(Reading time: 20 - 40 minutes)

04. வானவிழியழகே - நிஷா லக்ஷ்மி

Vaana Vizhi Azhage

னக்கு பதில் ஏதும் சொல்லாமல் செல்பவனை பார்த்துக்கொண்டே இருந்த அவந்திகா,தன் தலையில் சரண் நறுக்கென்று கொட்டிய பிறகு தான் பார்வையை அவன் பக்கமே திருப்பினாள்.

“ஏண்டா மாமா அடிச்ச”தலையை தேய்த்துக்கொண்டே கேட்டவளிடம்,

“உன்ன அடிக்காம..கொஞ்சனுமா..யஸ்வந்த்க்கு ஏண்டி லவ் சொன்ன..உனக்கு அட்வைஸ் பண்ண சொல்லிட்டு போறான்”என்று பொரிந்தான்.

“அட்வைஸ் தான பண்ண சொன்னார்.பண்ண வேண்டியது தானே.அதை விட்டுட்டு ஏண்டா மாமா அடிக்கற..சொல் ஒண்ணு,செயல் ஒண்ணுன்னு இருக்காதேன்னு உனக்கு எத்தனை முறை சொல்றது.இப்படியே இருந்தேன்னா,நாளைக்கு உனக்கு கல்யாணத்துக்கு சப்போர்ட்க்கு நான் வரவே மாட்டேன்”என்று அவனை மிரட்டினாள்.

“இப்படி பேசிப்பேசியே என்னை ஆஃப் பண்ணிடு.நீ நல்லா வருவ”என்று வாழ்த்துவது போல திட்டியவன்,

“உனக்கு அவன் சரி வர மாட்டான் அவந்திகா.நம்ம வீட்டுலையும் ஒத்துக்க மாட்டாங்க.எதையும் யோசிச்சு அடுத்தவங்ககிட்ட பேசு”என்றான்.

“உன்னோட கல்யாணத்துக்கு மட்டும் எல்லாரும் அப்படியே பூத்தூவி வாழ்த்துவாங்கன்னு நினைச்சியா..முதல்ல என் மேட்டர் க்ளியர் ஆனா தான்,உன் வீட்டுல உன் கல்யாணத்துக்கு எட்டிப் பார்க்கவாவது முயற்சி செய்வாங்க.நீ முந்திக்கிட்டு மாலையும் கழுத்துமா போய் நின்னேன்னா,சாராயக் கடைக்காரர் உன்னைய வெட்டுறதுக்கு,சாரதி மாமாவே அருவாள் எடுத்து கொடுப்பார்..நீ எதையும் யோசிச்சு எனக்கு அட்வைஸ் பண்ணு”

“இந்த வாய் மட்டும் இல்லைன்னா உன்னை நாய் கூட சீண்டாதுடி”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ரேணுகா தேவியின் "அனல் மேலே பனித்துளி..." - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

“இங்க பாருடா மாமா.இனிமேல் என்னை நீ ‘டி’ போட்டு கூப்பிடவே கூடாது..என்னோட ஆளுக்கு பிடிக்காம கூட போகலாம்”

“நீ மட்டும் வயசு வித்தியாசம் பார்க்காம,என்னை டா போட்டு கூப்பிடற..இது எந்த விதத்தில நியாயம்”என்று பதிலுக்கு எகிறினான்.

“எனக்கும் அநியாயமா தான் இருக்கு.நீ எனக்கு மாமான்னு சொல்றதை விட,பர்ஸ்ட் பிரண்டு தான்..அந்த யஸ்வந்த்க்காக,இத்தனை வருஷ நட்பை மறந்து,ஒரு நிமிஷம் உன்னை நான் தள்ளி வச்சுட்டேண்டா மாமா..சாரி”என்று மன்னிப்பு கேட்டவள்,

“அந்த சோடாபுட்டி எங்க போனார்”என்று கேட்டாள்.

