Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
(Reading time: 8 - 15 minutes)
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
Pin It
Author: Buvaneswari

36. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ninaithale Inikkum

ச்ச ச்ச..வரவர இது காலேஜா இல்ல சன் டீவி சீரியலான்னு தெரியலபா… எப்போ பார்த்தாலும் ஒரு பிரச்சனையை இழுத்துகிட்டு வரானுங்க” என்றான் செல்வம். அங்கிருந்த அனைவருமே அவன் சொன்னதை ஆமோதிப்பது போல மௌனமாய் இருந்தப்படி கவீனைப் பார்த்தனர்.

கவீனோ, “ துரோகி” என்று செல்வத்தை பார்த்து முறைத்தான். அருணும் கவீனைப்போலவே செல்வத்தை முறைக்க, “ அய்ய்யோ அவசரப்பட்டு கத்திட்டோமோ?இவனுங்க சோத்துல வெஷத்தை வெச்சா கூட பரவாயில்ல, சோறே போடாமல் விட்டா நான் என்ன பண்ணுவேன்” என்று தனக்குள் புலம்பினான்.

“ அவனை எதுக்கு கவீன் திட்டுற?உன் சோகக்கதையை நாங்க கேட்டே ஆகனும்னு எங்களை வர வெச்சுட்டு நீ பாட்டுக்கு இழுத்துகிட்டேபோனால் என்ன பண்ணுறது?” என்றாள் நந்து.

“அதானே நான் என்ன வெட்டின்னு நினைச்சியா? கதிர்கிட்டே இருந்து அஞ்சு மிஸ்ட் கால் வந்துருக்கு..ஒவ்வொரு காலுக்கும் நான் ஒவ்வோர் தண்டனை கொடுக்குறதுகுள்ள என்னன்னு விஷயத்துக்கு வா” என்றாள் அனு. அவள் மிரட்டிய விதத்தில் கவீன் அலற களுக்கென சிரித்தனர் தீப்தியும் ஜெனியும்.

“ ஏன்மா வள்ளி தேவானை , இவன் எதபத்தி பேசுறான்னு உங்க ரெண்டு பேருக்கும் கூடவா தெரியல?” என்று செல்வம் மீண்டும் வார்த்தையை கொட்ட இம்முறை நிஜமாகவே கடுப்பாகிய கவீன், தனது மௌனத்தை கலைத்தான்.

“அதாவது என்னாச்சுன்னா” என்றபடி அவன் மேலே பார்க்க  அவன் ப்லாஷ் பேக் சொல்கிறான் என்பதை உணர்ந்து அனைவரும் அமைதியாய் அவனைப் பார்த்தனர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஸ்ரீயின் "என்னுள் நிறைந்தவனே" - காதல் கலந்த குடும்ப தொடர்...

படிக்க தவறாதீர்கள்... 

இரண்டு நாட்களுக்கு முன்பு, தனது வகுப்பு நண்பன் கமலுடன் காலேஜ் வாசலில் நின்று பேசிக்கொண்டிருந்தான் கவீன்.

“ வேணாம் மச்சி.. இதெல்லாம் சரி வராது..தப்புடா” என்றான் கமல், பயமும் எச்சரிக்கையும் நிறைந்த குரலில்.

“ அட என்ன மச்சி நீ ,இதுக்கு எல்லாம் பயப்படுற? காலேஜ் லைஃப்ல இதெல்லாம் சகஜம் டா “ என்றான் கவீன்.

