“சரி சரி டென்ஷன் ஆகாதிங்க டா.. என் மனசுல மட்டும் அப்படி ஒரு எண்ணம் இருந்தால் போதுமா? அவளுக்கு என்மேல அப்படி ஒரு நினைப்பே இல்லை.. ஏற்கனவேஅவ மனசு புரியாமல் நான் பண்ணதப்பு போதாதா? அவளுக்கு என் மேல காதல் இல்லைன்னா என்ன ஆகிட போகுது டா?நான் எப்பவும் அவகூடத்தானே இருக்க போறேன் ! அவ மனசு மாறினா சந்தோஷம்.இல்லனாலும் பரவாயில்ல”
“பெரிய தியாக செம்மல் பேசுறான் பாரு கதிர்”
“அதானே! என்னடா பேச்சு இது ? நீயே கற்பனை பண்ணி முடிவு எடுப்பியா ப்ரேம்..எனக்கு தெரிஞ்சு சுபியும் உன்னை விரும்புறா..ஆனா அதை அவ இன்னும் உணரல”
“ ப்ச்ச்ச் எனக்காக சொல்லாதிங்க டா.. அப்படி எல்லாம் அவ ஃபீல் பண்ணி நான் பார்த்ததே இல்ல..”
“ஹ்ம்கும் எப்பவும் பாடிகார்ட் மாதிரி கூடவே இருந்தால் அவ எப்படிடா உணருவா? கொஞ்சம் டிஸ்தன்ஸ் கொடுத்தா தானே,நீ இல்லாம இருக்குறது எவ்வளவு கஷ்டம்ன்னு அவளுக்கு புரியும்?”
“ப்ச்ச்ச் அது எல்லாம் தப்பு சந்துரு.. அவளை வற்புறுத்தி பண்ணுற மாதிரி இருக்கும்?
“ஏன்டா, இல்லாத விஷயத்தையா இருக்குற மாதிரி அவளுக்கு உணர்த்த போற நீ? சரி ஒரு பேச்சுக்கு சொல்லுறேன். உங்க ரெண்டு பேரில் ஒருத்தருக்கு திடீர்ன்னு கல்யாணம் ஃபிக்ஸ் ஆகி அதுக்கு அப்பறம் சுபி அவளோட மனச புரிஞ்சுகிட்டா தப்பில்லையா?”. நண்பனின் ஞாயமான கேள்வியின் திகைத்து அமைதியானான் ப்ரேம்.
தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -
சித்ராவின் "நெஞ்சோரமா என் நெஞ்சோரமா..." - காதல் கலந்த குடும்பக் கதை...
படிக்க தவறாதீர்கள்...
“இப்போ என்ன தான் டா பண்ண சொல்லுறிங்க ?” என்று தோற்றுப்போன குரலில் அவன் கேட்க
“ அதெல்லாம் ஐடியா கொடுக்குறதுக்காகவே எனக்கொரு தங்கச்சி இருக்காள். அவகிட்ட கேட்குறேன் “என்றான் சந்துரு.
“ அது யாருடா எனக்கு தெரியாமல் உனக்கொரு அப்பாடக்கர் தங்கச்சி?” என்றான் கதிர்.
“ அடப்பாவி அனுவை தான் டா சொல்லுறேன்..மறந்துட்டியா? இரு இரு அவ கிட்ட போட்டு கொடுக்குறேன்”என்று சந்துரு மிரட்டவும், கதிர் பயந்து கெஞ்ச மூவருமே சிரித்துக் கொண்டனர்.
நாட்கள் அதிவேகமாய் நகர்ந்தது கவீன் மற்றும் நண்பர்கள் அனைவருமே அந்த வருடத்தின் கடைசி பரிட்சையை முடித்துவிட்ட சந்தோஷத்தில் பேசிக்கொண்டு இருந்தனர்.
“ ஷபா இந்த பரிட்சைகள் எல்லாத்தையும் எழுதி முடிக்கிறது, என்னவோ மழை பெய்ஞ்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு” என்றான் கவீன் உல்லாசமாய்.