“அவன் வீட்டுக்கு போயிட்டான்.இப்பவும் சொல்றேன்.உன்னோட ஆசைகள் கனவுகள் வேற.அவனோட ஆசைகள் கனவுகள் வேற.சரிப்பட்டு வராது”

“ஆரம்பிக்கும் போதே தடை பண்ணாதேன்னு எத்தனை முறை சொல்றது.நானே இன்னும் லவ் பண்றேனா இல்லையான்னு முழுசா அனலைஸ் பண்ணலை.அந்த சோடாபுட்டி கண்ணாடியை பார்த்ததும் சட்டுன்னு வாயில வந்துடுச்சு.இனிமேல் என்னால எதையும் மாத்திக்க முடியாது”என்றாள் பிடிவாதமாக..

“அடிப்பாவி..அந்த சோடாபுட்டி கண்ணாடிக்காகவா அவனை லவ் பண்றேன்னு சொன்ன”என்று தலையில் கை வைத்தவன் படியில் அமர்ந்துகொண்டான்.

“வேற எதுக்காகடா மாமா சொல்ல முடியும்.எனக்கு அவரைப் பத்தி வேற எதுவுமே தெரியாதே”என்று சொல்லுபவளை பரிதாபமாகத்தான் பார்த்தான்.

இந்தக் காதல் எந்த நொடியில்..எந்த வினாடியில் மனதிற்குள் பூக்கிறது என்று கடிகாரம் பார்த்து மணியை குறித்து வைத்துக்கொண்டவர்கள் யாரும் இல்லை.

அதை அவனும் உணர்ந்தவனாக,”எனக்கு தெரிஞ்சதை சொல்றேன்”என்று யஸ்வந்தின் குடும்ப விவரங்கள்,தொழில் படிப்பு என்று அவளுக்கு தேவையான அனைத்தையும் சொன்னான்.

அப்போது அவந்திகாவுக்கு போன் வரவும்,”வர்ஷூ தான் கால் பண்றா.நான் ஹாஸ்டல்க்கு போயிட்டு அப்படியே வீட்டுக்கு வந்துடறேன்”என்றவள் யஸ்வந்த்தை மறந்தவளாக ஹாஸ்டலுக்கு வந்துவிட்டாள்.

வர்ஷூ கேட் அருகே தயாராக நின்றவள்,”கோவிலுக்கு போகலாம் அவந்தி..”என்று சொல்லவுமே,அவளது முகம் சரியில்லாததை உணர்ந்து,மதிய நேரம் கூட்டம் இல்லாத கோவிலுக்கு அவளை அழைத்து சென்றாள்.

கடவுளை வணங்கி பிராகாரத்தில் அமர்ந்தவர்கள்,எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

வர்ஷூவிற்கு மிகுந்த தயக்கமாக இருந்தது.

இருந்தாலும் தன் தேவைக்கு தான் தான் பேச வேண்டும் என்று புரிய வர,”எனக்கு பார்ட் டைம் வேலை அரேஞ் பண்ணி தரியா”என்று தயங்கி தயங்கி கேட்டாள்.

“ஏன் வர்ஷூ.அக்கா பணம் அனுப்பலையா”என்று நேரடியாக விஷயத்திற்கு வந்தாள்.

“அனுப்பலை..வேற எதையும் கேட்காத..ப்ளீஸ்”என்று கெஞ்சவும்,

“இன்னும் படிப்பு கூட முடியலை வர்ஷூ.இப்போ வெளில போய் வேலை பார்த்தாலும் சரியா பணம் கிடைக்காது.மாசமாசம் கிடைக்கற பணத்தை வைச்சு ஹாஸ்டல் பீஸ் வேணா கட்டலாம்.ஆனால் எப்படி காலேஜ் பீஸ் கட்ட முடியும்.செமஸ்டர் பீஸ் முன்னாடியே வாங்கிட்டாலும்,புக் பீஸ்,ஸ்போர்ட்ஸ் ட்ரெஸ்,கிளப் பீஸ்னு லைனா வந்துட்டே இருக்கும்.நான் வேணா உனக்கும் சேர்த்தும் கட்டிட்டட்டுமா”என்று தயங்கியே கேட்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.