(Reading time: 19 - 37 minutes)

யாளன் அறையை விட்டு வெளியேறியவுடன் நீண்ட பெருமூச்சை விட்டவள் தன் அறையிலிருந்த போனை எடுத்து " பைரவி கொஞ்சம் காபினுக்கு வா" என்று அழைத்தவள் தலையை பிடித்து கொண்டு அமர்ந்து விட்டாள்.

உள்ளே நுழைந்த பைரவி மதுவின் நிலையை கண்டவள் அருகே இருந்த அறைக்குள் நுழைத்தாள். அவள் வெளியில் வரும் பொழுது அவள் கைகளில் சுடச்சுட காபியுடன் வந்தாள்.

"இந்தாங்க மேடம் ?" என்று மதுவிடம் நீட்டியவளை நிமிர்ந்து பார்த்து முறைத்தாள் மது.

"சரி சரி முறைக்காத... இந்தா மது காபி எடுத்துக்கோ. போதுமா? " என்றவளை பார்த்து புன்னகைத்தவள் "ஹ்ம்ம் அது... சரி மத்தவங்க முன்னாடி பேர் சொல்லி கூப்பிட்டா உன்னுடைய பதவிக்கு மரியாதை இல்லைனு சொன்ன..நானும் போனா போகுது அப்படினு விட்டா இங்கயும் வந்து மேடம் கீடம்னுட்டு இருக்க...anyway ரொம்ப நன்றி பார் (for) அருமையான காபி... ஆமாம் உனக்கு எப்படி தெரியும் எனக்கு தலைவலின்னு "  என்றவள் எதிரில் அமர்ந்த பைரவி," மிஸ்டர் தலைவலி வந்துட்டு போனாராமே ... அப்பறம் உனக்குதலை வலிக்காம இருந்தா தான் அதிசயம் " என்றவுடன் இருவரும் சேர்ந்து சிரித்தனர்.

"பாபு எப்படி இருக்கான்? " - மது

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

"நல்ல இருக்கான் மது. இன்னைக்கு ஹோமுக்கு கூட்டிட்டு வந்துரலாம். கொஞ்சம் பயந்துட்டான் . அதனாலா வந்த ஷாக் தான் வேற ஒன்னும் ப்ராப்லம் இல்லைனு டாக்டர் சொல்லிட்டாரு." - பைரவி

"ஓஹ் சரி. நான் நாளைக்கு மோர்னிங் ஊருக்கு போறேன். அண்ணா மேரேஜ்  முடிஞ்சு வர எப்படியும் பத்து நாள் ஆயிடும். நம்ம விபி கிட்ட சொல்லிட்டேன். நீயும் பார்த்துக்கோ பைரவி " -மது

"நீ சொல்லவே வேண்டாம் மது. நா பார்த்துக்கறேன். உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? " -பைரவி

" என்ன ?" -மது

எனக்கு இன்னொரு பேரு இருக்கு " என்று பாட்ஷா ரஜினி ஸ்டைலில் சொன்னவளை கண்டு சிரிப்புடன், "அது என்னம்மா பேரு " என்று கேட்டாள் மது.

"ஹாஹாஹா இது நானா வெச்சுக்கிட்டு பேரு இல்லை... தான அமைஞ்ச பேரு " - பைரவி

"ஹஎய் சும்மா பில்ட் அப்  கொடுக்காம மேட்டருக்கு வா" -மது

"ஒற்றி " -பைரவி

"என்னது ஒற்றியா " என முழித்த மதுவிடம் , "ஆமா மேடம் ஆமா நான் உன்னுடைய ஒற்றர் படையாம். அதனுடைய பெண்பால் தான் ஒற்றி.. நம்ம ஸ்டாப்ப்ஸ் வெச்ச பேரு " என்று சிரித்தவள், "மது இந்த முறையாச்சும் அவரை மீட் பண்ணுவியா " என்று கேட்க, அது வரை பைரவியின் பேச்சில் மலர்ந்திருந்த மதுவின் முகம் வாடி போனது.

"அண்ணா நிச்சயமா இன்வைட் பண்ணிருப்பாங்க. அவரும் வருவார். இந்த ரெண்டு வருஷமா நான் அவரை பார்க்காம வேணா இருந்திருக்கலாம். ஆனா அவருடைய நினைவு இல்லாம நான் இருந்ததே இல்லை. இப்போ வீட்டுக்கு போகும் போது அவரை பாப்போம்னு ஒரு பக்கம் சந்தோசமா இருக்கு. ஆனா அவரை பார்த்த அடுத்த நொடி என்னுடைய உறுதியில இருந்து நான் விலகிடுவேனோனு பயமா இருக்கு. அவரை மறைஞ்சு இருந்தும் கூட பார்க்க கூடாதுனு நான் நினைப்பதற்கு முக்கியமான காரணமே இது தான். அவர் நல்லா சந்தோசமா இருக்கணும். எல்லோருக்கும் காதல் வரும் ஆனா அது ஜெயிச்சு ஒண்ணா சேர்ந்து வாழும் அதிர்ஷ்டம் எல்லோருக்கும் கெடைக்காது. என் வலி என்னோடையே போகட்டுமே தெரிந்தே அதுல அவரையும் சேர்க்க எனக்கு விருப்பம் இல்லை. " என்றவளை பார்த்த பைரவி " எனக்கு புரியுது மது. ஆனா இப்போ அவருக்கு எந்த வலியும் இல்லைனு நெனைக்கிறியா?" என்று கேட்க, வலி நிறைந்த கண்களுடன் அவளை பார்த்தாள் மது.

"வலியா.. உனக்கு அவரை பத்தி தெரியாது பைரவி. நானும் அவரும் பேசிக்கிட்டது மூணே முறைதான். ஆனா அவருடைய எண்ணம் அது எப்படி இருக்கும்னு எனக்கு தெரியும். இப்போவும் நான் சொன்னதெல்லாம் பொய்யா இருக்கும் உண்மை என்னனு ஆராய்ச்சி பண்ணிட்டு இருப்பார். அவ்வளவு சீக்கிரம் நான் சொன்னதை நம்ப மாட்டார். " - மது

"அது தான் தெரியுதே ரெண்டு வருஷம் ஆச்சு இன்னும் வேற கல்யாணத்துக்கு ஒத்துக்களை. இனியும் எப்படி வேற ஒரு கல்யாணம் பண்ணிப்பாருனு நீ நினைக்கிற மது?" -பைரவி

"அவருக்கு என் மேல் எவ்வளவு காதல் இருக்கோ அதை விட அதிகமா அவங்க பேரன்ட்ஸ் மேல பாசம் இருக்கும் இல்லையா. நிச்சயம் வேற கல்யாணம் பண்ணிப்பாரு அவங்களுக்காகவாவது. " -மது

"அப்படி பண்ற கல்யாணத்தால அவருக்கு சந்தோசம் கிடைக்குமா ? " –பைரவி

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.