(Reading time: 24 - 47 minutes)

ருமையான உரை.இந்த நேரத்துல நான் கவீனுக்கு என்னுடைய வாழ்த்துக்களையும் நன்றியையும் சொல்லிக்கறேன். வயசான ஒருத்தரை எங்க முன்னாடி நிறுத்தி பேச வைச்சா, அதைகேட்டு எங்களுக்குள்ள எப்படி சார் மாற்றம் வரும் ?கிட்டத்தட்ட எங்க வயசுல அல்லது கொஞ்சம் வயதில் பெரியவர் பேசினாலாவது  கொஞ்சம் இன்ஸ்பாய்ரிங்கா இருக்கும்ன்னு கவீன் சொன்னதும் இல்லாமல் மிஸ்டர் தீரஜை இங்கு கூட்டிட்டும் வந்தார்”என்றார் அவர்.அனைவரும் அவனை பெருமையாய் பார்க்க, தீப்தி மட்டும் அவனை முறைத்தாள்.

அன்று மதியம் தீரஜ் அவளிடம் எதுவும் பேசாமலேசென்றுவிட்டான்.தீப்தியோ கவீனை பிலுபிலுவென பிடித்துக் கொண்டாள்.

“அறிவிருக்கா என்ன காரியம் பண்ணி வெச்சு இருக்க நீ?”

“ ஏன் என்ன பண்ணினேன்?”

“ கவீன், தீரஜ் பத்தி எனக்கு சொன்னதே நீதானே?”

“இல்லைன்னு சொல்லல தீப்தி. அந்த சூழ்நிலையில் அவர் பக்கம் தப்பு மட்டும்தான் இருக்குன்னு நினைச்சேன்..”

“ஓஹோ அப்போ இப்ப?இப்ப உன் தியரி அவரை நல்லவன்னு சொல்லுதோ?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

ஜான்சியின் "அமிழ்தினும் இனியவள் அவள்..." - அவனுக்கு அவள் கிடைப்பதற்கரிய அன்புச்சுரங்கம். அவளுக்கோ அவன்...?

படிக்க தவறாதீர்கள்...

“ கோபப்படாமல் பொறுமையா யோசி தீப்தி.. அவர் இல்லாததை இருக்குன்னு சொல்லி உன்னை ஏமாற்றல..இருக்குறதை தான் உனக்காக, இல்லைன்னு சொன்னார்.. அதுக்கு ஒரே காரணம் நீ !”

“..”

“ உன்னுடைய அன்பு வேணும்ன்னு செஞ்சாரு..உனக்கு பிடிக்காத விஷயத்தைப்பற்றி பேச வேணாம்ன்னு நினைச்சார்”

“..”

“ உன் மனசுல எப்பவும்தீரஜ் தான் இருக்கார். உன்னை நீயே ஏமாற்றிக்காதே..அன்னைக்கு சொன்னதைத்தான் இப்பவும் சொல்லுறேன். நான் உனக்கு நண்பன், நீ சரியான விஷயம் செய்யும்போது சப்போர்ட் பண்ணுறதும், தப்பு பண்ணும்போதும் எடுத்து சொல்றதும்என் கடமை”

“..”

“அவங்ககிட்டபேசிபாரேன்..! அவரை புரிஞ்சுக்குறதுக்காக இல்லை..உன் மனசை நீயே புரிஞ்சுக்கனும்..அதுக்காகத்தான் சொல்லுறேன்”என்றான் அவன். வெளியில் மௌனமாகவும் மனதிற்குள்கூச்சலிட்டு கொண்டும் இருந்தாள் தீப்தி! அவளுக்கு நிம்மதி கிட்டுமா?காலம்தான் பதில் சொல்ல வேண்டும்!

காலம்..!

யாருக்காகவும் தனது கடமையை நிறுத்தாமல் ஓடிக்கொண்டே இருந்தது.செமஸ்டர் ஹாலிடேமுடிந்து நம் நண்பர்கள் அனைவரும் மூன்றாம் ஆண்டில் வெற்றிகரமாய் காலடி எடுத்து வைத்தனர்.

சந்துரு,கதிரி,சுபத்ரா, ப்ரேம் ஒரே மருத்துவமனையில் பணிப்புரிய ஆரம்பித்தனர். வின்சண்ட் கல்லூரியின் இறுதி ஆண்டு மாணவன் என்ற பொறுப்பில்பாடங்களில் கவனம்செலுத்தினான்.இப்போதெல்லாம் அவன் ஆருவை தேடிச் செல்வதேஇல்லை.. அவளிடம் பேச முயற்சிப்பதும் இல்லை.

அதற்காக அவர்களைபேசிக்கொள்ளவே இல்லைஎன்று அர்த்தமில்லை! பேசினார்கள்,அளவாய்,தெளிவாய் பேசினார்கள்.அவர்களுக்குள் நிலவி இருந்த மௌனம் பல காயங்களுக்கு மருந்தாய் மாறி ஆருவின் மனதையும் மாற்றி இருந்தது. இப்போதும் அவள் அவனிடம் தனது காதலைச் சொல்லவில்லைத்தான்..ஆனால அதே நேரம் தனது உள்ளத்தில் அவ்வப்போது உருவாகும் மாற்றங்களை அவள் கண்மூடித்தனமாய் மறுக்கவுமில்லை!

தீரஜை சந்தித்து மனம்விட்டு பேசி இருந்தாள் தீப்தி..ஒரு வழியாய் அவர்களுக்குள் இருந்த மனக்கசப்பு மறைந்தது.முதல் இரு வாரங்கள் ஜெனி சொன்னது போலவே அவள் வீட்டிலேயேதங்கி இருந்த தீப்தி,அதன் பின் தீரஜின் வீட்டிலேயேதங்கி அவன் தாயின் அன்பு மழையில் நனைந்தாள்.

அருண்,செல்வம் இருவரும் இந்த வருடமாவது தங்களது “சிங்கல்” ஸ்டேட்டஸை மிங்கலாக மாற்ற வேண்டும் என்று உறுதி பூண்டனர். நந்து அனு இருவருமே அவரவர் காதலில் திளைத்து கொண்டிருந்தனர்.

அன்று, கல்லூரிக்கு புதிதாய் வந்துள்ளஜூனியர்ஸ் அனைவரையும் செல்லமாய் ராகிங்செய்து கொண்டிருந்தனர் நம் வானரங்கள். அன்றைய தினம் அவர்களுக்கு எந்த வகுப்பும் இல்லை என்பது கூடுதல் மகிழ்ச்சியை தந்தது. ஏற்கனவே பேசி இருந்ததுபோல பெண்கள் அனைவரும் புடவையிலும், ஆண்கள் வேஷ்ட்டி சட்டையிலும் வந்திருந்தனர். ஜெனி இன்னும் காலெஜிற்கு வரமாலிருந்ததால்,வழக்கம் போல அன,ஆரு,நந்து மூவரையும் வம்பிழுத்து கொண்டிருந்தான் கவீன்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.