(Reading time: 8 - 15 minutes)

 

டபாவிங்களா,ஏன் டா கண்ணுல படுறவங்ககிட்ட எல்லாம் என்னோட கதை சொல்லுறதுதான் என் வேலையா?”

“அப்போ நீ எதைப்பற்றி பேசுன?” என்றாள் ஜெனி.

“ஜெலோ நீயுமா? ஹையோ இந்த செமஸ்டர் ப்ரெக் முடிஞ்சு அடுத்த செமெஸ்டர்க்கு ப்ரெஷர்ஸ் வருவாங்க.. நாம தெர்ட் யெர் சீனியர்ஸ் ஆச்சே, அவங்களை ரேகிங் பண்ணனும்ன்னுபேசினேன்”

“ரேகிங் ஆ?”

“ஆமா நீங்க என்ன நினைச்சிங்க?” என்று அவன் வினவவும் எல்லோரும் அவனை முறைத்தனர்.

“ஏன் டா,எதையும்  உருப்படியா பேச மாட்டியா? அந்த பேச்சுல ஒரேஒரு தடவையாச்சும் ரேகிங்ன்னு சொல்லிருக்க வேணாமா?”என்று முறைத்தாள் அனு.

“ அதானே” என்று மற்றவர்களும் குரல் எழுப்ப

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

“சரி விடுங்க அதான் அவன் சொதப்பிட்டானே..!எங்கப்பாகிட்டகெட்ட பேரு வாங்குறதே இவனுக்கு வேலையாய் போச்சு.. நான் நினைக்கிறது எதுவுமே இனி நடக்காது” என்று கூறிவிட்டு போனாள் ஜெனி. அவள் எழுந்து போனதை பார்த்து மற்ற பெண்களும் அதெ போல எழுந்து போக,

“ விடு தல, நாங்க இருக்கோம் “என்றான் செல்வம்.

கவினோ கவலையான குரலில்,

“அதுதாண்டா என் கவலையே.. யாரு போனாலும் நீங்க ரெண்டு பேரும் போயி தொலைய மாட்டுறிங்களே” என்றான். அவன் சொன்னது எதுவுமே தங்களை பாதிக்காதது போலதோளை உலுக்கி கொண்டனர் இருவரும்.

“அம்மா ரெடியா ?” சுபத்ராவின் குரல் கேட்டு சமையல் அறையில் இருந்து வந்தார் நளினி. ஆம்,சுபத்ரா சந்துருவின் வீட்டில் தான் இருந்தாள். “நான் ரெடி .. நீ?” என்று கேட்டபடி அங்கு வந்தவர் சுபியின் அழகை ரசித்து வாய்திறந்து பாராட்டினார்.

“ வாவ்.. சும்மாவா சொன்னாங்க புடவை கட்டுற பொண்ணுங்க ரொம்ப அழகுன்னு ? தேவதை மாதிரி இருக்க சுபி “என்றார் நளினி.

“ பெரிய மனசும்மா உங்களுக்கு.. தேவாங்கை எல்லாம் தேவதைன்னு சொல்லுறிங்களே”என்றப்படி அங்கு வந்தான் சந்துரு.அவனும் வேஷ்டி சட்டையில்அழகாய் இருந்தான் .

“டேய் என்னடா கல்யாணத்துகாஅ போறோம்? பசங்க எல்லாம் பசியில இருப்பாங்க  சீக்கிரம்”என்று சுபத்ராதுரிதப்படுத்த கதிரும் ப்ரேமும் அதே போல வேஷ்ட்டி சட்டையில் வந்தனர்.அடுத்த அறை மணி நேரத்தில் “அன்பின் சுடர்” இல்லத்தில் இருந்தனர் அனைவரும்.

அங்கு குணாவின் பெற்றோர் நின்றிருக்க, முதலில் அவர்கள் அருகில் சென்றிருந்தாள் சுபத்ரா.

“ வாம்மா”

“எப்படி இருக்கீங்க அப்பா அம்மா?”

“ நாங்க இருக்கோம்மா.. நீதான் இளைச்சுட்ட” என்றார் குணாவின் அப்பா.. அவர்கள் இருவரும் மிகவும் பரிட்சயமானவர்களை போல பேசிக்கொள்ள அந்த இல்லத்தின் உரிமையாளர் திவ்யா அங்கு வந்தார்.

“ வாங்க தம்பி நீங்க தானே சந்துரு”

“ ஆ ..ஆங் ஆமா “

“ குணாவின்  பிறந்தநாள் கொண்டாடுறதுக்காக பசங்க எல்லாரும் காத்திருக்காங்க… இவர்தான் கதிரா” என்றார் திவ்யா.. அவரை ஆச்சர்ய்மாய் பார்த்தனர் இருவரும்.

“எங்களை உங்களுக்கு தெரியுமா? “

“ ம்ம்ம் ப்ரேமும் சுபாவும் இங்க அடிக்கடி வருவாங்க.. அவங்க எதபத்தி பேசினாலும் அந்த பேச்சு உங்களை பத்தி தான் முடியும் “ என்றார் அவர்.. தூரத்தில் குணாவின் பெற்றோரிடம் பேசி கொண்டிருந்த சுபியை பார்த்தான் சந்துரு.

“எவ்வளவு பெரிய சுயநலவாதி டா நான்.. எனக்கு குணா போய்டான்னு கவலைன்னு சொல்லிட்டு திரிஞ்சேன்.ஆனா அவனோட அப்பா அம்மாவை போயி பார்க்கனும்னு தோன்றவே இல்ல..ஆனா சுபத்ரா?ச்ச இவளுக்கா மச்சான் நான் கஷ்டத்தைஅள்ளி கொடுத்தேன்” என்றான் சந்துரு.. அவன் தழுதழுத்த குரலை கண்டுகொண்ட கதிர் நண்பனின் தோளில் கை வைத்து அவனை சமாதனபடுத்தினான்.

“ இந்த உண்மை தெரிஞ்சிருந்தால் நீ நிச்சயம் அவளை இப்படி விட்டுருக்க மாட்ட தானே டா?அப்பறம் என்ன மச்சி ? ஃபீல் பண்ணாத”

“ முடியல டா.. சரி பண்ணனும்..எல்லாத்தையும் சரி பண்ணனும்..இனிமே சுபியை சந்தோஷமாய் பார்த்த்க்கனும்..அதுதான் நம்ம கடமை.”

“என்னடா கடமை?” என்றபடி அங்கு வந்தாள் சுபி.

“ ம்ம்ம் ஒரு நல்ல இளிச்ச வாயனாய் பார்த்து உனக்கு கட்டி வைக்கிறதுதான் எங்க கடமைன்னுமச்சான் சொல்லுறான்”என்று கதிர் கூறிட

“ம்ம்ஹ்ம்ம்ம் நோ என் வாழ்க்கைல அந்த பேச்சுக்கு மட்டும் இடமில்லை” என்றாள் சுபி தீர்க்கமாய்.. அவள் பதிலில் ப்ரேம் எந்த முகபாவமும் காட்டாமலிருக்க மற்ற இருவரும் குழம்பி போயினர்.

அடுத்த அத்யாயத்தோடு நினைவுகள் நிறைவு பெரும்

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 35

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 37

Buvaneswari is continuing the story from where it was let off... Appreciate your comments but no comparisons between the three writers please...

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.