(Reading time: 24 - 47 minutes)

ன்று அனைவருக்குமே பரபரப்பான நாளாக இருந்தது.காலையிலேயே அனைவரும் எழுந்தவிட முதலில் எழுந்தவன் கவீன் தான்..பாவம்!காலை ஆறு மணியில் இருந்து சந்துருவை தொடங்கி தீரஜ் வரை அவனுக்கு ஃபோன் பண்ணி தொல்லை செய்தனர்.

“ டேய் ரெடியா?”

“டேய்கிளம்பிட்டியா?”

“சொதப்பிடமாட்டியே”

“நல்லாசெக் பண்ணியா?

“இன்னும்மாகிளம்பல?”

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

கிருத்திகாவின் "வசந்த காலம்" - குடும்ப தொடர்....

படிக்க தவறாதீர்கள்... 

“எத்தனை மணிக்கு நாம அங்க இருக்கனும்?”

என்று பலகேள்விகள். இதில்,

“ மவனே ஏதும் ஊத்திக்கிச்சு நீ காலி”

“இப்போவே கிளம்பு நீ”

“ஜாக்கரதை மகனே” என்று மிரட்டல்வேறு.. இவர்கள் அனைவரையும் சமாளித்து ஒருவழியாய் 8 மணிக்கே அங்கு வந்துவிட்டான் அவன்.. அந்த இடத்தில் இருந்த கூட்டத்தில் தனது நண்பர்களை தேடி கண்டு பிடிப்பதற்குள் உயிரே போய்விட்டது அவனுக்கு..சொல்லி வைத்தது போலவே அனைவரும் ஒரேநிறத்தில் உடை அணிந்து இருந்தனர். வாழ்விலேயே முதல்முறையாய் நண்பர்களிடம் இருந்து ராஜ வரவேற்பு கிடைத்தது அவனுக்கு. சந்துருவும் கதிரும் சேர்ந்து அவனை தூக்கி சுற்றி “ ஹேய்” என்று கத்தினர். “சரி டைமாச்சு “ என்று அனு சொல்லவும் அனைவருமாய் உள்ளே நுழைந்தனர்.

சந்துரு-நந்திதாவில்தொடங்கி தீரஜ்- தீப்தி வரை அனைவருமேஅவரவர் ஜோடியுடன் அமர ஜெனிமட்டும் கவீனிடம் இருந்து ஒரு இறுக்கை தள்ளி அமர்ந்தாள்.

“ஹேய் ஜெலோ”

“என்ன ஜொள்ளு?”

“ஏன் டி தள்ளி உட்காருற?”

“ இந்த சீட்டுக்கு ஆளு இருக்கும்மா”

“எவன் அவன் ?”என்று அவன் ஏகவசனமாய் பேசும்போதேஜெனியின் தந்தை அங்கு வந்தார்.

“அ…அங்கிள் வாங்க வாங்க..நீங்க எங்க இங்க ?”

“ ம்ம்ம் சாமி கும்பிடவந்தேன்”

“ஹீ “என்று அசடு வழிந்த கவீன் மறந்தும் அதன்பின் கழுத்தை திருப்பவில்லை.. திரையில் “சூப்பர்ஸ்டார்” என்ற பெயரை கேட்டதுமே அனைவரும் விசிலடித்து ஆரவாரம் செய்தனர். அட ஆமாங்க, இந்த ராஜ மரியாதையும் அவசரமும் கவீனுக்காக இல்லை கபாலி படத்துக்காகத்தான் .இது முன்னாடியே தெரிஞ்சிருந்தாகவீனுக்கு கபாலின்னு பெயர் சூட்டி இருப்பாங்களோ? ஆரவாரத்தோடு கவீன் திரும்பி பார்க்க,ஜெனியின் தந்தை எப்போதோ கிளம்பி இருக்க, அவள் அவன் அருகில் அமர்ந்திருந்தாள்.

“ எங்கடி மாமா?”

“மாமாவா?”

“ஆமா,உங்கப்பா எனக்கு மாமாதானே..”

