் ஆட வைத்து மனதை குளிரிவித்துக் கொள்வார்.

இப்போது சரணும்,செவ்வந்தியும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது திறமையை காட்டிக் கொண்டிருந்தார்கள்.

நேரமாவதை உணர்ந்த மல்லிகா,”நீ வீட்டுக்கு போ சரண்”என்று அனுப்பி வைத்துவிட்டார்.

“இதுல மட்டும் என்னை கழட்டி விட்டுடுங்க”புலம்பிக்கொண்டே சரண் சென்றான்.

செவ்வந்தி அர்த்தமாக அப்பாவை பார்த்துவிட்டு,அத்தையை அழைத்துக்கொண்டு வந்துவிட்டாள்.

மாதத்தின் இறுதி நாளில்,பாண்டியன் ட்ரிங்க்ஸ் குடிப்பது வழக்கம்.ஆர்மியில் இருந்த போது பழக்கப்பட்டுவிட்டது.மிலிட்டரி சரக்கு என்ற ஆசையில் சாரதியும் சேர்ந்துகொள்வார்.  

தன்னுடைய வீட்டிற்கு வந்த செவ்வந்தி அம்மாவின் புகைப்படத்தை வணங்கி திருநீரை எடுத்து நெற்றியில் வைத்துவிட்டு படுக்கையில் விழுந்தாள்.

மனமெல்லாம் அப்பாவை எப்படி சமாளிப்பது என்பதிலையே சுழன்றது.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.