(Reading time: 24 - 47 minutes)

ங்க இருந்தாலும் என்ன வித்தியாசம் ? தனியா தானே இருக்க போறேன்? ஹாஸ்டலில் தான் இருப்பேன் நினைக்கிறேன்” என்றாள் அவள்.

“ அதுதான் இல்ல..இந்த செமஸ்டர் ஹாலிடேமுடியுர வரை நீ எங்கள் வீட்டுல தான் இருக்கப் போற..!நான் ஏற்கனவே என் அப்பாகிட்ட பேசிட்டேன்” என்றாள் ஜெனி. ஜெனியா தனது தந்தையிடம் பேசினாள் என்று தோழியர் அனைவரும் சந்தேகமாய் பார்க்க, “ஹேய் எனக்கும் என் அப்பாவுக்கும் நடுவுல ஆயிரம் இருக்கும்.. அதுக்காக என்னோட சின்ன சின்ன ஆசையை கூட நிராகரிக்கிற அளவுக்கு என் அப்பா வில்லன் இல்லம்மா” என்றாள் ஜெனி. தோழியர்கள் இவளின் கூற்றுக்கு பதில் கூறிடும் முன் ஜெனியே தீப்தியிடம்,

“ நான் முடிவு பண்ணிட்டேன் தீப்ஸ்…நீ நோ சொல்லகூடாது” என்றாள். தீப்தி நிச்சயம் இதை ஆமோதிக்க மாட்டாள் என்று மற்ற நால்வரும் நம்பிட அவளோ

“ வரேன் கண்டிப்பா”என்றாள்.

“ குட்..நல்ல பொண்ணு” என்று ஜெனி கண்சிமிட்டிட அவர்களுக்கு நேர் பின்னால்சீட்டில் அமர்ந்திருந்த செல்வம் வராத கண்ணீர் துளியை துடைத்துக் கொண்டான்.

“என்னடா ஃபீலிங்கா?”

“ ஆமா தல.. எப்படி தல,இந்த பொண்ணுங்க அடிச்சுகிட்டா ஒரேடியா அடிச்சுக்குறாங்க, அன்பு காட்ட ஆரம்பிச்சா அடைமழையாய் பொழியுறாங்க?”

“ ஹா ஹா அந்த டெக்னிக் பத்தி தெரிஞ்சிருந்தா நீ இந்த கதையில எப்பயோ ஹீரோ ஆகி இருப்பியே நண்பா!” என்று நக்கலாய் சிரித்தான் கவீன்.மாணவர்களுக்குள் சலசலப்பு அதிகரிக்கும் நேரம் தனது கனீர் குரலை அந்த அறை முழுதும் நிரப்பினார் அவர்களின் லெக்சரர்.

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

பிந்து வினோத்தின் "மலர்கள் நனைந்தன பனியாலே..." - காதல் என்பது இரு மனமுடிச்சு... εїз!

படிக்க தவறாதீர்கள்...

“ டியர் ஸ்டூடண்ட்ஸ், என்னடாஎக்சாம் முடிஞ்சும் நிம்மதியாய் இருக்க விட மாட்டுறாங்களேன்னு எல்லாரும் புலம்புறிங்கன்னு தெரியுது. ஆனா,அடுத்து வர்ர ஒரு மணி நேரம் உங்களுக்கு ரொம்ப சுவாரஸ்யமாய் இருக்கும். அண்மையில் ஒரு பேப்பர்ல “ மிளிரும் தலைமுறை” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது. உங்களுக்கு எல்லாம் தெரியும் நினைக்கிறேன்.சின்ன வயசுலேயே  தொழில்ரீதியில் முன்னேறி கொண்ட் வரும் இளைஞர்களை பேட்டி எடுத்து போட்டு இருப்பாங்க. அவங்களில் ஒருத்தர்தான் இன்னைக்கு இங்க ஸ்பீச் கொடுக்க போறார். மெடிகலுக்கும் அவருக்கும் சம்பந்தம்இல்லைதான்..ஆனால் அவரின் தன்முனைப்பு பேச்சு உங்க எல்லாருக்குமே பயனுள்ளதாய் இருக்கும்ன்னு நம்புறேன். ஓவர் டூ மிஸ்டர் தீரஜ் ப்ரசாந்த்” என்று அவர் வரவேற்கவும் அரங்கத்தில்மாணவர்களின் கைத்தட்டல் பலமாய் ஒலித்தது. 1000 வாட்ஸ் மின்சாரம் உடலில் பாய்ந்தது போல சிலிர்த்து போயிருந்தாள் தீப்தி.பலநாட்களுக்கு பின் அவனை காண்கிறாள். அவன் காலடியை விட அவளின் இதய துடிப்பு சத்தம் வேகமாய் கேட்டது. தனக்கும் அவனுக்கும் இடையே இருந்த பனிப்போர் மறந்து போய்விட,அவனையே பார்த்துகொண்டிருந்தாள் அவள்.