“ இருந்தாலும் உனக்குன்னு ஒரு இமேஜ் இருக்கு காலேஜ்ல .. அதை கெடுத்துக்காதே டா”

“ இதெல்லாம் என் மூளைக்கு கேட்குது,.. ஆனா, மனசுக்கு கேட்கலயே மச்சி.. “

“ டேய் நீ இப்படி நினைக்கிறது மத்த ப்ரண்ட்ஸ்கு தெரிஞ்சா கழுவி கழுவி ஊத்துவாங்க,.. ஜெனியே உன்னை கொன்னுடுவா .,. அவ நிச்சயாமா நோ சொல்ல மாட்டா”

“டேய், அவளுக்கும் இதுல கண்டிப்பா இஷ்டம் இருக்கும். ஆனா இல்லன்னு நடிப்பா..எந்த பொண்ணுதான் மனசுல இருக்குறதை வெளில சொல்றாங்க.. பட் அது ஒரு விஷயமே இல்ல..நான் பேசுறமாதிரி பேசினால் ஜெனி கேட்பாள்” என்றான் கவீன். அவன் கெட்ட நேரமோ என்னவோ, ஜெனியின் பெயரை கமல்சொன்னப்போதே அவர்களின் அருகில் ஜெனிக்காக காத்திருந்த அவள் அப்பா அவர்களின் பேச்சை கவனிக்க அரைகுறையாய் அவனது பேச்சை கேட்டு வைத்திருந்தார் அவர்.

“ என்ன தம்பி உடம்பு எப்படி இருக்கு?” என்று அவர் கேட்கவும் அதிர்ந்து அவர் பக்கம் திரும்பினான் கவீன்..

“அ … அ…அங்கிள்.. நீங்க எப்போ இங்க வந்தீங்க?”

“இப்போதான் .. நான் கேட்டதுக்கு பதில் வரவில்லையே” என்று உருமினார் அவர்.

“ அது..அது..என்ன கேட்டிங்க அங்கிள்”

“ம்ம், உடம்பு எப்படி இருக்கு?”என்றார் மிரட்டும் தொனியில்.

“ ஆ…ஆங் நல்லா இருக்கேன் அங்கிள்” என்றவன் செல்வமும் அருணும் அங்கு வரவும் இதுதான் சாக்கென்று தப்பித்து திரும்பி பார்க்காமல் ஓடினான்.. பார்த்திருந்தால்??

அந்த ப்லாஷ் பேக்கை கேட்டு “அடப்பாவி !!” என்று அலறினாள் ஜெனி.

“ஜெலோ”

“அறிவு கெட்டவனே..எங்கப்பா மனசை மாத்துறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா? ஏனடா இப்படி சொதப்புற?”

“ஹும்கும் என்னமோ உங்கப்பா என்னை மாப்பிள்ளை மாப்பிள்ளைன்னு தாங்குற மாதிரியும் நானோஉங்க பொண்ணே வேணாம்னு சொன்ன மாதிரி கொதிக்குற ? நெப்போலியன் என்னைக்கு என்கிட்ட சுமூகமா பேசி இருக்கார் சொல்லு ?”

“ அதுக்காக இருக்குற ப்ரச்சனையை ஊதி பெருசு பண்ணணுமா? என்றைக்கும் இல்லாத திருநாளாய் எங்கப்பா உன்னை பத்தி விசாரிக்கும்போதே நான் உஷார் ஆகிருக்கனும்”

“அய்யயோ என்னன்னுகேட்டாரு ?”

“ நான் உங்கிட்ட பேசுறது இல்லயான்னு கேட்டாரு”

“ நீ என்ன சொன்ன?”

“அவசியம் இல்லாதபோது பேச மாட்டேன்னு சொன்னென்”

“அப்பாடி நல்ல காரியம் பண்ணின..நீ பாட்டுக்கு பேசுறதே இல்லன்னு சொல்லி இருந்தால் நீ பொய் சொல்றன்னு நினைச்சிருப்பார்.. எல்லாமே சொதப்பல்  ஆகி இருக்கும்”

“ அதான் எனக்கு சேர்த்து நீ சொதப்பிட்டியே..”

“கூல் பேபி கூல். கவீன் எல்லாத்தையும் சமாளிப்பான்”

“கிழிப்பான்.. அப்படி என்னடா அவசரம் உனக்கு?” என்றாள் ஆரு.

“ ஹேய் என்ன அவசரம்?” என்று கேட்ட கவீன் ஒரு நொடி குழம்பிவிட்டு

“அட லூசுங்களா..! என்ன நினைச்சிங்க நீங்க எல்லாரும்? நான் எங்களை பத்தி கமல்கிட்ட பேசினேன்னு நினைச்சிங்களா?”என்று கேட்ட கவீன் எல்லோருடைய முகபாவனையை கண்டு கடுப்பாகினான்.

