(Reading time: 24 - 47 minutes)

ஜெனி தனது தந்தையுடன் காரில் வந்து கொண்டிருந்தாள். எந்த ஒரு சலனமும்இல்லாமல் அமைதியாய் அமர்ந்திருந்த மகளை பார்த்த அவளின் தந்தைக்கு சந்தோஷமாய் இருந்தது. தீப்தி அவர்களின் வீட்டில் தங்கியபோது நடந்த அந்த நிகழ்வை அசைப்போட்டார் அவர்.

(அன்று)

“என்னம்மா தீப்தி, வாசலிலேயே உட்கார்ந்துஇருக்க?”

“அ..அங்கிள் நான் உங்களுக்காகத்தான் வைட்பண்ணுறேன்”

“ நானும் உங்கிட்ட ஒரு விஷயம்கேட்கனுமே”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சகியின் "பைராகி" - முன்ஜென்மம் சொல்லும் கற்பனை வரலாற்று நாவல்...

படிக்க தவறாதீர்கள்...

“ கேளுங்க அங்கிள்”

“ உனக்கு இங்க இருக்கிறதுக்கு சிரமமாய் இருக்கா தீப்தி ? எனக்கு ஏன் நீ சங்கோஜமாய் இருக்குறமாதிரி தோன்றுதுன்னு தெரியல.. அப்படி ஏதும் இருந்தால்சொல்லிடு,நான் வேணும்ன்னா ஜெனியை உன்னோடு ஹாஸ்டலுக்கு அனுப்பி வைக்கவா?”

“அங்கிள், உங்க அநுமானம் சரிதான்.. நான் உங்கட்ட கொஞ்சம் பேசனும்.. என்னை மன்னிச்சிருங்க அங்கிள்” என்றவள்  அவருக்கு ஃபோன் செய்து ஜெனி-கவீனை பற்றி பேசியது தாந்தான் என்று ஒப்புகொண்டாள். அவர்கள் மீது எந்த தப்பும் இல்லை என்றவள் தன்னிலை விளக்கம் தந்தார். அவள் நடந்ததைஎல்லாம் சொல்லச் சொல்ல அவர் அமைதியாகவே இருந்தார். அதன் பின் அவளை மன்னித்து விட்டதாக கூறி அவளை இயல்பாக்கினார்.

அந்த நிகழ்வை நினைத்தவர் மீண்டும் ஜெனியை பார்த்தார்..

“நான் கண்டிப்பானவன் தான் .. ஆனால்வில்லன் இல்லை ! என் மகளின் நிம்மதியை எரித்து அதில் குளிர்காயும் கொடூரதந்தை நான் இல்லை. மதம் என்ற ஒன்றை காரணம் காட்டி அவர்களை பிரிக்கும் மதம்பிடித்த பித்தனும் இல்லை நான்” என்று  தனக்குள்ளெயே பேசியவர் ஒரு முடிவுடன் காலேஜை அடைந்தார்.

அடர்நீலநிற புடவைஜெனியின் பொன்னிற மேனியை மிக அழகாய் எடுத்து காட்டியது. அவளை தூரத்தில் இருந்து பார்த்ததுமே வாயை பிளந்து கொண்டு நின்றான் கவீன். “ பெண்களின் கூந்தலில் இயற்கையிலேயே மனம் இருக்கிறதா?” என்பதுபோல “ பெண்களில் புடவைக்கு மாயஷக்தி இருக்கிறதா? “என்று ஆராய்ச்சி செய்தவனின் மிக அருகில் வந்து நின்றார் ஜெனியின் தந்தை.அவரைப் பார்த்ததுமே கொஞ்சம் மிரண்டு போய் நின்றான் அவன்.

“ வா.. வாங்க அங்கிள் எப்போது வந்திங்க?”

“ நான் எப்போ வந்தேன்னு கூட தெரியாமல் என்ன யோசனை?”

“அ.. அது..அது ஒன்னும் இல்ல”

“ஆமாவா? ஒன்னுமில்லையா?”

“ம்ம்ம் “

“நீ ஜெனியை பற்றி யோசிக்கிறன்னு நினைச்சேனே”என்றபடி அவர்ஜெனியை பார்க்க அவளோ அமைதியாய் இருந்தாள்.

“ கவீன்”

“சொல்லுங்க அங்கிள்”

“ என் பெண்ணைநல்லாபார்த்துப்பீயா?”

“ஆ…ஆங் ?என்ன?” என்று இருவருமே முழிக்க, புன்னகையுடன் மீண்டும்

“ என் பெண்ணை நல்லா பார்த்துப்பியா?”என்றார். அவர் புன்னகை அவனுக்கு தைரியத்தை கொடுக்க

“கண்டிப்பா அங்கிள்”என்றான்.

“ஹ்ம்ம்ம்ம் “

“..”

“ உங்க ரெண்டு பேருடைய காதலுக்கு இப்பவும் நான் சரி சொல்லல.!அது என்னவோ படிக்கிறபசங்களுக்கு வரும் காதல் வலுவானதுன்னு எனக்கு நம்பிக்கை இல்லை..ஆனா”

“??”

“என்னுடைய அவநம்பிக்கையை உடைக்கிறது உன் பொறுப்பு கவீன்.. நல்லா படிங்க வேலைக்கு போங்க.. கல்யாண வயசு வரும்போது உனக்கு அப்பவும் ஜெனிதான் வேணும்ன்னு தோனிச்சுன்னா, அப்பாஅம்மாவோட பொண்ணு கேளு.. முடியாதுன்னு சொல்ல மாட்டேன்”என்றார். அவர் பேச்சில் கவீனே அசந்து போய் நிற்க,ஜெனியை பற்றி சொல்லவா வேண்டும்? தனது தந்தையை இறுக கட்டிகொண்டு அழுதாள் அவள்.

“ஷ்ஷ்ஷ்ஷ்…ஜெனி அழாத..எனக்கு எப்பவுமேஉன் சந்தோஷத்துல அக்கறை இருக்கு. இப்போ கண்ணை துடைச்சிக்க..எல்லாரும் உன்னை பார்க்குறாங்க” என்று அதட்டியவர் அவள் தலையை வருடி நெற்றியில் முத்தமிட்டுவிட்டு திரும்பி நடந்தார். பிறர் கண்ணுக்கு “இரும்புத் தந்தையாய் “தெரிபவர் மனதளவில் குழந்தையாய் மாறி நடைப்போட்டார்.

அதே தினம், வின்சனுக்கும் வகுப்பு ஏதும் இல்லாததால் ஒரு பெஞ்சில் அமர்ந்து படித்துக்கொண்டிருந்தான் அவன். ஆரு அவனை தூரத்தில் இருந்து பார்ப்பதும் தோழிகளின் பேச்சில் இணைந்து கொள்வதுமாக இருந்தாள். இவர்களின் கண்ணாமூச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க எண்ணிய அனு யாரும் கவனிக்காதப்போது அங்கு நின்று கொண்டிருந்தஜூனியர் கூட்டத்தை நோக்கி நடந்தாள். அவர்களில் மிக அழகாய் இருந்த அந்த பெண்ணின் முன் நின்றாள் அவள்.

“ ஹேய் நீ ஜூனியர் தானே?”

“ஆ..ஆ…ஆமா”

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.