வழக்கம்போலவே அதே கம்பீரத் தோற்றம். பார்ப்பவர்களின் கவனத்தை தன் வசம் ஈர்த்திடும் அளவு நேர்த்தியாகத்தான் இருந்தான்.. ஆனால் ஜீவனே இல்லாத அவனின் விழிகளும், நான்குநாள் தாடியும் அவளுக்கு ஆயிரம் கதைகளை கூறிக்கொண்டு இருந்தது. வழக்கம் போலவே குறும்பான பேச்சு பானியில் உரையை தொடங்கியவன் பார்வையை இங்கும் அங்கும் சுழல விட்டு தீப்தியை கண்டுகொண்டான்.சற்று முன் அவன் விழிகளில் காணாமல் போயிருந்த ஜீவன் இப்போது திரும்ப வந்திருந்தது. அவன்மீது கோவமாய் இருப்பதையே மறந்து சிலநொடிகள் இமைக்காமல் பார்த்தவள்,பழசெல்லாம் நியாபகத்திற்கு வரவும்,முகத்தை திருப்பி கொண்டாள். அவர்களின் பார்வை பரிமாற்றங்களை கவனித்த கவீன்,இவள் முகத்தை திருப்பிக்கொள்ளவும்

“ ஹும்கும் மறுபடிய்ம் வேதாளம் வெங்காய லாரி ஏறுதே! யப்பா, தீரஜ் இனிமே நீயாச்சு, உன் ஆளாச்சு” என்று மனதிற்குள் கூறிகொண்டான். தன்னைப் பற்றி அறிமுகம் செய்து கொண்ட தீரஜ் தான் கடந்து வந்த தடைகளை ரசிக்கும் வண்ணம் அனைவருக்கும் கூறினான். இடையிடையேஅவனுக்கு தோன்றிய கருத்துகளை பகிர்ந்து கொண்டான். தீப்தி முகத்தை திருப்பி கொண்டதை உணர்ந்தவன் அதற்குப்பின் அவள்பக்கம் திரும்பவே இல்லை.. ஆனால், தீப்தி அவன் வசம் கட்டுண்டு கிடந்தாள். அவனின் தோற்றம்,குரல், பேச்சு, புன்னகை என ஒவ்வொன்றையும் ரசித்தாள்.

பேச்சின் இறுதி கட்டத்திற்கு வந்த தீரஜ் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தனது மனதில் இருந்ததை கூறினான்.

“ வெற்றிக்கு நல்ல உடல் ஆரோக்யமும்,  சிந்தனையும் மட்டும் இருந்தால் போதாது. நம்ம மனசும் சந்தோஷமாய் இருக்கனும்.. நம்ம  மனசு எப்பவும் நிம்மதியாய் இருக்கனும்.. அப்போதுதான் ஆக்கத்திறன் கொண்ட சிந்தனைகள் வரும். மனசுல இருந்து பொறாமை, பகை, கோபம் போன்ற உணர்வுகளை போக்கிக்கனும்..எதிரிகளை நேசிக்க முடியாமல் போனாலும் வெறுக்காமல் இருக்க கற்றுக்கனும்..எப்போதும் மன்னிப்பதற்கு தயாராய் இருங்கள் ! உலகத்தில் எல்லாஉயிரினிமும் எதாவது ஒரு சூழ்நிலையில் தப்பு பண்ணிட நேரிடும். அந்த தப்புகளை மட்டுமே ஒரு பெரிய விஷயமாய் பார்த்து, சின்ன சின்ன சந்தோஷங்களை இழந்திடகூடாது. சில நேரம் மன்னிப்பு என்பது தப்பு பண்ணவங்களுக்கு மட்டும் அல்ல,நமக்குமே அது இன்னொரு வாய்ப்புதான்”என்றான் உருக்கமாய். தீப்தியின் இரு விழிகளும் கண்ணீர்த்துளிகளை உதிர்த்தன. அவன் உரையை முடித்து கொள்ளவும் மீண்டும் அந்த லெக்சரர் பேசினார்.

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.