“ என்ன மோரொம்ப சின்சியரா இருந்த மாதிரி சீன் போடுறியே.. எப்பவும் போல ஜாலியா தானேடா இருந்த நீ?” என்று வாரினாள் அனு.
“ நினைச்சேன் என்னடா என் மாமியார் ரொம்ப அமைதியா இருக்காளேன்னு” என்று வாரினான் அவன் பதிலுக்கு.
“ யாருக்கு யாருடா மாமியார் ?”
“ எனக்கு நீதாண்டி தங்கம் மாமியார்”
“ அனு கேப்ல அவன் உன்னை டீ போட்டு பேசுறான் பாரு” என்று போட்டு கொண்டுத்தாள் நந்திதா.”அட ஏன் மா நீ வேற?”
“ கவலபடாதே அனு நான் இதபத்தி உங்கண்ணா கிட்ட சொல்லிடுறேன். அவர் கவீனை நல்லா கவனிப்பார்” என்று நந்து மேலும் வார, சந்துருவின் கோபமான முகம் அவன் நினைவில் வந்தது.
“ தாய்குலமே ஏதோ ஆர்வகோளாரில் தப்பா பேசிட்டேன். மன்னிச்சிடுங்க” என்று கையெடுத்து கும்பிட்டான் கவீன்.
“ அது எப்படி தல வெட்கமே இல்லாமல் சரண்டர் ஆகுற?”என்று செல்வம் கேட்கவும்
“ எல்லாம் என் ஜெலொவோட ட்ரேய்னிங் தான்” என்றபடி ஜெனியை வம்புக்கு இழுத்தான் கவீன். “அனு, நீ இப்போவே சந்துரு அண்ணாவுக்கு ஃபோன் போடு” .இப்போது இதை சொன்னது நம்ம ஜெனியேதான்.! இப்படியே ஒருவரை ஒருவர் வாரிகொண்டும் கேலி செய்து கொண்டும் இருக்கும் நேரம் அவர்கள் அனைவரையும் ஆடிட்டோரியம் வரும்படி செய்தி வந்தது.
“ எக்சாமேமுடிஞ்சுருச்சு..எல்லாரும் செமஸ்டெர் ப்ரேக்ன்னு வீட்டுக்கு போகப்போறோம்..இந்த நேரத்துல எதுக்கு தல அங்க போக போறோம்?” என்றான் அருண்.
“டேய் எனக்கு மட்டும் என்னடா தெரியும் ? போயித்தான் பார்க்கனும்” என்ற கவீன் அனுவை பார்த்து கண் சிமிட்டினான்.அடுத்த நொடி ஜெனியும் அனுவும் யாருக்கும் தெரியாமல் அவனை பார்த்து பெரு விரல் நீட்டி வெற்றிகுறி காட்டிக் கொண்டனர்.
ஆடிட்டோரியம் சென்றதுமே முன் வரிசையில் இருந்த இருக்கையில் தீப்தியை அமர வைத்தாள் அனு.
“அய்யோ எனக்கு ஏன் அனு கார்னர் சீட்? எனக்கு இங்கம் வசதியா இல்லையே” என்று தீப்தி சொல்லும்போதே, அவள் அருகில் நந்து, ஆரு, அனு, ஜெனி என பெண்கள் அனைவரும் அமர்ந்து இருந்தனர். தற்பொழுது அவளே நினைத்தாலும் கூட அவர்கள் நகராமல் அவளால் அங்கிருந்து நகரவே முடியாது. அதற்கான காரணம் இன்னும் சில நொடிகளில் தெரியப்போவதை அறியாமல் நந்துவிடம் விடுமுறைத் திட்டங்களை பற்றி பேசிக்கொண்டிருந்தாள் தீப்தி.
“நான் கொஞ்ச நாள் அத்தை மாமா வீட்டுல இருப்பேன் தீப்தி,அதற்கப்பறம் ஊருக்கு போயிடுவேன்.நீஎங்க போக போற?”. சோகமான புன்னகையை உதிர்த்தாள் தீப்தி.