அவனிடமிருந்து பதில் வராமலிருக்கவே,”இந்த தாடியும்,சோடாபுட்டி கண்ணாடியும் அதை தான் சொல்லுது”எனவும்,
“ஆமாம்”என்றான்.
“இதுவரைக்கும் எத்தனை லவ் பெயிலியர் ஆயிருக்கு”என்று கேட்கவும்,
“என்னைப் பார்த்தா எப்படி தெரியுது”என்றான்.
“இப்போ தான் ஆராய்ச்சியில இறங்கியிருக்கேன்.அப்புறமா சொல்றேன்.எனக்கு கூட லவ் பெயிலியர் தான்”எனவும் சட்டென்று அவன் நடை நின்று போனது.
அதை கண்டுகொள்ளாமல் நடந்தவள்,”15 வயசில வந்த பப்பி லவ்.அபிஷேக் பச்சானை தீவிரமா லவ் பண்ணேன்”என்றதும் கண்ணால் சிரிக்க துவங்கியவனை முறைத்தவள்..
“உண்மையை தான் சொல்றேன்.பேமஸ் டான்சர் நிரேஷ் சர்மாவை தெரியுமா”என்றதும்,
“தெரியும்”என்றான்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...
படிக்க தவறாதீர்கள்...
“அவர்கிட்ட டான்ஸ் கத்துக்க,ஒண்ணு அதிகபட்ச பணம் வேணும்.இல்லை அதிகபட்ச திறமை வேணும்.என்கிட்ட இருந்த திறமையினால அவர்கிட்ட ஸ்டுடென்ட்டா சேர்ந்து மூணு வருஷம் டான்ஸ் கத்துக்கிட்டேன்.அப்படியே மூவி சைட் என்ட்ரி கொடுத்து,லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைச்சா,என்னோட 18 வயசிலையே அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு.சரி நமக்கு விதிச்சது கந்தசாமியா தான் இருக்கணும்னா,எதுவும் மாத்த முடியாதுன்னு என்னோட கவனத்தை படிப்பில செலுத்த ஆரம்பிச்சிட்டேன்”என்றாள்.
நிரேஷ் எப்படி இவளை வெளியே அனுப்பினான் என்று தான் தோன்றியது.அவனை குருவாக பெற வரம் கிடைத்திருக்க வேண்டும்.மிகவும் சிறிய வயதில் புகழின் உச்சிக்கு சென்றுவிட்டான்.
அவனிடம் அரைகுறையாக நடனம் பயில்பவர்கள் கூட,திரைத்துறையில் சாதனையாளர்களாக விளங்குகிறார்கள்.அவனுக்கு பிடித்துவிட்டால்,எப்படியாவது சினிமாவில் நுழைத்துவிடுவான்.
“நிரேஷ் எதுவும் சொல்லலையா”
“அவனா..”என்று மரியாதை இல்லாமல் அழைத்தவள்,”என்கிட்ட கல்யாணம் பண்ணிக்கலாம்னு கேட்டான்.நான் தான் முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன்”என்றாள்.
“பொய் நிறைய சொல்லுவேன்னு கேள்விப்பட்டேன்.அதுக்குன்னு இவ்வளவு சொல்ல கூடாது”என்றான் கேலியாக.
“நீங்க எப்படி வேணா நினைச்சுக்கோங்க..உங்களோட லவ் எப்படி”என்றாள்.
“எப்படின்னா..”
“வெளிநாட்டுல படிச்சிருக்கீங்க.xyz எல்லாம் தெரிஞ்சிருக்கும்..பல லவ்ஸ் மனசில வந்து போயிருக்கும்.அதை கேட்டேன்”என்று அவள் அவனது சொந்த விஷயத்தில் தலையிட்டுப் பேச,
“பொண்ணு மாதிரி பேசு”என்று அதட்டினான்.
“ஏன் பொண்ணுன்னா இப்படி பேச கூடாதா..உங்களை பெத்ததும் பொண்ணு தான்.உங்களுக்கு பெத்துக் கொடுக்க போறதும் பொண்ணு தான்”என்றதும் அவனது கண்கள் சிவந்துவிட்டது.
“எனக்கு பெத்துக் கொடுக்க போறவகிட்ட நான் சொல்லிக்கறேன்”என்றவன் விடுவிடுவென்று நடக்க துவங்க..
“அதனால தானே நான் கேட்கறேன்”என்றவளது வார்த்தைகள் செவியில் எட்டியதும் ஒருகணம் அவனது நடை நின்று போனது.
‘இப்படியும் காதலை சொல்லலாமோ’என்று எண்ணியவன்,அதற்கு பின்,’இது சரி வராது’என்று சொல்லிக்கொண்டு வேகமாய் நடக்க தொடங்கினான்.
தொடரும்
{kunena_discuss:1004}
The above article / story / poem is a copyright material and is published with the consent of the author. If you find any unauthorized content do let us know at
Chillzee is an entertainment website and all the content published here are for entertainment purpose only. Most of the content are fictional work and should be treated accordingly. Information on this website may contain errors or inaccuracies; we do not make warranty as to the correctness or reliability of the site's content. The views and comments expressed here are solely those of the author(s) in his/her (their) private capacity and do not in any way represent the views of the website and its management. We appreciate your high quality of listening to every point of view. Thank you.