(Reading time: 23 - 46 minutes)

11. என்னுள் நிறைந்தவனே - ஸ்ரீ

Ennul nirainthavane

முன் பனியா? முதல் மழையா?
என் மனதில் ஏதோ விழுகிறதே..!
விழுகிறதே! உயிர் நனைகிறதே....!
புரியாத உறவில் நின்றேன்!
அறியாத சுகங்கள் கண்டேன்!
மாற்றம் தந்தவள் நீதானே!

மனசில் எதையோ மறைக்கும் கிளியே!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே!
கரையைக் கடந்து நீ வந்தது எதுக்கு?
கண்ணுக்குள்ளே ஒரு ரகசியம் இருக்கு!
மனசைத் திறந்து சொல்லடி வெளியே.....!

என் பாதைகள், என் பாதைகள்
உனது வழி பார்த்து வந்து முடியுதடி!
என் இரவுகள், என் இரவுகள்
உனது முகம் பார்த்து விடிய ஏங்குதடி!
இரவையும் பகலையும் மாற்றிவிட்டாய்!
எனக்குள் உன்னை நீ ஊற்றி விட்டாய்!
மூழ்கினேன் நான் உன் கண்ணிலே...!”

காலை உணவை முடித்துவிட்டு அனைவரும் கோவிலுக்கு செல்வதற்காக கிளம்பி தயாராக நிற்க கையில் கார் சாவியுடன் இறங்கி வந்த ராம் மகியை தேடினான்..அவன் பார்வையின் அர்த்தம் புரிந்த தன்வி டேய் பரணி முக்கியமானவங்க வாசல் தோட்டத்துல இருக்காங்க கூட்டிட்டு வாடா என்றாள் சிரிப்பை மறைத்தவாறு..எல்லாம் நேரம் என்று முனகியபடியே வாசலை நோக்கிச் சென்றான் பரணி..அங்கே மகியும் சாக்ட்சியும் ஏதோ பேசிக் கொண்டிருந்தனர்....மகி வாடா கோவிலுக்கு டைம் ஆச்சுல உன் ஆளு வெய்ட்டிங்..ம்ம் போலாம் நா என்றவாறு நடக்கத் தொடங்கினர்.

ராம் மகி பரணி சாக்ட்சி ஒரு காரிலும் பெரியவர்கள் அனைவரும் வேனிலும் செல்வதாய் ஏற்பாடு..ராம் ஓட்டுனர் இருக்கையிலும் மகி அவன் அருகிலும் மற்ற இருவரும் பின்சீட்டில் அமர்ந்தனர்..பேச்சும் சிரிப்புமாய் நேரம் போனதே தெரியாமல் கோவிலை வந்தடைந்தனர்..திருவிடந்தை நித்தய கல்யாண பெருமாள்..வருடத்தில் 365 நாட்களும் திருமணம் நடக்கும் கடவுள்..திருமணம் ஆகாதவர்கள் இங்கு வழங்கப்படும் மாலையை போட்டு கொண்டு பிரதிஷ்டயாக வந்தால் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்,திருமணத்திற்கு பின் தம்பதிகளாக வந்து பிராத்தனை செய்தால் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் என்றும் நம்பப்படும் இடம்..தாயாரை தோளில் தாங்கிய வண்ணம் நின்ற கோலத்தில் இருக்கும் பெருமாளை காண கண்கோடி வேண்டும்..மகிக்கோ மனமே நிறைந்திருந்தது..தன்னவனை ஓரபார்வையால் வருடினாள்..அவனை தனக்கு காட்டிய தன்முன் புன்னகையுடன் இருந்த பெருமாளுக்கு மனமாற நன்றி கூறினாள்..

தொடர்புடையவை: உங்களுக்கு இதுவும் கூட பிடிக்கலாம்... -

சித்ரா.வெ'யின் "கண்களின் பதில் என்ன? மௌனமா?" - அது பேசிடும் நாளும் வந்திடுமா..??

படிக்க தவறாதீர்கள்... 

கோவிலை விட்டு வெளியே வந்தவர்கள் கிளம்ப தயாராக ராம் ராஜியிடம்,அம்மா பக்கத்துல தான முட்காடு நாங்க அங்க போய்ட்டு வரோம் நீங்க கிளம்புங்க,”

சரி ராம் ஆனா சீக்கிரமா வந்துருங்க பாட்டி இன்னைக்கே ஊருக்கு கிளம்புறாங்க..மகி பத்திரம்டா என்றுவிட்டு கிளம்பினார்..நால்வரும் அவ்விடத்தை அடைந்தனர்,ராம் டிக்கெட் எடுப்பதற்காக செல்ல சாக்ட்சி,அண்ணா நா வரலை நீங்க போய்ட்டு வாங்க என்றாள்..

ஏன்டா பயப்படாத வா நல்லாயிருக்கும்..அதான் மகி இருக்கால்ல,

விடுங்க ராம் வரலனா கம்பள் பண்ணாதீங்க..பரணிண்ணா நீங்க அவளுக்கு துணையாயிருங்க..என்றபடி நடக்க தொடங்கினாள்..அவர்களை விட்டு சற்று தள்ளி வந்தவுடன் ராம் மகியிடம்,என்ன குட்டிமா இப்படி பண்ற என்ன நினைப்பாங்க..நீ கூப்டுருந்தா வந்துருப்பா,

அதெல்லாம் வந்துருக்கமாட்டா ப்ளான் பண்ணிதான வரலநு சொன்னா..

என்ன மகி சொல்ற நீ??

அங்கு பரணியோடு காரில் அமர்ந்திருந்தவள் ஏதோ தவிப்புடனேயே இருந்தாள்..மொபைலில் தீவிரமாக ஏதோ பார்த்து கொண்டிருந்தவன் ஏன்ங்க போட்டிங்னா பயமா?ஜாலியாதான் இருக்கும்..ட்ரை பண்ணி பாருங்களேன்..

நீங்க கூட வரீங்கனா எதுவா இருந்தாலும் பயப்படாம இருப்பேன்..என் கூடவேயிருப்பீங்களா??

அதிர்ச்சியாய் ஒரு பார்வை பரணியிடம்..என்ன பேசுறோம்நு தெரிஞ்சுதான் பேசுறாளா..இல்ல நமக்குதான் தப்பா படுதா..அவனை வெகுநேரம் குழம்பவிடாமல் அவளே பேசினாள்..

என்ன பரணி லைவ் புல்லா என் கூடவேயிருப்பீங்களானு கேட்டேன்..?

என்ன கண்டவுடன் காதலா??என்னபத்தி என்ன தெரியும் உனக்கு??குரல் உயர்ந்திருந்ததே தவிர கோபம் இல்லை புரிய வைத்துவிடலாம் என்று எண்ணிணான் போலும்..

லேசாக சிரித்தவள்..இந்த காதல் வந்து 9 மாசம் ஆச்சு..உங்களைபத்தி என்ன தெரியாதுநு வேணா கேளுங்க தெரிய வேண்டியதெல்லாம் தெரியும்..

அவளையே உற்று நோக்கியவன் இது என்ன புதுக்கதை??அந்த அதர்வா உன்ன வச்சு எதாவது ப்ளான் பண்றானா??

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.