“ ஹும்கும் நான் என் செல்ஃபோனை மறந்துட்டேன்..அதை கொடுக்கத்தான் அப்பாவந்தார்...”

“அப்படியா அந்த ஒரு சீட்டு ?”

“லூசு நம்ம கூட்டம் ஜாஸ்திய இருக்குறதுனால நீதான் கணக்கு விட்டுட்ட.. எல்லாம்சரியாத்தான் இருக்கு” என்றாள் ஜெனி..

அவள் லூசு என்று அழைத்தது, அவனுக்கு “ ஐ லவ் யு” என்று சொன்னது போல இருந்தது. உடனே தலைவர் ஸ்டைலில் “ மகிழ்ச்சி” என்றவன் கூறிட அவன் மட்டுமல்ல, அவரவர் மனம் கவர்ந்தவருடன் அமர்ந்திருந்த அனைவருமே மகிழ்ச்சியாய்த்தான் இருந்தார்கள். அந்த இனிமையுடன் நாமும் நினைவுகளுக்கு முற்றுப்புள்ளி வைப்போமா?

-முற்றும்-

ஹாய் நண்பர்களே..! “நினைத்தாலே இனிக்கும்உங்களைப்போலவே நானும் இக்கதைக்கு ரசிகையாய் மட்டுமே இருந்தேன். இக்கதை படிக்கும்போது கதையோடு இணைந்து விட்டதுபோலவே ஓர் உணர்வு. ப்ரிஷ்யன், பாலா இருவரின் கைவண்ணத்தில் உருவாகி இருந்த கதை பாதியில் நிற்பதை காண்பதற்கு நெருடலுடன் கவலையாய் இருந்தது.

அதனாலேயே இக்கதையை தொடர முடிவெடுத்தேன். இக்கதையை ஆரம்பித்தவரின் பானியும்,எனது எழுத்து நடையும் வெவ்வேறு என்றாலும் எங்களை ஒப்பிட்டு பார்க்காமல் அனைத்து தோழியரும் வாசகிகளும் ஊக்கமளித்துள்ளீர்கள். அதற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.உங்களது கருத்துகள் மட்டுமே இக்கதையை சாத்தியமாக்கியது.

நினைத்தாலே இனிக்கும்கல்லூரியின் பின்னனியில் அமைந்த கதை என்பதினால் நமது கதாபாத்திரங்களின் திருமணம் வரை இக்கதையை கொண்டு போகாமல் முடித்துள்ளேன். கதை முடிந்தாலும் கதாபாத்திரங்கள் நமது நினைவில் பயணித்து கொண்டுத்தான் இருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம் இக்கதையை எழுதியவரின் கற்பனை ! ஒவ்வொரு கதாப்பாத்திரத்திற்கும் ஒவ்வொரு குணாதிசயத்தை கொடுத்து அவர்களை நமது மனதில் நிறுத்தி வைத்துள்ளார். இக்கதையின் வாசகியாய் அவர்களுக்கு எனது நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். அதேபோல ஜெனி- ஜெனியின் தந்தை உரையாடலில் தந்தை மகள் உறவை அழகாய் கண் முன் நிறுத்திய தோழி பாலாவுக்கும் என் நன்றி. இக்கதையை இருவரும் படிக்க நேரிட்டால்மீண்டும் எழுதத் துவங்க வேண்டும் என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கிறேன். சில பிரச்சனைகளால் நான் சரியான நேரத்தில் பதிவு கொடுக்க முடியாமல் போனாலும் பொறுமையுடன் எனக்கு வாய்ப்பளித்த சில்சீக்கு மிக்க நன்றி :) வாசகர்களே தங்களது எதிர்பார்ப்பை நான் பூர்த்தி செய்திருக்கின்றேனா?என்று தெரிந்து கொள்ள கருத்துகளுக்காக காத்திருக்கிறேன்.நன்றி.

Go to நினைத்தாலே  இனிக்கும் episode # 36

{kunena_discuss:677}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.