(Reading time: 20 - 40 minutes)

வேறு வழியே இல்லாமல்,சமையல் செய்யும் காண்ட்ராக்டர்,”இனி நல்லா ஆரோக்கியமான உணவா இருக்கும்”என்று உறுதி கொடுத்து,எழுதி வேறு கொடுத்தார்.

அதில் கொசுறாக,போராடியவர்களின் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்பதையும் சேர்த்து எழுதி வாங்கினர்.

தங்களது ஒரு மணி நேர போராட்டம் வெற்றி பெற்றுவிட்டதற்காக,தயாராக வைத்திருந்த கேக்கை முகத்தில் பூசி விளையாண்டுவிட்டு அவர்கள் எல்லாம் அங்கிருந்து கலைந்து செல்வதற்கு இரவு மணி பத்து ஆகிவிட்டது.

ஹாசினி அவளது அப்பாவிடம்,தோழியுடன் வந்துவிடவதாகவும்,துணைக்கு ஆட்கள் இருப்பதாகவும் சொல்லிவிட்டு அவந்திகாவின் ஸ்கூட்டி அருகே நின்று கொண்டாள்.

வழக்கம் போல பைக் ஸ்டேண்டில் மாநாடு நடக்க,அவர்களை விரட்டி அடிப்பதற்குள் சரணுக்கு தான் போதும் போதுமென்று ஆகிவிட்டது.

அந்த கடுப்பில்,”நைட் நேரமாகிடுச்சுன்னு தெரிஞ்சும்,இவ்வளவு லேட் பண்ணுறியே..உனக்கு அறிவில்ல”என்று சத்தத்தை குறைத்து அவந்திகாவை சரண் திட்டினான்.

“உனக்கு தாண்டா மாமா அறிவில்ல.நீ மட்டும் தனியா வந்திருக்க வேண்டியது தானே.நான் லவ் சொல்லி முழுசா ஒரு நாள் கூட ஆகலை.அதுக்குள்ள என்னோட இமேஜை டேமேஜ் பண்ற மாதிரி எல்லாம் நடந்துதுன்னா,நான் ரொம்ப வாயாடின்னு நினைச்சு பயந்து அவர் ஓடிட மாட்டாறா..”என்று அவளும் சத்தத்தை குறைக்காமல் அவனுடன் ரகசியம் பேச,ஹாசினி அவர்களை சிரிப்புடனே பார்த்துக்கொண்டிருந்தாள்.

உடனே சரணை பார்த்து கண் சிமிட்டிய அவந்திகா,ஹாசினியின் முகத்தை வழித்து நெட்டி முறித்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

“உன்ன மாதிரி ஒரு காதலி கிடைக்க,இவன் என்ன புண்ணியம் பண்ணானோ..நீ தான் பாவம் பண்ணிட்ட”என்று கிண்டல் செய்த போதும் கூட அவள் தன் புன்னகையை குறைத்துக்கொள்ளவில்லை.

நட்புக்கும் காதலுக்கும் உள்ள வித்தியாசத்தை அவள் புரிந்து வைத்திருந்ததினால்,தான் அருகில் இருக்கும் போது தன்னை விட்டுவிட்டு,தோழியுடன் தன் காதலன் பேசுவதை கண்டு சிறிதும் பொறாமைப்படவில்லை.

அவர்கள் பேசுவதை கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த யஸ்வந்த்,”கிளம்பலாமே..நேரமாச்சு.அம்மா கால் பண்ணிட்டே இருக்காங்க”என்று உரைக்கவும் நக்கலாக பார்த்த அவந்திகா,

“நீ கிளம்புடா மாமா..என்னோட ஸ்கூட்டியில பெட்ரோல் இல்ல.நான் போட்டுட்டு இவளை கொண்டு போய் விட்டுட்டு,வீட்டுக்கு வந்துடறேன்”என்று சொன்னதும் அங்கிருந்த மூன்று பேருமே முறைத்தார்கள்.

இவ்வளவு நேரமும் இதை சொல்லாமல் தான் வெட்டியாக அரட்டையடித்துக் கொண்டிருந்தாளா..-யஸ்வந்த்திற்கு கோபம் வந்துவிட்டாலும்,அதை காமிக்க விரும்பாமல்,அவனும் தன் பங்கிற்கு பைக்கை உருட்ட ஆரம்பித்தான்.

மறந்தும் நான் போய் வாங்கிட்டு வர்றேன் என்று அவன்  சொல்லவில்லை.

அவந்திகாவுக்கு அப்போது தான் சரணும்,யஸ்வந்தும் ஒரு பைக்கிலையே வந்திருப்பது புரிய,ஒவ்வொரு முறையும் ஏன் அவன் வண்டி என்று எதையும் எடுத்து வருவதில்லை என்று யோசித்தாள்.

அவளது யோசனையை யஸ்வந்த் படித்தானோ..என்னவோ..”இந்த மாதிரி காலேஜ்க்கு எதிரா போராட்டம் பண்ணுறதினால,உங்களுக்கு எதிரா இன்டெர்னல் மார்க்ல கை வைச்சா என்ன பண்ணுவீங்க.பயமா இல்லையா”என்று அவனே வழியப் போய் பேச்சை ஆரம்பித்தான்.

அவன் பேசவும் அவளுக்கு கொண்டாட்டமாகிவிட,ஸ்கூட்டியை உருட்டிக்கொண்டே,”இன்டர்னல் மார்க்ல கை வைச்சா என்ன ஆகும்.பெயில் தானே ஆவோம்.அப்படி ஆனால் என்ன..டிகிரி கிடைக்காது..அவ்வளவு தானே”என்றாள் மிகவும் எளிதாக..

“அப்போ வேலைக்கு போற ஆசையெல்லாம் உங்களுக்கு கிடையாதா”என்றான் தயக்கமாக..

“நான் எதுக்கு வெளில போய் வேலை பார்க்கணும்.டிகிரி இல்லைன்னா,போயிட்டுப் போகுதுன்னு எங்க பூ மார்கெட் பக்கம் கவனத்தை செலுத்திடுவேன்”

“பேச்சுக்கு வேணா நல்லா இருக்கும்”

“செயலுக்கும் நல்லாவே இருக்கும்.பூக்கட்டி விற்கறது மட்டுமில்ல..எங்க ஊர்ல இருக்க எல்லார் வீட்டு விசேஷத்துக்கும்,மேடை அலங்காரம் செய்ய  எங்ககிட்ட தான் பூ வாங்குவாங்க..அப்படி மீறிப் போறவங்ககிட்ட,அம்பாள் நிச்சயம் இந்த விசேஷத்தை நல்லபடியா நடக்க விடமாட்டான்னு சும்மா ஒரு கதை கட்டிவிட்டாப் போதும்.என் பிசினெஸ் ஓஹோன்னு போகும்”

“அம்பாள் உங்க வீட்டு மாலையை தவிர வேற யார் மாலையும் ஏத்துக்க மாட்டன்னு சொன்ன மாதிரி”என்று எடுத்துக் கொடுத்தான்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.