(Reading time: 24 - 47 minutes)

மா என்ன ஆமா? ஆமாசீனியர்ன்னு சொல்லு”

“ மன்னிச்சிருங்க..ஆமா சீனியர்”

“சரி உன் பேரு என்ன?”

“ ஹாசினி”

“ஓஹோ,நீதான் ஹா ஹாஹாசினியா?”

“அய்யோ இல்லைங்க..நான் மிதர்ஹாசினி”

“இனிமேயாரு உன் பேரை கேட்டாலும் இப்படி ஃபுல்லாசொல்லி பழகு..புரிஞ்சதா?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜெய்யின் "ஸ்ருங்கார சீண்டல்கள்... சில்லென்ற ஊடல்கள்..." - காதல் கலந்த குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“ சரிங்க சீனியர்”

“குட்..இந்தாரோஸ்”

“எனக்கா?”

“ ஏன் உன் காதுல வெச்சிக்க போறியா?” என்றாள் அனு.

“அய்யோஇல்லைசீனியர்”

“சரி சொல்றத செய்..அங்கே உட்கார்ந்து இருக்கான்ல,அவன் கிட்ட இந்த ரோஸ் கொடுத்து ஹாய்ன்னு சொல்லு”

“ அய்ய்யோ”

“ சும்மாஎல்லாத்துக்கும் அய்யோ சாமின்னு சொல்லாமல், சொன்னதை செய்”என்று அதட்டினாள் அனு. ஹாசினி சரியென தலையாட்டவும், சிரித்துகொண்டெ மீண்டும் பழைய இடத்திற்கு போனாள்.

வின்ஸையே பார்த்துகொண்டிருந்த ஆரு,  தயங்கி தயங்கி நடந்து வந்தவளை முதலில்கவனிக்கவில்லை .. கவனித்தபோது ஹாசினி வின்ஸிடம் பேசி இருந்தாள்.

“சார்”

“யெஸ்”

“இந்தாங்க”                    

“என்ன இது?”

“ரோஸ்சார்”

“அது தெரியுது.. எனக்கு எதுக்கு ?”

“சார் சீனியர் பார்க்குறாங்க..ப்லீஸ் வாங்கிக்கோங்க”

“யாரு?யாரு பார்க்குறாங்க? “என்று அவன் பார்வையை சுழற்ற காளிபோல அங்கு நின்றாள் ஆரு. ஹாசினியை பார்த்து

“ஹேய் யாரு நீ?” என்றாள். சற்றுமுன் அனுவை பார்த்தவள் இப்போது அவளைப்போலவே இருக்கும் ஆருவை பார்த்து மலங்க மலங்க விழித்தாள்..

“என்ன லுக்கு விடுற?”என்றவள் ஹாசினியின் மௌனத்தை கண்டு

“ போ ..போயி உன் வேலைய பாரு.. இனிமே இவன் பக்கம் வந்த கொன்னுடுவேன்”என்றாள். விட்டால்போதுமென ஓடியே விட்டிருந்தாள் ஹாசினி.

இப்போது அவனை முறைத்தாள் ஆரு.

“இங்க என்ன நடக்குது ?”

“ அதை நான் கேட்கனும்.. யாருடாஅவ ?”

“டா வா?”

“ஆமா இப்போ இந்தா ஷாக் ரொம்ப முக்கியம்..சொல்லு யாரு அவ?”

“ஹேய் எனக்கே தெரியாதும்மா!”

“ தெரியாமதான் அவ ரோஸ் கொடுத்தாளா?”

“ நான்  அதை கை நீட்டி வாங்கினேனா?”

“ ஓ அந்த எண்ணம் வேற இருக்கா?வாங்கித்தான் பாரேன் நீ! வாங்கி பாரு”

“ ஆரு ரிலாக்ஸ் ..என்ன ஆச்சு உனக்கு ?”

“என்னன்னவோ ஆச்சு! இனிமேநீ எந்த பொண்ணு கூடயும் பேசகூடாது”

“ இது என்ன வம்பா போச்சு?”

“ வம்புத்தான்.. ஏன் முடியாதா?”

“அப்படி சொன்னேனா? பட் உனக்கென்ன ஆச்சு ஆரு ? எனக்கு எப்பவும் நீதான் முக்கியம்..நான் சொல்லித்தான் உனக்கு அது புரியனுமா? யாரோ வந்து எங்கிட்ட பேசினால் நான் என்னம்மா பண்ணுவேன்?”

“உன்மேலதப்பு இல்ல வின்ஸ்.. என் மேலயும்தப்பு இல்ல. காதலில் இது எல்லாம் சகஜம்.  நீ பேஸ் பண்ணிதான் ஆகனும்..சரி படி நான் அப்பறமாபேசுறேன்”என்று கூறியவள் திரும்பி நின்று இரண்டடி வைத்தபிறகுதான் அவள் சொன்னதை உணர்ந்தாள். அவனுமே அதை அப்போதுதான் உணர்ந்து “ஹேய் ஆரு ?நிஜமாவா?” என்று கேட்க அவன் முகத்தை பார்த்தவள்,வெட்கப்புன்னகை சிந்தி அங்கிருந்து ஓடினாள்.

(ஹப்பாடா நந்திதா- சந்துரு, அனு-கதிர், ஆரு-வின்ஸ்,ப்ரேம்-சுபி, கவீன்-ஜெனி,தீப்தி-தீரஜ், செல்வம் அருண் இப்படி எல்லாரையும்சொல்லியாச்சு அவ்வளவுதானேபா?கதை முடிஞ்சதுல ? சுபம் போடலாமா ?வைட் வைட் இது நம்ம ஸ்டைல் இல்லையே..இன்னும் ஒரேஒரு சீன் இருக்கு வாங்க.)

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.