(Reading time: 19 - 37 minutes)

10. அனல் மேலே பனித்துளி - ரேணுகா தேவி

Anal mele pani thuli

"பிரெண்ட்ஸ் லாஸ்ட் எபிஸோடு கொடுக்க முடியாமல் போனதற்கு மன்னிக்கவும்."

உன்னாலே  எந்நாளும் என் ஜீவன் வாழுதே

சொல்லாமல் உன் சுவாசம் என் மூச்சில் சேருதே

உன் கைகள் கோர்க்கும் ஓர் நொடி

என் கண்கள் ஓரம் நீர் துளி

உன்  மார்பில் சாய்ந்து சாக தோணுதே

விடிந்தாலும்  வானம்

இருள் பூச வேண்டும்

மடி மீது சாய்ந்து

கதை பேச வேண்டும்

 

முடியாத பார்வை

நீ வீச வேண்டும்

முழு நேரம் என் மேல்

உன்  வாசம் வேண்டும்

சென்னையின் மிகப்பெரும் தொழில் நிறுவனத்தால் நடத்தப்படும் பள்ளி அது. அதன் தாளாளர் அறையில் கைகளை பிசைந்த வண்ணம் நின்று கொண்டிருந்த தயாளன் எதிரில் இருந்த மதுவின் முகத்தையே பார்த்திருந்தார். தன் கையில் இருந்த சில காகிதங்களை புரட்டியவள் நிமிர்ந்து தயாளனை பார்த்தாள்.

"இந்தாங்க இதில் உங்களுக்கு  செட்டில் பண்ண வேண்டிய அமவுண்ட்க்கான செக் இருக்கு. இதுல உங்களுடைய செர்டிபிகேட்ஸ் அப்பறம் இங்க வேலை செய்தற்கான எக்ஸ்பீரியன்ஸ் செர்டிபிகேட் " என்று தன்னிடம் இதை இரண்டு கவரை அவரிடம் நீட்டினாள் மது.

"மேடம் நான் செஞ்சது தப்புதான் இனிமேல் நடக்காம பார்த்துக்கிறேன். பிலீஸ்" - தயாளன்

"என்னை நீங்க ரொம்ப மட்டமா எடை போட்டுட்டீங்க மிஸ்டர் தயாளன். இது நீங்க பண்ணுன முதல் தவறு இல்லை. மூன்றாவது தவறு.இதற்கும் முன்னாடி நீங்க பண்ணுனதெல்லாம் எனக்கு தெரியவரவே இல்லைனு நெனைச்சீங்களா. அப்போ நான் விட்டதுக்கும் இப்போவும் உங்களை போலீஸ்ல ஒப்படைக்காம விடவும் ஒரே காரணம் உங்க குடும்பம் தான். உங்களை நம்பி உங்க பேரன்ட்ஸ் உங்க மனைவி குழந்தைகள் இருக்காங்க. அதனால தான் உங்க எக்ஸ்பீரியன்ஸ் செர்டிபிகேட்ல கூட எந்த ப்ளாக் மார்க்கும் போடல. ஆனா உங்க குடும்பத்தை பத்தி நீங்க கவலைபடற மாதிரி எனக்கு தெரியலையே. அப்படி நெனைச்சிருந்தா இப்படி பண்ணிருப்பீங்களா." -மது

"இல்லை மேடம் அந்த பையன் ரொம்ப குறும்பு பண்ணுனான் அதான் ..." -தயாளன்

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

புவனேஸ்வரியின் "நினைத்தாலே இனிக்கும்..." - கல்லூரி காதல் கதை...

படிக்க தவறாதீர்கள்... 

"ஜஸ்ட் ஷட் அப் . அது குழந்தை சார். அஞ்சு வயசு. அந்த குழந்தையை மிருக தனமா போட்டு அடிச்சிருக்கீங்க. உங்களுக்கும் ஒரு பையன் இதே வயசுல இருக்கானே அவனை அவங்க ஸ்கூல்ல யாராவது இப்படி அடிச்சா நீங்க பார்த்துட்டு இருப்பிங்களா"? -மது

"போதும் நிறுத்தும்மா என்னமோ கொலை குத்தம் செஞ்ச மாதிரி பேசற. என் பையனோட அந்த அனாதை பயல கம்பெயர் பண்ணாதே " என்று தயாளன் எகிற மதுவின் முகம் கோபத்தில் சிவந்து கொதித்தது.

"வாயை மூடுங்க. இத்தனை நேரம் நான் உங்க தொழிலுக்கு மரியாதை கொடுத்தேன். நீங்க எல்லாம் இந்த தொழிலுக்கு கொஞ்சம் கூட தகுதியே இல்லாதவர். என்ன சொன்னிங்க அனாதையா அவனை அடிச்சா யாரும் கேக்க மாட்டாங்கன்னு தான அப்படி அடிச்சுருக்கீங்க. இந்த உலகத்துலையே மிகப்பெரிய vip யுடைய குழந்தை அவன்...அந்த கடவுளின் குழந்தைகள் தான் இங்க இருக்கவங்க எல்லாம். இங்க வேலைக்கு சேரும்போது தெரியாது நீங்க டீச் பண்ண போறது இது போன்ற ஆதரவற்ற குழந்தைகளுக்குனு. இங்க இருக்க குழந்தைகளுக்கு நாம் ஆசிரியர் மட்டும் இல்லை தாயாவும் தகப்பனாகவும் இருக்கணும்னு தெரியாது? நீங்க என்ன இங்க இலவச சேவையா பண்றிங்க ? மத்த ஸ்கூல்ஸ்ல கொடுக்கறதை விட நல்ல சம்பளம் தரலை. " என்று பொரிந்தவள் தான் வைத்திருந்த அந்த பைலை திறந்து அதில் ஏதோ எழுதியவள் "இந்தாங்க நீங்க இங்க வேலையில் இருந்து நீக்கப்பட்டதுக்கான காரணத்தையும் சேர்த்தே எழுதிருக்கேன். அளவுக்கு மீறி கிடைக்கும் மன்னிப்பு கூட தவறு தான். நீங்க கிளம்பலாம் " என்று பைலை அவர் முன்னாள் வைத்து விட்டு தன் வேலையை தொடர்ந்தாள்.

ஒரு சிறு பெண் தன்னை அவமதித்தது மட்டும் அல்லாமல் இப்போது தான் வேறு எங்கும் வேலைக்கு செல்ல இயலாதபடி செய்த ஆத்திரத்தில் " தப்பு செயிரிங்க " என்று தயாளன் உறும, மெல்ல தலை நிமிர்த்தி அவனை பார்த்தவள் "தப்பா...நான் செய்றது தப்புனா இந்த தப்பை நான் திருத்திக்க போறது இல்லை " என்றவள் "கந்தசாமி தாத்தா " என்று அழைக்க வெளியில் இருந்து வேகமாக வந்த கந்தசாமி தாத்தாவிடம் "இந்தாங்க தாத்தா இதுல மிஸ்டர் தயாளனுடைய செர்டிபிகேட்ஸ் இருக்கு. ஸ்டாப் ரூம்ல அவருடைய லாக்கர் சாவிய வாங்கிட்டு இதை அவருகிட்ட கொடுத்துருங்க " என்று கூறியவள் தான் வேலையை நோக்க வேறு வழியின்றி அவளை முறைத்தவண்ணம் வெளியேறினார் தயாளன்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.