(Reading time: 24 - 47 minutes)

37. நினைத்தாலே  இனிக்கும்... - புவனேஸ்வரி 

ninaithale Inikkum

ல்யாணமா? சரியா போச்சுப்போ ! என்னை கரை சேர்க்கனும்ன்னு நீங்க ரெண்டு பேரும் சபதம் கிபதம் எடுத்துடாதிங்கடா! அப்பறம் சாகுற வரை சிங்களாத்தான் இருக்கனும்” என்று குறும்பாய் கண்ணடித்தாள் சுபத்ரா. அவள் பேச்சில் கிண்டல் இருந்தாலும், தொனியில் தீவிரம் இருந்தது. கதிர், சந்துரு இருவருமே அவள் வார்த்தையின் அர்த்தம் புரியாத அளவிற்கு வெகுளிகள் இல்லை. மேலும் அவள் இப்படி சொல்வதின் காரணம் அவர்கள் அறிந்த ஒன்றல்லவா? தங்களால் முடிந்த அளவு அவளை முறைத்தனர் இருவரும்.

“ ஹேய், எதுக்கு இந்த லுக்கு ?”

“ இது பாரு சுபி” என்று சந்துரு எதையோ ஆரம்பிக்க,

“இது பாரு சுபி, நடந்த விஷயத்துல உன்மேல தப்பில்ல.. உனக்குன்னு ஒரு லைஃப் இருக்கு. நீ வாழ வேண்டிய பொண்ணு, கல்யாணம்  பண்ணிக்கனும். இப்படி முட்டாள்தனமாய் இனிமே பேசாதே.. இதைத்தானே சொல்ல போற நீ? கம் ஆன் சந்துரு இதெல்லாம் எனக்கும் தெரியும். ஆனா, எனக்கு கல்யாணத்துல எந்த விருப்பமும் இல்லை. லைஃப் ஒன்னும் சினிமா இல்லை சந்துரு.. கல்யாணம் பண்ணி டைம் எடுத்துகிட்டு லைஃப் ஸ்டார்ட் பண்ணுறது எல்லாம் மணிரத்னம் படத்துல தான் நடக்கும்.. என் மனசுல எதுவுமே இல்லாத பட்சத்துல கல்யாணம் என்ற பேருல இன்னொருத்தர் லைஃப் ஐ என்னால கெடுக்க முடியாது” என்று உறுதியாய் கூறினாள் அவள்.

“ வேற ஒருத்தனா? அதான் ப்ரேம் இருக்கானே” என்று சொல்ல வந்த கதிர் ப்ரேமின் முகத்தை பார்க்க, எந்த ஒரு சலனமும் இல்லாமல் நின்றிருந்தான் ப்ரேம்குமார். ஆண்கள் மூவரையுமே அழுத்தமான மௌனம் ஆட்கொள்ள சுபத்ரா மட்டுமே இயல்பாய் இருந்தாள்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

வத்சலாவின் "வார்த்தை தவறிவிட்டேன் கண்ணம்மா..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்...

“ ரிலாக்ஸ் கய்ஸ்..எனக்கே மனசு மாறி கல்யாணம் பண்ணிக்கனும்ன்னு தோனினா, கண்டிப்பா பண்ணிப்பேன் போதுமா?” என்றாள் அவள். ஒருபெருமூச்சுடன் சந்துரு “ ஆனா ஒன்னு சுபி, உன் முடிவு குணாவுக்காகன்னு மட்டும் சொல்லிடாதே.. சரியோ தப்போ அவன் உன்னை நேசிச்சது உண்மை. உலகத்துல உண்மையா காதலிச்ச யாருமே அவங்களோட காதலனோ அல்லது காதலியோ கஷ்டப்படனும்ன்னு நினைக்க மாட்டாங்க..! நீ தனியாய் இருப்பது உனக்குன் சந்தோஷமாய் இருக்கும்.. ஆனா குணாவுக்கு இல்லை. இதோ இப்போ நீ பண்ணுற இந்த நல்ல விஷயம் எல்லாமே இரண்டாம் பட்சம் தான். அவனுடைய முதல் சந்தோஷம் உன் வாழ்க்கையில இருக்கு..அதை ஞாபகம் வெச்சுக்க” என்றுவிட்டு முகத்தை இயல்பாய் மாற்றிகொண்டு உள்ளே நடந்தான் சந்துரு.. அவனை பின் தொடர்ந்து கதிரும் சென்றுவிட சுபியின் கண்களில் கண்ணீர். மெல்ல அவளை தோளோடு அணைத்து கொண்டான் ப்ரேம்.

“சுபி” என்று அவன் சொன்னதுமே, கண்ணீருடன் உடைந்தாள் அவள்.

“ என்னால முடியல ப்ரேம்.. என்னால எப்பவும் முடியாது. ஒருத்தன் என்னால செத்தே போயிட்டான்னு தெரிஞ்சும் நான் எப்படி வாழ்வேன் ..நீ சொல்லு ?”

“அப்படின்னா அதுக்கு நானும் தானே காரணம் அப்போ நானும் “ என்று அவன் சொல்லும்போதே

“ லூசு மாதிரி உளராதே ப்ரேம்.. நீ கல்யாணம் பண்ணி சந்தோஷமாய் வாழனும்”

“ஓஹோ நான் இன்னொருத்தியை கல்யாணம் பண்ணிக்கனுமா?”

“ஆ…ஆ…ஆமா..பின்ன என்ன?” என்று தடுமாறினாள் சுபி. அவள் ஏன் தடுமாடுகிறாள் என்று அவளுக்கே விளங்கவில்லை. ப்ரேமும் அவளின் தடுமாற்றத்தை உணரும் நிலையில் இல்லாமல் இருந்தான்.

“சரி டீ கண்டிப்பா பண்ணிக்கிறேன். இப்போ வந்த வேலையை பார்ப்போமா?”  என்று கோபமாய் கேட்டப்படி அவன் முன்னே நடந்தான். அதன்பின் குணாவின் பிறந்த நாளையொட்டி கேக் வெட்டி அங்கிருந்த சிறுவர்களுடன் அந்த தினத்தை கழித்தனர் நால்வரும். சுபியை அவள்வீட்டில் விட்டுவிட்டு மூவரும் சந்துருவின் வீட்டிற்கு சென்று கொண்டிருந்த பயணத்தில் தனது மனதில் இருப்பதை கேட்டே விட்டான் கதிர்.

“டேய் ப்ரேம்”

“ சொல்லு மச்சான்”

“ அப்போ நீ சுபத்ராவை லவ் பண்ணலயா?”

“ எப்போ?” என்று இயல்பாய் கேட்டான் ப்ரேம்.

“சந்துரு பாருடா,இவன் நம்மள கலாய்க்கிறானாமாம்” என்று கடுப்பாய் கூறினான் கதிர், காரோட்டி கொண்டிருந்தவனை பார்த்து.

“ ப்ச்ச் ப்ரேம் விளையாடாமல் கொஞ்சம் சீரியசா பேசலாம்..”

“ சொல்லுங்கடா”

“ நீ சுபியை லவ் பண்ணின தானே?”

“..”

“அவதான் கல்யாணம் வேணாம்ன்னு உளருறா..நீயாச்சும் அவளுக்கு புரிய வைக்க வேணாமா?எல்லாம் அவ்வளோதானா?”

“நான் எப்போடா அவளை லவ் பண்ணுறேன்னு சொன்னேன்?”

“டேய்” என்று இருவருமே மிரட்ட

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.