 •  Start 
 •  Prev 
 •  1  2 
 •  Next 
 •  End 

About the Author

Buvaneswari

Latest Books published in Chillzee KiMo

 • Ennodu nee unnodu naanEnnodu nee unnodu naan
 • Enna periya avamanamEnna periya avamanam
 • KaalinganKaalingan
 • Kanavu thaan ithuvum kalainthidumKanavu thaan ithuvum kalainthidum
 • Nee ennai kadhaliNee ennai kadhali
 • Parthen RasithenParthen Rasithen
 • Serialum CartoonumSerialum Cartoonum
 • Vallamai thanthu viduVallamai thanthu vidu

Completed Stories
On-going Stories
 • -NA-
Add comment

Comments  
# nrubisa 2016-07-21 16:26
nice episode mam unga story yellame enaku romba pidikum romba supera iruku next epi sikirama kudunga mam i m waiting
Reply | Reply with quote | Quote
# nragashiya 2016-07-21 13:11
nice episode mam
next episode sikirama kudunga
Reply | Reply with quote | Quote
# n iragashiya 2016-07-21 13:10
story super
nice episode
next episode sikirama kudunga mam i m waiting
na nenga write panna yella story padipa i like all story
super mam
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைத்தாலே இனிக்கும்... - 36 - புவனேஸ்வரிrspreethi 2016-07-19 16:42
Super update.... Kavin team asusual super.... :grin:
Kobama irukumbodhu nalla vishayangal maranjudum nu good example chandru.... Subhi seidha vishayangal romba arumai....
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைத்தாலே இனிக்கும்... - 36 - புவனேஸ்வரிrspreethi 2016-07-19 16:41
Super update.... Kavin team asusual super.... :grin:
Kobama irukumbodhu nalla vishayangal maranjudum nu good example chandru.... Subhi seidha vishayangal romba arumai....
Reply | Reply with quote | Quote
# Nice Update BhuviChillzee Team 2016-07-19 14:11
Friends Elarum onna Sernthachu (y)
Kavin :D :D
Subi ku enna agum :Q:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைத்தாலே இனிக்கும்... - 36 - புவனேஸ்வரிRagasiya janani 2016-07-19 13:49
கதை ரொம்ப அருமை
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைத்தாலே இனிக்கும்... - 36 - புவனேஸ்வரிChithra V 2016-07-19 13:45
Kavin Ku jeni Appa ala problem nu guess pannen :yes:
Ana raging vishayathula jeni Appa Kitta edakudama mattippan nu ninaikala :grin:
Old friends onna serndhachu :clap:
Prem subhi a love panrana :Q:
Nice update bhuvi (y) (y)
Reply | Reply with quote | Quote
# NiceKiruthika 2016-07-19 11:30
Nice Update Bhuvi ...

Kavin oru kulappavathi ..

Subi prema ah kalyanam pannipaala ??/
Reply | Reply with quote | Quote
# RE: தொடர்கதை - நினைத்தாலே இனிக்கும்... - 36 - புவனேஸ்வரிDevi 2016-07-19 11:09
Nice update Bhuvaneswari (y)
Kavin ah nalla nalla kazhvhi oithittaga :D
Subi .. yoda nilaiyil mattram yerpaduma :Q:
Waiting for Fantastic final update (y)
Reply | Reply with quote | Quote

🆕 Latest Updates 🆕

📈 Trending @ Chillzee 📈

📅 Chillzee Series update schedule 📅

M Tu W Th F Sa  Su
NKNI

MOVPIP

KEK

KAKK

VEE

UIP

NPM

SiRa

NMK

EMAI

UANI

UKIP

VKPT

EEIA

EEKEE

KMEE

MVK

UKAN

KKK

AV

AA

* - Change in schedule / New series

If you would like to start a series @ Chillzee, please read this article or e-mail us!

Go to top